கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியாவில் இருந்து கொழும்பு சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றார்..நேற்று இரவு வல்வட்டி துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்..
பக்கவாத நோய் மற்றும் முதுமை காரணமாக ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார் எண்பது வயது தமிழ்த் தாய் பார்வதி அம்மையார்..!
வாழ்வின் முக்கியமான காலகட்டமொன்றில் நாம் பயணிக்கும் பாதை இரண்டாகப்பிரியலாம். அதில் ஒன்று எக்களுக்கு மிகவும் பழகமானதாகவும் பலரும் பயணிக்கும் எழிதான பாதையாக இருக்கும்.
இன்னொன்று எங்களுக்கு பழக்கமில்லாத ,கடினமான,பலரும் விரும்பாத பாதையாக இருக்கும்.அந்த இக்கட்டான காலகட்டத்தில் நமக்கு முன் இரண்டு தெரிவுகள் இருக்கும்.
இந்து சமுத்திரம் இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானது என்ற நிலையினை இனிமேலும் ஏற்றுகொள்ள முடியாது என்ற பலமான கருத்துடன் சீன வெளியுறவு கொள்கை சிந்தனையாளர்களும் மிக முக்கியமான பாதுகாப்பு ஆலோசகர்களும் காலாகாலம் தொடர்ச்சியான பரிந்துரைகள் செய்து வந்தனர்.
'யாழ்ப்பாணத்துக்கும் வதந்திக்கும் நீண்டகால நட்பு' என்று சொல்லப்படுவதுண்டு. இப்போது யாழ்ப்பாணத்தில் ஆட்கடத்தல் பற்றிய கதைகள் அளவு கணக்கில்லாமல் விதவிதமாக எங்கும் உலாவுகின்றன.
இந்தக் கதைகளை தாராளமாகச் செய்திகளாக்கி பத்திரிகைகளும் போட்டுத் தள்ளுகின்றன. அல்லது அவை பரபரப்பூட்டியே தங்கள் விற்பனையை அதிகரிக்கின்றன.
கடந்த வருடம் மேமாதம் தாயகத்தில் நிகழ்தேறிய பேரழிவின் பின்னர் புலத்துவாழ் தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்புக்கள் புதியதோர் பரிணாமத்தில் பிரவேசிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான மாற்றமானது தமிழீழ தேசிய தலைமையின் விருப்புகளுக்கு அமைய - அவரின் வழிகாட்டலுக்கு அமையவே - நிகழ்த்தப்பட்டது. அதன்படி புலத்து வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
என் இனிய ஈழத்து புலம்பெயர் உறவுகளே! உங்களிடமிருந்து ஒரு விடையத்தை அறிந்து தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன்!...
உயிரினும் மேலான ஈழப்போராட்டத்தை, பயங்கரவாதமாகச்சித்தரித்து, உலக அரங்கில் தமிழருக்கு அவப்பெயர் உண்டாவதற்கும். பெருத்த பின்னடைவு உயிர் அழிவுகளுக்கும் எடுகோலாகி, உலகம் முழுவதையும் திசைதிருப்பி பெருத்த பிரச்சாரம் செய்து, வரலாற்றில் மறக்க முடியா வடுவையும் "வலியையும்" ஏற்படுத்தி, ஜீரணிக்க முடியாத கொடுமையான சதியை, திட்டமிட்டு தமிழர் மீது கொட்டி மண் போட்டவர்கள் எவர்?...
வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன்.
அமிதாப் பாச்சான் தனது சிறீலங்காவிற்கான விஜயத்தை ரத்து செய்தது மற்றும் சின்னத்திரையுலக நட்சத்திரங்கள் மே மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் வவுனியா என இரண்டு இடங்களில் மேற்கொள்ளவிருந்து கொண்டாட்டங்களை ரத்து செய்தது என கடந்த இரண்டு வாரங்களிற்குள் இந்தியக் கண்டத்தையே ஆட்டிப்போடும் திரையுலகின்.......இரண்டு பெரிய தளங்களும் தமிழினப் பற்றுக்கு அடங்கிப்போயிருக்கின்றன.
ஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை.
ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க அழிக்கப்படதான ஒரு நிகழ்வு சுமார் ஒரு வருடத்தின் முன்னர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம் ...என்றால் என்ன..? சுமார் ஒரு பதினாறு நாடுகள் அல்லது அதற்க்கு சற்று ஏறக்குறைய சில நாடுகளை சேர்த்து உருவாக்கிய ஒரு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு..இதில் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் முக்கிய தலைமைப் பாதிரியார்கள் .. இதில் உள்குத்தாக பிரிட்டன் ( பிரிட்டன் பின்னால் நிற்கும் அமெரிக்கா ) யூரோ என்ற பண மதிப்பை அனுமதிக்க கூடாது என்று ...சில காலம் போராடிப் பார்த்தது பிரிட்டன் கூட்டணி ....தவிர்க்க இயலவில்லை..