வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக தாயகம் - ஆனால் அது 1931இல் இருந்து டி.எஸ். செனநாயக்காவின் சிங்களமயமாக்கும் திட்டத்தால், அதன் பின் வந்த அரசாங்கங்கள் எல்லாம் திட்டமிட்டு சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கின்றன.
இப்போ கிழக்கு மாகாணம் 35 – 40 வீதத்திற்கு மேற்பட்ட நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குள் போய்விட்டது. மேற்கத்தேய நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் 1983 ஆண்டுகளில் இருந்து தமது நாட்டின் உண்மையான நிலைமையை உணராதவர்களாகவே உள்ளனர்.
திருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம்.
அதிலும் - தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம்.
"தனி நாடு" பற்றிப் பேச முடியாத ஆறாவது சட்டத் திருத்தத்திற்கு கீழ் தான் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பு.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.
இலங்கை தமிழ் அரசியலிலே சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல அரசியல் கட்சிகள் உருவாகின. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தலைமையில் அக்காலப் பகுதியில் 50ற்கு 50 கேட்டு வாதாடியவர். பின் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து ஓர் மந்திரிப்பதவி எடுத்து தமிழ் சனத்தொகையின் 40வீதமான மலையக மக்களின் வாக்குரிமை, பிரசாஉரிமை ஆகியவை பறிக்கப்படும் சட்டத்திற்கு ஆதரவளித்தார்.
தற்போது நடைபெறுகின்ற தேர்தல்கள் வலிந்து நடைமுறைப்படுத்தப்படும் திசை திருப்பும் தந்திரோபாயங்கள் என்றாலும், இந்த சூதாட்டம் எதைநோக்கி செல்கிறது என்பதை சரியாக விளங்கிக்கொண்டால், தமது அபிலாசைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஈழத் தமிழ் மக்கள் அறிந்துகொள்வார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டது என்பது போன்ற ஒரு குற்றச்சாட்டு புலம்பெயர் ஊடகங்களிலும் வடக்கு கிழக்கு தேர்தல் மேடைகளிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
அத்தோடு த.தே.கூட்டமைப்பு சரணாகதி அரசியலை நடாத்தி வருகின்றது என்ற குற்றச்சாட்டுக்களும், புலம்பெயர் தேசங்களில் ஒரு தரப்பால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஒரு குறித்த நிலப் பரப்பின் மீது தனக்கு மேல் வேறொரு மேலாதிக்கமும் இன்றி, உச்ச ஆளுமையை கொண்டிருப்பதே இறைமை ஆகும்.
தமிழ் பேசும் மக்கள், தமது பூர்வீக தாயகத்தை முழுமையாக ஆளுகின்ற தார்மிக உரித்துடையவர்கள் என்பதே, தமிழ் இறைமை பற்றிய விளக்கமாகும்.
போர் அநேகமாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன என்று தெரிந்து கொண்டிருந்தது அப்போது. ஏனென்றால், புவியியல் ரீதியாக சிறிய ஒடுங்கிய பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட நிலைக்கு மக்களும் புலிகளும் தள்ளப்பட்டு விட்டனர். சர்வதேச ஆதரவுத்தளத்தையும் பெறக்கூடிய நிலையில், போரைத் தணிக்கக் கூடிய நிலையில் நிலைமைகளும் இல்லை. எனவே போர் தன்னுடைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதாவது அது ஏறக்குறைய முடிவுக் கட்டத்துக்கு வந்து விட்டது என்று நிலைமைகளைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தோர் தீர்மானித்தனர்.
உலகத் தமிழர் ஒன்றிணைந்தால் சிறிலங்காவை ஒரு பயங்கரவாத நாடாக உலக நாடுகளினால் அங்கீகரிக்கச் செய்யமுடியும். இதனைப் புரிந்துகொண்டு அடுத்த இராஜதந்திரக் காய் நகர்த்தலை உலகத் தமிழினம் செய்யுமா என்பதில் தான் இது தங்கியுள்ளது. ஈழத் தமிழரின் தேசியக் கோட்பாடும் உலகத் தமிழரின் தணியாத தாகமான சோழன் பறக்கவிட்ட புலிக்கொடி ஐக்கிய நாடுகள் சபையிலும், ஏன் அவன் ஆண்ட இந்தியப் பெருங்கண்டம் அனைத்தும் திராவிடனின் பண்டைய நாகரிகம் மீண்டும் புத்தொளி பெற்று வலம் வரும் என்ற உண்மையான பச்சைத் தமிழரின் தாகம் இவ்வினத்தின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியலின் படிமுறை வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு அங்குலத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களினதும், போராளிகளினதும் உயிர்த் தியாகங்களும் உழைப்பும் இருக்கின்றது.
இன்று - ஆயிரக்கணக்கான வன்னி மக்கள் அடுத்த வேளை உணவுக்காகக் கையேந்தி நிற்கும் அவலமும், ஆயிரக்கணக்கானவர்கள் தமது அங்கங்களை இழந்து ஆதரவற்றிருப்பதும் நாம் இதுவரை பேசிவந்த தமிழ்த் தேசியத்தின் பேரால் தான்.