இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் சதி ஒன்று அங்கு இடம்பெறத் தயாராகிக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. குறிப்பாகக் கிழக்கைக் குறிவைத்து இந்த சதி அரங்கேற இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. கிழக்கில் ஒரு தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நகர்வுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி. கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம். ஆம். பத்திரிகையாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம். ஊடகவியலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நின்று கோஷமிட்டனர்.
2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
'தராக்கி' மற்றும் 'எஸ்.ஆர்' ஆகிய புனைபெயர்களில் பல ஆக்கங்களை எழுதி வந்த இவர், ஆங்கில ஊடக மூலமே தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்திய போதிலும், பிற்காலத்தில் தமிழிலும் பரவலாக எழுதி வந்தார்.
ஈழத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஊடகப் பரப்பில் தவிர்க்க முடியாது நினைவுக்கு வருகின்ற ஒருவர் 'தராக்கி" டி.சிவராம்.
தேசிய விடுதலைப் போராட்டத்தில் பல ஊடகவியலாளர்கள் களப்பலி ஆகியுள்ள போதிலும், அவர்களுக்கு முன்னோடியாக, கவர்ந்திழுக்கும் சக்தியாக அமைந்தவர் அவரே.

தங்களின் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றிகள் உறவுகளே!
இந்தியாவின் குடிமகன் விஜய் அவர்களைப் போன்றவர்கள் அங்கு மட்டுமல்ல இலங்கையிலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் இருக்கின்றார்கள். அவர்கள் வலிகளை உணராதவர்கள். அல்லது அடிமைப்பட்டு வாழ தயாரானவர்கள் பழ்கிக் கொண்டவர்கள். இவர்கள் அந்த வலிகளை உணரும் போதுதான் மாறுவார்கள் போல் தோன்றுகின்றது.
தமிழக உறவ்களே உங்கள் உணர்வையும் ஆதரவையும் மதிக்கின்றோம், என்றுமே மறவோம்!
முத்துக்குமார் ஒருவனே போதும் தமிழக உறவுகளின் தமிழுணர்வை புரிந்துகொள்ள.
விஜய் போன்றவர்களை திட்டித்தீர்ப்பதை விடுத்து நாமேனும் உணர்வுடன் எழுவோம்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
என்றும் அன்புடன்…
பருத்தியன்
உங்களில் ஒருவன்
தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. முதல் 30 வருடகால அகிம்சைவழிப் போராட்டங்களோடு தொடர்ந்த தமிழர்களின் போராட்டம் பயனற்றுப்போக பொறுமையிழந்த நிலையில் அடுத்தகட்டமாக ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது.உலகமே வியக்கும் வகையில் எழுச்சிபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் புலிகளின் தலைமையில் கடந்த வருடம் 2009 மே 18 வரை தொடர்ந்தது.
இண்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் யூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளிநொச்சி நகரில் அமைந்திருக்கும் தேவாலயத்தின் முற்றத்தில் யேசு கிறீஸ்துவினது உருவச் சிலையின் மேற்பகுதி மாத்திரம் விழுந்து கிடக்கிறது. இந்தச் சிலையின் மொத்த உயரம் 20 அடியாக இருந்திருக்கும்.
இந்த உருவச்சிலையின் உடைந்த பகுதிகள் தேவாலய முற்றத்தில் எப்படி வந்தது என எவருக்கும் தெரியாது. ஆனால் சிறிலங்கா அரச படையினர் இதனைக் கொண்டுவந்திருக்கலாம் என தேவாலயத்தின் பிரதான மதகுரு அருளானந்தம் கருதுகிறார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் (80 வயது) என்ன குற்றம் செய்தார் என்று கூறாமலே நடு இரவில் சென்னை வானூர்தி நிலையம் வந்தடைந்தவுடன் தரை இறங்கவிடாமலே திரும்பவும் மலேசியா நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள் இந்திய வல்லாதிக்க ஆட்சி.
சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இத்தேர்தலில் பல்வேறு இனங்களினது வாக்களிப்பு நடத்தை ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அதேவேளை, எதிர்பார்ப்புக்களிலிருந்து பெரிய விலகல்களையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தவில்லை.
தேர்தல் முடிவுகளை தமக்கு சாதகமாக்க வேண்டும் என்பதற்காக பிரதான கட்சிகள் எல்லாம் வியூகங்களை வகுத்திருந்தன.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எழுச்சி தற்போது மூன்றாவது கட்ட எழுச்சியாய் அமைந்துள்ளது. கொழும்பின் முன்னணி ஊடகமான Daily Mirror பத்திரிகை ஏப்பிரல் மாதம் 10ஆம் திகதி 'தேசியவாதத்தின் எழுச்சி' என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்று எழுதியிருந்தது.