கட்டுரைகள்

பக்கம் 44, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...4243444546...506070...இறுதிப்பக்கம் »

19. 10. 2010: கனடா, அவுஸ்ரேலிய நாடுகளின் கூட்டுச் சதியினால் திருப்பி அனுப்பப்படும் ஆபத்தில் தாய்லாந்தில் கைதான தமிழர்கள்?

இந்த சுற்றிவளைப்புத் தேடுதலின் பின்னணியில் தாய்லாந்து மட்டும் இருக்கவில்லை. ஏனென்றால் தாய்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் பல வருடங்களாகவே இருந்து வருகின்றனர். இதுவரை இது போன்றதொரு சுற்றிவளைப்பு நடத்தப்படவில்லை.

19. 10. 2010: துணிச்சலுடன் தன் பேனாவை பயன்படுத்திய ஊடகப்போராளி நிமலராசன்: இரா.துரைரத்தினம்

துணிச்சலுடன் தன் பேனாவை பயன்படுத்திய ஊடகப் போராளி நிமலராசன் படுகொலை செய்யப்பட்டு 10ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வடக்கு கிழக்கில் ஊடக அடக்குமுறை பல தசாப்தங்களாக தொடர்கின்ற போதிலும் நிமலராசன் படுகொலையுடன்தான் ஊடகவியலாளர்களை படுகொலை செய்யும் கலாசாரம் மேலோங்கியது எனலாம்.

19. 10. 2010: சிறையோடு கழிந்து போகுமா சரத் பொன்சேகாவின் எதிர்காலம்?

சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கத்தில் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

19. 10. 2010: ‘வென்றவனும், வெல்பவனும் வைத்ததுதான் சட்டமும் நியாயமும்’

ஆஸ்ட்ரேலியாவிற்கு அறிவுரை வழங்கும் மனித குல எதிரி! ‘வென்றவனும், வெல்பவனும் வைத்ததுதான் சட்டமும் நியாயமும்’ என்கிற ஃபாசிஸ்ட் சிந்தாந்தம் ஆளுகிற இன்றைய பன்னாட்டு அரசியலில் மானுடத்திற்கும், மனித தன்மைகளுக்கும் மரியாதை தேடுவது பைத்தியக்காரன் செயல்தான்.

18. 10. 2010: குழு மோதல்களின் ஆடுகளம் ஆகிவிட்ட நாடு கடந்த அரசாங்கம் – கோபி

நாடுகடந்த அரசாங்கம் அமைப்பது பற்றிய செய்திகள், கருத்துகள் மற்றய ஊடகங்களில் வெளிவர ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அக்கட்டமைப்பின் அவசியம் பற்றியும், நாடுகள் மட்டத்தில் சனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்படக்கூடிய கட்டமைப்புகள் அமைப்பது பற்றியும் ஒரு பேப்பர் பல கட்டுரைகளை வெளியிட்டு வந்தது.

17. 10. 2010: சீனாவின் உளவாளியாக மாறுமா சிங்களத்தின் சர்வதேச உளவுப் பிரிவு?

இந்தியாவின் ‘றோ’ ,அமெரிக்காவின் சி.ஐ.ஏ. போன்று, சர்வதேச புலனாய்வு அமைப்பொன்றை சிங்கள தேசம் நிறுவுகிறது. இது நாட்டிக்கு வெளியே இயங்கும் நிறுவனம்.இறுதிப்போரில் நேரடியாகவே தமிழின அழிப்பில் ஈடுபட்ட இராணுவ கட்டளை அதிகாரிகளும், அதற்கு உறுதுணையாக செயற்பட்ட புலனாய்வுச் சிங்கங்களும் வெளிநாட்டுத் தூதரகங்களில் இருந்து, இந்த அமைப்பினை இயக்கப் போகின்றார்கள்.

17. 10. 2010: நாடு கடந்த தமிழீழ அரசு படும் பாடு கண்டு பாராட்டுவதா? பரிதாபப் படுவதா?

புலத்தில் நடக்கும் பதவிப் போட்டியில் நாம் அடித்துக் கொள்ள இலங்கை இந்திய அரசுகளின் சதியும் ஒருசேர தமிழரின் நூறாண்டு கண்டு விட்ட தமிழீழத் தாயகக் கனவு முற்றாகவே கனவாகி விடுமோ என்ற பயம் பற்றிக் கொள்கிறது.  காரணம் ஈழத் தமிழினம் தனது தேசியம் சார்ந்த விடுதலைக்கான குரலை எழுப்பிய வேளை, எம கண்டமோ அல்லது ராகுகால நேரமாய் இருக்கலாமோ என்ற ஐயப்பாடு எனக்கு எழுகிறது.

10. 10. 2010: தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் இன்று: அனைத்துலக தமிழ் பெண்கள் அமைப்பு

அன்பார்ந்த எம் உறவுகளே! ஒக்ரோபர் 10 -தமிழீழப் பெண்கள் எழுச்சிநாள்- குமூகாயத்தில் அடக்கப்பட்டவர்களாகஇ அரசியல் அடிப்படையில் முதன்மையற்றவர்களாகஇ பொருண்மிய அடிப்படையில் தங்கியிருப்பவர்களாகஇ குமூகத்தின் கலாச்சார அழுத்தங்களில் மூழ்கியவர்களாகஇ ஆணாதிக்கத் தளைக்குள் சிக்கியவர்களாகஇ சமயம்இ சாதியம் என்ற வரையறைகளிற்குள் புதைந்தவர்களாகஇ பன்முகப்பட்ட அடிப்படையில் தமது அடையாளத்தை இழந்திருந்த ஈழத்தமிழ்ப், பெண்ணினத்தின் இறுக்கமான குமூகத் தளைகளைத் தகர்த்தெறிந்து மிக மேன்மையான வரலாற்றுப்பாய்ச்சலை நிகழ்த்திய தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதல்வித்து வீழ்ந்த நாள்.

06. 10. 2010: 18 வயதான தமிழ் பெண்கள் இரவுநேரக் கேளிக்கை விடுதிகளில்: நாம் எங்கே செல்கிறோம் ?

அண்மையில் நோர்வே நாட்டின் தலைநகரான ஓசிலோவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தேன்.அங்கு நான் வருவதை எப்படியோ அறிந்துகொண்ட எனது மருமகன் எனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டான், மாமா உங்க லண்டனில அல்ககோல்(alcohol) எல்லாம் சீப்பாமே ! நல்ல வொட்க்கா(Vodka) இருந்தா ஒருபோத்தல் வாங்கிவாறீங்களா நான் காசு தாரேன். எண்ட நண்பர் கேட்டார் அதுதான்.

05. 10. 2010: ஆசியாவில் புதியதொரு பனிப்போர் – சிறிலங்கா யார் பக்கம்?

அண்மைக்காலமாக, சீனாவின் இராணுவ கட்டுமானமும் அதன் அச்சுறுத்தும் பாணியிலான தோற்றமும் அனைத்துலக சமூகத்திற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது என ’சண்டே லீடர்’ என்ற ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த இதழில் வெளியான பத்தி  
பக்கம் 44, மொத்தம் 103 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...4243444546...506070...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.