விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பதற்காக அவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட சில விடயங்களை மறப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாமல் உள்ளது. அதில் ஒரு விடயம் கலாசாரச் சீரழிவை அவர்கள் கட்டுப்படுத்திய விதமாகும்.
தமிழர் நலன்கள் குறித்து இந்திய பாராளுமன்றத்திலும் பேச்சு..! தமிழக சட்டசபையிலும் பேச்சு...! பிரபாகரன், வேலுப்பிள்ளை திருவேங்கடம் தொடர்ந்து பார்வதி அம்மையார்..இவர்களை வைத்து அரசியல் நடத்தும் கருணா மற்றும் பார்ப்பனிய சோனியா கும்பல்..!
வகைப் பிரச்சாரம் பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டது தமிழ் நெற் ஆசிரிய குழுமத்தின் வன்மமும் வக்கிரமும்.
ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது.
இதில் வெட்கப்பட எதுவுமில்லை.
வண்ணத்தொலைக்காட்சி என்றால் வரிசையில் நிற்கிறோம்,
வாக்குக்கு பணம் என்றாலும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூடுதலாய்க் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறோம்.
கடந்த 8 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் மேற்குலகம் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சிறிது காலம் கிடப்பில் போடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது அல்லது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றின் மூலம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அது மிகையாகாது.
கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதி நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீளுறுதி வாக்கெடுப்பின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வலுவுடமையை இன்றைய காலகட்டத்தில் பரிசோதிப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியினைத் தழுவியுள்ளது. அவ் அணியால் ஓர் ஆசனத்தைதைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இவ் அணி இரண்டு ஆசனங்களைப் பெறும் என்ற பொதுவான கணிப்பீடுகளுக்கு (பொங்கு தமிழ் முத்துக்குமார் உட்பட) மாறாக ஒரு ஆசனத்தைக்கூடப் பெறத் தவறியிருக்கிறது. மொத்த வாக்குகளில் ஜக்கிய தேசியக் கட்சியினை விட பின் தங்கியிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போதைய சிறிலங்கா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ”எந்தவழியை” பயன்படுத்தியேனும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு. குறிப்பிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கப்படுவார்கள் என்று கூட அமெரிக்கா உயரதிகாரி ஒருவர் அண்மையில் கருத்துவெளியிட்டிருந்தார். இவ்வாறான பின்னனியில் சிறிலங்கா அரசியலின் உள் நிலமைகள்பற்றி ஆராய்கிறார் நாலக குமாரசிங்க.
வரலாற்றில் எங்கேயும் இல்லாத எழுச்சி, தமிழீழத்தில் பதிவு செய்யப்பட்டது. வீழ்கிறோமா, எழுகிறோமா என்பதல்ல. இதில் ஏதாவது ஒன்றுதான் நடைமுறையாகும். ஒவ்வொரு நிலையிலும் ஏதோ இரண்டு இருக்கும். அதில் ஒன்றையே வென்றெடுக்கமுடியும்.
முள்ளிவாய்காலின் வீழ்ச்சி, தமிழர் கூட்டுமன நம்பிக்கையின் வீழ்ச்சிதான். அதுவரை மனதில் நிறைந்திருந்த புறநானூற்றுப் பெருமை வழிந்துபோக, பெரும் மன உளைச்சலும், எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கையும், அச்சமும், கூட்டுமனங்களில் உறைந்திருந்தது. அரசியல் தலைமையின் வெற்றிடத்துள் இருள் திரட்சியாக இறங்கியிருந்தது.