கட்டுரைகள்

பக்கம் 58, மொத்தம் 107 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5657585960...708090...இறுதிப்பக்கம் »

09. 05. 2010: இலங்கை இனவாதிகளுக்கு சார்பாக யாழ்ப்பாணத்தை உலுக்கும் வதந்திப் பேய்!

'யாழ்ப்பாணத்துக்கும் வதந்திக்கும் நீண்டகால நட்பு' என்று சொல்லப்படுவதுண்டு. இப்போது யாழ்ப்பாணத்தில் ஆட்கடத்தல் பற்றிய கதைகள் அளவு கணக்கில்லாமல் விதவிதமாக எங்கும் உலாவுகின்றன. இந்தக் கதைகளை தாராளமாகச் செய்திகளாக்கி பத்திரிகைகளும் போட்டுத் தள்ளுகின்றன. அல்லது அவை பரபரப்பூட்டியே தங்கள் விற்பனையை அதிகரிக்கின்றன.

08. 05. 2010: தமிழ்தேசியத்தை விட்டு விலகிச் செல்லும் தமிழ்நெற்றை (Tamilnet.com) வழிப்படுத்த வாரீர்!

கடந்த வருடம் மேமாதம் தாயகத்தில் நிகழ்தேறிய பேரழிவின் பின்னர் புலத்துவாழ் தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்புக்கள் புதியதோர் பரிணாமத்தில் பிரவேசிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான மாற்றமானது தமிழீழ தேசிய தலைமையின் விருப்புகளுக்கு அமைய - அவரின் வழிகாட்டலுக்கு அமையவே - நிகழ்த்தப்பட்டது. அதன்படி புலத்து வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

08. 05. 2010: காலத்தின் கட்டாயமாக வலிக்கு மருந்து புலம்பெயர் தமிழீழத்திடமே!!

 என் இனிய ஈழத்து புலம்பெயர் உறவுகளே! உங்களிடமிருந்து ஒரு விடையத்தை அறிந்து தெரிந்துகொள்ள நான்  விரும்புகிறேன்!... உயிரினும் மேலான  ஈழப்போராட்டத்தை, பயங்கரவாதமாகச்சித்தரித்து, உலக அரங்கில் தமிழருக்கு அவப்பெயர் உண்டாவதற்கும். பெருத்த பின்னடைவு உயிர் அழிவுகளுக்கும் எடுகோலாகி, உலகம் முழுவதையும் திசைதிருப்பி பெருத்த பிரச்சாரம் செய்து, வரலாற்றில் மறக்க முடியா வடுவையும் "வலியையும்" ஏற்படுத்தி, ஜீரணிக்க முடியாத கொடுமையான சதியை, திட்டமிட்டு தமிழர் மீது கொட்டி மண் போட்டவர்கள் எவர்?...

08. 05. 2010: ‘அகதி ஊத்தைகளே வெளியேறுங்கள்’: தமிழ் பாடசாலைகள் துரத்திய தமிழ் மாணவர்களுக்கு இடமளித்தது சிங்களப் பாடசாலை

வவுனியாவின் ஏழு முன்னணிப் பாடசாலைகள் 'வன்னியின் ஊத்தைகளே வெளியேறுங்கள்' எனக் கூறி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய நிகழ்வினை விபரிக்கிறார் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கென வவுனியாவின் காமினி மகாவித்தியலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைந்த பாடசாலையின் அதிபர் திரு. ரங்கநாதன்.

06. 05. 2010: மாறிவரும் பொலிவூட்டும் கோடாம்பாக்கமும் தொடர்ந்து நிலைப்பது புலம்பெயர்ந்த தமிழர்களின் கையிலேயே தங்கியுள்ளது

அமிதாப் பாச்சான் தனது சிறீலங்காவிற்கான விஜயத்தை ரத்து செய்தது மற்றும் சின்னத்திரையுலக நட்சத்திரங்கள் மே மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் வவுனியா என இரண்டு இடங்களில் மேற்கொள்ளவிருந்து கொண்டாட்டங்களை ரத்து செய்தது என கடந்த இரண்டு வாரங்களிற்குள் இந்தியக் கண்டத்தையே ஆட்டிப்போடும் திரையுலகின்.......இரண்டு பெரிய தளங்களும் தமிழினப் பற்றுக்கு அடங்கிப்போயிருக்கின்றன.

06. 05. 2010: தமிழீழத்தை அழித்தவர்களை புலம்பெயர் தமிழீழம் பழிவாங்க வேண்டும்!!! மறக்குமா?? மன்னிக்குமா?? பழிவாங்குமா??

ஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை. ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க அழிக்கப்படதான ஒரு நிகழ்வு சுமார் ஒரு வருடத்தின் முன்னர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

02. 05. 2010: ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை கட்டுப்படுத்த முடியாது..! அப்போ….. முள்வேலி முகாம் மக்கள் …சரணடைந்த விடுதலைப்புலிகள் கதி என்ன..?

ஐரோப்பிய ஒன்றியம் ...என்றால் என்ன..?  சுமார் ஒரு பதினாறு நாடுகள் அல்லது அதற்க்கு சற்று ஏறக்குறைய சில நாடுகளை சேர்த்து உருவாக்கிய ஒரு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு..இதில் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் முக்கிய தலைமைப் பாதிரியார்கள் .. இதில் உள்குத்தாக பிரிட்டன் ( பிரிட்டன் பின்னால் நிற்கும் அமெரிக்கா ) யூரோ என்ற பண மதிப்பை அனுமதிக்க கூடாது என்று ...சில காலம் போராடிப் பார்த்தது பிரிட்டன் கூட்டணி ....தவிர்க்க இயலவில்லை..

30. 04. 2010: தமிழ் முஸ்லிம் உறவுகளே கவனம். உங்களை பிளவுபடுத்தும் சதி ஒன்று விரைவில் அரங்கேறப் போகின்றது

இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் சதி ஒன்று அங்கு இடம்பெறத் தயாராகிக்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. குறிப்பாகக் கிழக்கைக் குறிவைத்து இந்த சதி அரங்கேற இருப்பதாகவும் நம்பப்படுகின்றது. கிழக்கில் ஒரு தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நகர்வுகள் இரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல்கள் கசிந்துள்ளன.

30. 04. 2010: செய்தியாளன் செய்தியானான்: ஊடகவியலாளர் சிவராம் பற்றிய நினைவுக்குறிப்பு

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி. கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம். ஆம். பத்திரிகையாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம். ஊடகவியலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நின்று கோஷமிட்டனர்.

29. 04. 2010: ஊடகப் போராளி சிவராமின் ஐந்தாம் ஆண்டு நினைவில்!

2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 'தராக்கி' மற்றும் 'எஸ்.ஆர்' ஆகிய புனைபெயர்களில் பல ஆக்கங்களை எழுதி வந்த இவர், ஆங்கில ஊடக மூலமே தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்திய போதிலும், பிற்காலத்தில் தமிழிலும் பரவலாக எழுதி வந்தார்.
பக்கம் 58, மொத்தம் 107 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5657585960...708090...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.