மே 2009-இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நான்காம் கட்ட ஈழம்போரின்போது கட்டவிழ்த்துவிடப்பட்ட போர்க்குற்றவியல் சம்பவங்களில் யார் யார் ஈடுபட்டார்கள் என்கிற பெயர் பட்டியல் வெளிவரத் தொடங்கிவிட்டது. அரச பயங்கரவாதத்தில் ஈடுபட்ட படையதிரிகாரிகள் மற்றும் கட்டளையிட்ட அரச அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலே வெளிவரத் தொடங்கியுள்ளது.
இலைகள் பழுத்தால் நிலத்தில் விழும். பழம் பழுத்தால் வெளவால்கள் விழும் என்று ஊரில் சொல்வார்கள். இலைகள் பழுத்து நிலத்திலேதான் விழுகின்றன. சனங்கள் நொந்தும் கெட்டும் நிலத்திலேதான் வாழுகிறார்கள்.
ஆனால், அரசியல் வெளவால்கள் இப்போது கிடைத்திருக்கும் (பழம் பழுத்திருக்கும்) சூழலில் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, கட்சிகளின் தலைமைப் பீடங்கள், இந்தியத் தூதுவர்களுடன் சந்திப்பு.... என்று ஆலாய்ப் பறந்து விழுந்து கொண்டிருக்கின்றன.
இந்தியா, சீனா, ஈரான், பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் உறவுகளைப் பலப்படுத்தி வருகின்ற போதும் மேற்குலகுடனான உறவு தொடர்ந்தும் சீர்கெட்டு வருகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அங்கு உரையாற்ற முடியாமல் திரும்ப நேரிட்டது.
கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல்துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு.
அதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும்.
‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடித்தது சரிதான்!’ என நவம்பர் 12-ம் திகதி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரமஜித் சென் தீர்ப்பாயம் உறுதிசெய்தது. அதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
“வென்’ தாத்தாவின் (Grandpa Wen) வருகையால் இந்தியப் பெரு முதலாளி வர்க்கம் குதூகலமடைந்துள்ளது. சீனப் பிரதமர் வென் ஜியா பாவ் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் முதலாம் நாளில், சீனாவின் முக்கிய வங்கிகளான சீன வங்கி, சீன விவசாய வங்கி, சீன கட்டுமான வங்கி, கைத்தொழில் வர்த்தக சீன வங்கி போன்றவை இந்திய நிறுவனங்களோடு செய்த ஒப்பந்தங்களே இந்த குதூகலத்திற்கான காரணமென்று கூறலாம்.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக காலத்திற்குக் காலம் நடத்தப்பட்ட தமிழினத்திற்கு எதிரான தாக்குதல்கள் மூலம் உயிரிழப்புகள்,சொத்தழிப்புகள், சொத்துகளைச் சூறையாடல், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வரைமுறையற்ற கைதுகள்,கொலைகள்,உயர்கல்வி வாய்ப்பு பறிப்பு, உத்தியோகப் பறிப்பு..
“பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகிய முக்கியத் தலைவர்களை டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தீர்த்துக் கட்டும் திட்டத்துடன் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுவியுள்ளார்கள்” என்று இந்திய உளவு அமைப்பு அளித்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையிலும் அதன் பின்னான அரசியல் சூழலிலும் சீன – இந்திய நாடுகளின் ஒருங்கிணைவு பலராலும் அவதானிக்கப்பட்டது. இந்த இணைவு இவ்விரு நாடுகளுக்கும் ஒரு பரிசோதனைக் களம் போலவே அமைந்திருந்தது. மக்களையும் மரணங்களையும் கூறுபோட்டு உரிமை கோரிய கொலைக்களம் இலங்கை.
'எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்! என கூட்டத்தில் உரையாற்றியிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலையானார். அவர் சிறையிலிருந்தபோது எழுதிய அதிரடி அனல் கனல் தொடர்.