கட்டுரைகள்

பக்கம் 30, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »

28. 01. 2011: எரிக் சொல்ஹய்ம் எங்களுக்காக ஏதேனும் செய்யவிரும்பினால் இலங்கை அரசிடம் மட்டும் பேசட்டும்; இனப் பிரச்சினையை தீர்க்குமாறு…!

இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமிடையே மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்கியுள்ளவர்களுக்குமிடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்கான பங்களிப்பைத் தான் ஆற்றமுடியும் என எரிக் சொல்யஹய்ம் கூறியிருப்பது தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கும் என்பதில் ஐயமில்லை.

27. 01. 2011: மீனவர் மீதான தாக்குதலில் ‘மூன்றாம் தரப்பின்’ செயற்பாடு – ஒட்டுக்குழுக்களா…? அல்லது இந்திய உளவு அமைப்பினரா..?

இந்திய மீனவர்கள் கடல் எல்லையை மீறி வந்தாலும் இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள மாட்டார்கள்.  எல்லை தாண்டி வரும் (  அது என்ன எல்லை..?  பாகிஸ்தான் மீனவர்களுக்கு இல்லை இந்த எல்லை..? )  தமிழக மீனவர்களுக்கு மலர்ச் செண்டும்,  தேனும் மீனும் கொடுத்து உபசரிக்கிறது இலங்கை கப்பற்படை என்று சொல்லவேண்டும் இனிமேல்.

27. 01. 2011: ”ஊருக்கே படியளந்த மக்களை சோற்றுக்குக் கையேந்த வைத்துவிட்டார் ஜெயலலிதா!” – சீமான் – திருப்பி அடிப்பேன் 13

''என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்... இலவசம்!'' - குன்றக்குடி அடிகளார்.  ஆனால், 'ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!’ என்கிறார் தன்மானத் தமிழர்களைக்  காக்கப் பிறந்த தலைவர் கருணாநிதி. இலவசங்கள் தொடரும் வரை ஏழைகள் தொடருவார்கள் என்கிற பேருண்மை அந்தப் பெரியவருக்குத் தெரியாதுபோலும்.

27. 01. 2011: நோர்வேயும் நாடுகடந்த தமிழீழ அரசும் சிறிலங்காவில் இழந்ததை சூடானில் பெற்றிருக்கின்றன

சூடானிய நாட்டுப்பற்றுள்ள விடுதலை அமைப்பு மீது நோர்வே அதிக செல்வாக்கினைச் செலுத்திவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு இந்த அமைப்பு அழைப்பினை விடுத்திருப்பதன் அடிப்படையில் நோக்குமிடத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வரவேற்றும் வகையிலே நோர்வே செயல்படுகிறது என எண்ணத் தோன்றுகிறது.

27. 01. 2011: மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டே திரிய வேண்டிய நிலையில் சிங்களம்..?

தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டணியமைத்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாராகின்றன என்ற தகவல் வெளியானதுமே ஆடிப் போயிருப்பது அரசாங்கம் மட்டுமல்ல. இதனால் அரசியல் ரீதியாகக் கொஞ்சமும் பாதிக்கப்பட்டாத ஜாதிக ஹெல உறுமயவும் தான். இந்தக் கூட்டணியைக் கண்டு ஜாதிக ஹெல உறுமயவுக்கு ஏன் உதறல் எடுக்கிறதென்றே தெரியவில்லை.

26. 01. 2011: தமிழர்கள் என்ன இந்தியாவின் குடிமக்களா அல்லது சம்பாதித்து வரிப்பணம் செலுத்தும் அடிமைகளா?

இன்று இந்தியாவின் 62-ஆவது குடியரசுத் திருநாள். இன்றைக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தியப் பெருங்கடலில் தமிழ் மீனவர் ஜெயக்குமார் இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். மீனவர் வீரபாண்டியனின் குருதியால் சிவந்த கடல் நீர் நிறம் மாறுவதற்குள் இதோ மேலும் ஒரு கொலை! வீரபாண்டியன் கொலை பற்றிய செய்தியையே தமிழ்நாட்டின் முன்னணி நாளேடான தினத்தந்தி 10-ஆம் பக்கத்தில்தான் வெளியிட்டது.

26. 01. 2011: எங்களது மீனவர்களை பிசாசுகளா சுட்டுக் கொலை செய்கிறன?

யூலை 2010 முதல் இந்தப் பிராந்தியத்தில் இந்தப் 'பிசாசுகள்' தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடாத்திய தாக்குதல்களின் விளைவாக முப்பது மீனவர்கள் காயமடைந்திருக்கிறார்கள், மீனவர்களிடத்திலிருந்த பெறுமதியான பொருட்களை இந்தப் 'பேய்கள்' பறித்திருக்கின்றன. இவ்வாறு SIFY இணையத்தளத்தில் Nandini Krishnan எழுதிய செய்தி ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். அதன் முழுவிபரமாவது,

26. 01. 2011: காலி இலக்கிய மாநாடு: மீண்டுமொரு புறக்கணிப்பும் சில கேள்விகளும்

கொழும்பில் 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு' என்ற பதாகையில் இடம்பெற்ற நிகழ்வை புறக்கணிக்கும்படி மனித உரிமை மற்றும் மனித கௌரவத்தின் மீதும் அக்கறை கொண்ட புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அறிக்கையொன்றை விடுத்திருந்தனர். பின்னர் அவ்வறிக்கையை எதிர்த்து 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு'க்கான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள சில புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் பிறிதொரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

26. 01. 2011: காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!

அன்புள்ள இயக்குனர் சீமான் அவர்களுக்கு, வணக்கம். 'இனியவளே' படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.

25. 01. 2011: தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு! – ஒரு திறந்த மடல்

வணக்கம். உங்கள் தமிழ் உணர்வை மெச்சுகிறேன். உங்களைப் போன்ற இனப் பற்றாளர்கள் இருப்பதால்தான் தமிழனின் மானம் மொத்தமாகக் கப்பால் ஏறாமல்  கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது!   நீங்கள் கூறிய பல யோசனைகளை சீமான் ஏற்றுக் கொண்டால் அது முதல்வர் கருணாநிதியையும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்குச் சமமாகிவிடும்.
பக்கம் 30, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.