கரும்புலிகளின் “எல்லாளன் நடவடிக்கை” வெற்றிக்களிப்பில் இருந்த எமக்கு 02.11.2007 அன்று விடியக்காலை தலையில் பேரிடி விழுந்தது. “தமிழ்ச்செல்வனின் இடத்துக்கு அடிச்சிட்டானம்” என்ற காற்று வழிச் செய்தி கேட்டு பறந்தோடிப் போன எமக்கு தோழர்களுடன் சேர்ந்து தன் மூச்சையெல்லாம் எம்மிடம் தந்துவிட்டு விடுதலை மூச்சாகிப்போன எம் தமிழ்ச்செல்வத்தைத் தான் கண்டோம்.
ஒரு நூல் நிலையம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது. இது மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் கூற்று. ஒரு நூலகம் என்பது ஒரு நாட்டினதோ சமூகத்தினதோ அறிவு வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை வகிப்பதுடன் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்ற வாழ்வியல் கூறுகளை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைகளுக்கு கையளிக்கும் பாரிய பொறுப்பையும் மேற்கொள்கிறது.
போர் முடிந்த பின்னர் நீங்க|ள் சொல்வதனையே நாம் செய்வோமென டில்லிக்கு தமாஸ் காட்டினார் மஹிந்த டில்லியும் போர் முடியட்டும் இப்போ புலிகள் அழிவதுதான் எமது இலக்கு என பேசாமல் இருந்தது. ஆனால் புலிகளை முடித்த பின்னர் தம் அடுத்த திட்டமான இலங்கையினை கையிற்குள் போடும் திட்டம் தடம்புரண்டு போவதனை டில்லி பார்த்துக்கொண்டே பதறுகின்றது.
குடாநாட்டில் இப்போதெல்லாம் இளவயதுக் கருத்தரிப்புகள் பற்றிய செய்திகளையும். குப்பைத் தொட்டிகளுக்குள் குழந்தைகள் வீசப்படுகின்ற சம்பவங்களையும் பத்திரிகைகளில் அடிக்கடி பார்க்கமுடிகின்றது.
அண்மையில் கூட பள்ளிப்படிப்பை இன்னும் பூர்த்தி செய்யாத மகளுக்கு தாய் ஒருவர் திருமணம் செய்து வைத்த சம்பவத்தை நீங்கள் அறிய நேர்ந்திருக்கலாம்.
தமிழீழம், மாவீரர்கள், தமிழ்த்தேசியம், துரோகி என்ற சொல்லாயுதங்கள் மூலம் மோதிக் கொண்டு தனது இனத்தையே ஏமாற்றும் தமிழினம்...............?
இன்று தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் தமிழர்களிடம் ஒற்றுமை வேண்டும் என்பதை சகலரும் உணர்ந்துள்ளனர், ஆனால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அவர்களால் ஒற்றமைப்பட முடியாதுள்ளது.
கருத்துச் சுதந்திரம் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுக்கும் சுதந்திரமாக இருக்க முடியாது?
ஈழத் தமிழினத்தின் 21ம் நூற்றாண்டின் தாயக விடுதலைப் போராட்டத்தின் சர்வதேச அரசியல் வடிவமாக உருவாகியதே நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சி. இதனை அறிவு சார் புலமை பெற்றோர் அடங்கிய குழு வழங்கிய ஆலோசனைக்கு அமைவாகவே புலம் பெயர் தமிழர் சமூகம் வரவேற்றுச் செயற்படுத்தி வருகிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உட்பூசல் 2009 மே 19க்குப் பின்னர் புலத்தில் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் முடக்க நிலைக்குத் தள்ளிவிட்டது.
கடந்த அறுபது வருடங்களாக ஈழத் தமிழ் மக்களை பிரதநிதித்துவப் படுத்திய அரசியல் தலைமைகள் தாங்கள் சரியென்று நம்பிய ஒரு வழியால் பயணித்து வந்திருக்கின்றன.
அந்த காலகட்டத்தின் நமது தலைமுறைகளும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அவற்றுடன் இணைந்து நின்றிருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் என்ற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகிய இருவரின் பெயர்களும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தனர் சென்னையில் உள்ள சிறப்பு 'தடா' வழக்கு நீதிமன்றத்தால்., மேலும் 'தி டைம்ஸ் ஆப் இந்தியா'
நாளிதழில், இன்று வெளிவந்த செய்தியில் தெரிவித்துள்ளனர்.
உள்ளுராட்சித் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை அவசரமாக அரசு நிறைவேற்ற முனைவது ஏன்?
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் விடயத்தில் அரசாங்கம் வேகமாகக் காய்களை நகர்த்தி வருகிறது.
போர் முடிவுக்கு வந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது எனக் கூறப்பட்டாலும் கூட, அரசாங்கத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போர் உச்ச கட்டத்தில் இடம்பெற்ற காலத்தை விட அதிகளவு தொகை பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.