கட்டுரைகள்

பக்கம் 29, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2728293031...405060...இறுதிப்பக்கம் »

26. 04. 2011: அறிக்கை வெளியாயிற்று அடுத்தது என்ன?

பலத்த எதிர்பார்ப்புக்கள், எதிர்ப்புக்கள் மத்தியில் நிபுணர் குழு அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வெளிப்படையான விசாரணை ஒன்றிற்கு சிபார் செய்துள்ளது. இதே வேளை சர்வதேச ஊடகக்ங்கள் பல ஆய்வுகளை எழுதிய வண்ணம் உள்ளன. இந்த ஆய்வுகள் இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றது.

26. 04. 2011: அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவோம்-அல் கொய்தா

ஒசாமா பின்லேடன் பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ ஐரோப்பாவில் நாங்கள் மறைத்து வைத்துள்ள அணு குண்டை வெடிக்கச் செய்வோம் என்று அல் கொய்தா அமைப்பு எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் ஆவணத் தகவல் தெரிவித்துள்ளது.

24. 04. 2011: ஐ.நாவுக்கு ஆதரவாக ஏன் தமிழினம் ஓரணியில் திரளக் கூடாது?

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் அநியாயமாகப் பலியாகிய பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்ற உண்மையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. உண்மையில் வன்னி இறுதிக் கட்டப் போரில் ஒலித்த அவலக் குரல்கள் அந்த மக்களுடன் மரணித்து விடவில்லை; சர்வதேசத்தின் மனச்சாட்சியை உசுப்பிக் கொண்டிருப்பதின் சாட்சியாகவே நிபுணர் குழு வடிவமெடுத்துள்ளது. இறுதிக் கட்டப் போரின்போது கனத்த மனதுடன் மனதுக்குள் அழுது புலம்பும் நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்தனர். அந்தளவுக்கு வெற்றிக் கோஷங்கள் தமிழ் மக்களை வாய் மூடி மௌனிகளாக்கியது. இன்றும்கூட அதே நிலைதான். ஆனால் புலம்பெயர் ...

10. 04. 2011: இந்தியாவின் மின்னணு வாக்குப்பொறிகள் பற்றி ஓர் அதிர்ச்சிக் கட்டுரை

இந்தியாவில் அரசு எந்திரங்களின் 'அழகு' பொதுவாகவே நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அரசின் வாக்குப்பதிவு எந்திரம் பற்றி அண்மையில் வெளிவந்துள்ள ஒரு செய்தி இந்தத் தேர்தல் நேரத்தில் திடுக்கிடச் செய்வதாக உள்ளது.

13. 03. 2011: ‘தமிழரசுக் கட்சி’யின் தலைமைத்துவ கனவும் பலியிடப்படும் தமிழர் அரசியலும்’!

நம்மில் பலர் சிறுவயதில் அம்புலிமாமாக் கதைகளைப் படித்திருக்கலாம். அம்புலிமாமாக் கதையில் வரும் வேதாளம், விக்கிரமாதித்திய மன்னனின் கதையில் அதிருப்தியடைந்து மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவதாகச் சிறுவயதில் படித்தது, நம்மில் பலருக்கும் நினைவிருக்கலாம்.

02. 03. 2011: அரசியல் விமர்சனம்: சிங்களத்திடம் புலிகள் முன்வைத்த கோரிக்கை..?

தமிழர்களைத் தொலைப்பதிலேயே கவனம் செலுத்துகின்ற மகிந்த அரசாங்கம் நெருக்கடியான தருணங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமது அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்கு அவர் இத்தகைய உத்தியைக் கையாண்டு வருகிறார்.

02. 03. 2011: தமிழக – தமிழீழ மீனவர்களை பிளக்க முயற்சிக்கும் இந்திய – சிங்கள அரசியல் சதுரங்கம்

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருமாற்றம் பெறுவதற்கு நெடுங்காலம் முன்னரே தமிழீழ மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பும், பாசப் பிணைப்பும் இறுக்கமாக இருந்துவந்தது. இந்த உறவு, யுத்த காலத்திலும் வலிமையாகவே தொடர்ந்தது.

02. 03. 2011: செயற்கைக் கைகளுடன் நான் டொக்டருக்குப் படிக்கலாமா? – ஒரு பிஞ்சின் ஏக்கம் இது…

எனது வாழ்க்கை மிகவும் விரக்தியாகவே இருந்தது. அத்துடன் மாலைவேளையில் நான் திருநகர் மைதானத்தில் ஒரு மணித்தியாலம் வரை உதைப்பந்து விளையாடுவேன். எல்லாம் தடைப்பட்டுப் போய்விட்டது. விரக்தியும் கோபமும் என்னில் நிறைந்து காணப்பட்டது.

28. 02. 2011: அனைத்துலக நாணய நிதியத்தின் கட்டுப்பாட்டில் சிறிலங்கா – வெள்ளப் பாதிப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை

நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தவறிய அரசாங்கம் இன்று அனைத்துலக நாணய நிதியத்துடன் இணைந்து வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட சுமையினை அதே மக்கள் மீது திணிக்க முனைகிறது. ஆசியப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபோது நாணய நிதியம் நிலைமையினை முறைகேடாக்கியது இதுதான் முதல்முறையன்று.

27. 02. 2011: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினது அழைப்பினை எதிர்கொள்ளும் நம்பியார்

2009ம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பர்மாவிற்கான ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான விஜய் நம்பியாரும் உள்ளடக்கப்படவேண்டும் என சிறிலங்காவிற்கான இரண்டு மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.
பக்கம் 29, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2728293031...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.