சிறிலங்காவின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் இராணுவ மயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்தப் பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதுடன், எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்று அனைத்துலக நெருக்கடிகளை ஆராயும் குழு எச்சரித்துள்ளது.
அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு இந்தியாவால் திருத்தப்பட்ட தீர்மானத்தின் நகல் கடந்த வாரம் ஐ.நாவில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அத்தீர்மானத்தை உடனடியாகவே நிகாகரித்த இலங்கை அரசு. இறமையுள்ள ஒரு நாட்டின்மீது அன்நிய சக்திகள் ஆதிக்கம் செலுத்த ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அறிக்கை விட்டிருந்தது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியா தற்போது முன்வைக்கப்படவுள்ள பிரேரனைக்கு சார்பாக வாக்களித்து தனது இருப்பை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான நல்வாய்ப்பை இந்தியா தவறவிடக் கூடாது.
எதற்காக அடிக்கடி வன்னிக்குப் போனீர்கள்..? நீங்கள் கல்வி கற்பதற்கு புலிகள் பணம் வழங்கினார்களா..? புலிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்களா? உங்கள் குடும்பத்திற்கும் புலிகளுக்கும் எந்த வகையான தொடர்புகள் இருந்தன..?
வருது வருது என்று மிரட்டிக் கொண்டிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைபை, ஐ.நா மனித உமைகள் பேரவையில் ஒருவழியாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது.
கதறக் கதறக் கொலைகள் செய்த சிங்கள அரசு முதன்முதலாகக் கதறுகிறது. சாட்சிகளை அழித்துவிட்டால், கேட்பதற்கு நாதி இல்லை என்று நினைப்பில், மிகமோசமான இன அழிப்பு இலங்கையில் நடத்தப்பட்டது.
சிறிலங்கா அரசின் மனிதாபிமான உரிமை மீறல் விவகாரம் தொடர்பாக தனது கண்டனைத்தை வெளியிட்டிருந்த ஆயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்காவில் தற்போது ஆட்சியிலுள்ள கூட்டணி கட்சிகளில் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, நல்லிணக்க ஆணைக்குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தெரிவித்தார்.
அமைதிகாக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் சிறப்புக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் புதிய இழுபறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன.
மேரி கொல்வினின் இடது கண்ணை இலங்கை பறித்தது. அவரது உயிரையே காவு வாங்கி விட்டது சிரியா. எங்கெல்லாம் அரசப் படைகளின் தாக்குதலில் அப்பாவிகளின் அபயக் குரல் கேட்கிறதோ... அங்கெல்லாம் தனது இருப்பைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் கடந்த 23-ம் தேதி கொல்லப்பட்டுவிட்டார்!