எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களே!
தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், தமிழீழ தேசத்தின் சுதந்திரத்திற்காகவும் தம் இன்னுயிரை ஈகம்செய்த மாவீரர்களை நினைவுகூரும் வாரமாகும்.
மாவீரர் வாரம் இன்று ஆரம்பிக்கிறது. புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் வழமைபோல மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்காக அந்தந்த நாடுகளில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கோடான கோடி இதயங்களில் குடிகொண்டு மரணத்தையே வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கைகளே மாவீரர்கள். கடந்த வருடத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மரணித்த மாவீரர்களின் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசித்து வழிபட வேண்டும்.
இலங்கை இனப்பிரச்சினையின் 13வது திருத்தம் - பகுதி 2
சமஷ்டி அரசாங்க முறையில் மூன்றாவது முக்கிய விடயம் கூட்டு அதிகாரம் ஆகும். இக்கூட்டு அதிகார அலகே மத்திய அரசு என்று அழைக்கப்படுகின்றது. இக் கூட்டு அதிகாரக் கட்டமைப்பில் தேசிய இனங்கள் சமத்துவமாக பங்குபற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றது. குறிப்பாக மாநிலங்களுக்கு கூட்டு அதிகாரக் கட்டமைப்பில் அதாவது மத்திய அரசில் சம அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலமே இது பூர்த்தி செய்யப்படுகின்றது.
ஈழ மண் ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கிக் கொண்டிருந்த சமயம் எதிரிக்கு ஆப்பு வைக்குமாற் போல் பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது. போர்மேகம் கவிந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் வீட்டில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த ஜே.வி.பி.யின் எம்.பி.சுனில் ஹன்துன்நெத்தி உள்ளிட்ட குழுவினர் மீது சாதாரண உடை அணிந்த மகிந்தா கட்சியினரும் போலீஸ் கூட்டமும் கல்எறி மற்றும் அழுகிய காய்கறிகளை முட்டைகளை வீசி தங்களது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஒரு காலம் குருதி சிந்தப்பட்ட நிலத்தில் இப்போது கண்ணீர் சிந்தப்படுகிறது.
சிந்தப்படுவதைப் பொறுத்து கண்ணீரும் குருதியும் ஒன்றுதான். இரண்டுக்கும் நிறம்தான் வேறுபடுகிறதே தவிர, அர்த்தத்தில் இரண்டும் ஒன்றுதான். இரண்டுமே துக்கத்தையும் வேதனையையுமே தருகிறது.
போராட்டம் முடிவுக்கு வந்ததாக சிங்கள அரசாங்கம் கூறிக்கொண்ட கையுடன் இந்தியாவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் உலகநாடுகளுக்கு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம். தீவிரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம் இனி தாமதமில்லாமல் அப்பாவித்தமிழருக்கான சரியான அரசியல்த்தீர்வு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதாகும்,
''ஐ.நா.செயலரின் ஆலோசனைக்குழுவிற்கு சாட்சியங்களை சமர்ப்பிக்க டிசெம்பர் 15 ஆம் திகதிவரை அவகாசம்''
மானுடத்தின் மீதான வன்முறைகளும் அதன் விளைவான தொடர் துன்பியல் நிகழ்வுகளும் ஏதோவொரு தளத்தில் பதிவு செய்யப்படுவது நிகழ்ந்து கொண்டேதானிருக்கிறது.
1983 யூலைக் கலவரம் நடந்த போதெல்லாம் தமிழகத்தின் மாநிலச் செய்திகள், மாகாணச் செய்திகள், ஆகாசவாணி இவற்றுக்காக வானொலி முன் காத்திருக்கும் மரபொன்று எம்மிடம் இருந்ததை மறந்துவிட முடியாது.