கட்டுரைகள்

பக்கம் 60, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5859606162...708090...இறுதிப்பக்கம் »

18. 04. 2010: புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பலம் பொருந்திய கட்டமைப்பிலேயே தமிழரின் உரிமைப் பயணம் உள்ளது

கடந்த 8 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் மேற்குலகம் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சிறிது காலம் கிடப்பில் போடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது அல்லது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றின் மூலம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அது மிகையாகாது.

16. 04. 2010: மே 10 2009 தொடக்கம் நாளை வரை – ஒரு பார்வை

கடந்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதி நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீளுறுதி வாக்கெடுப்பின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வலுவுடமையை இன்றைய காலகட்டத்தில் பரிசோதிப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

10. 04. 2010: கஜேந்திரகுமார் அணி ஏன் தோல்வி அடைந்தது?

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியினைத் தழுவியுள்ளது. அவ் அணியால் ஓர் ஆசனத்தைதைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இவ் அணி இரண்டு ஆசனங்களைப் பெறும் என்ற பொதுவான கணிப்பீடுகளுக்கு (பொங்கு தமிழ் முத்துக்குமார் உட்பட) மாறாக ஒரு ஆசனத்தைக்கூடப் பெறத் தவறியிருக்கிறது. மொத்த வாக்குகளில் ஜக்கிய தேசியக் கட்சியினை விட பின் தங்கியிருக்கிறது.

10. 04. 2010: மீண்டும் ‘இடி அமின்’ சிறிலங்காவில் ஆட்சிபீடம் ஏறுகிறார்

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போதைய சிறிலங்கா அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ”எந்தவழியை” பயன்படுத்தியேனும் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு. குறிப்பிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாங்கப்படுவார்கள் என்று கூட அமெரிக்கா உயரதிகாரி ஒருவர் அண்மையில் கருத்துவெளியிட்டிருந்தார். இவ்வாறான பின்னனியில் சிறிலங்கா அரசியலின் உள் நிலமைகள்பற்றி ஆராய்கிறார் நாலக குமாரசிங்க.

08. 04. 2010: நாம் வீழ்ந்தே கிடப்பதற்கு கோழைகள் அல்ல. நமக்குள்ளான ஒற்றுமை சீர்குலைவே உண்மையான இனம் வீழ்வதற்கு காரணமாகியது

வரலாற்றில் எங்கேயும் இல்லாத எழுச்சி, தமிழீழத்தில் பதிவு செய்யப்பட்டது. வீழ்கிறோமா, எழுகிறோமா என்பதல்ல. இதில் ஏதாவது ஒன்றுதான் நடைமுறையாகும். ஒவ்வொரு நிலையிலும் ஏதோ இரண்டு இருக்கும். அதில் ஒன்றையே வென்றெடுக்கமுடியும்.

07. 04. 2010: திக்குத் தெரியாத காட்டில்..!

முள்ளிவாய்காலின் வீழ்ச்சி, தமிழர் கூட்டுமன நம்பிக்கையின் வீழ்ச்சிதான். அதுவரை மனதில் நிறைந்திருந்த புறநானூற்றுப் பெருமை வழிந்துபோக, பெரும் மன உளைச்சலும், எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கையும், அச்சமும், கூட்டுமனங்களில் உறைந்திருந்தது. அரசியல் தலைமையின் வெற்றிடத்துள் இருள் திரட்சியாக இறங்கியிருந்தது.

07. 04. 2010: ஈழத் தமிழ் பேசும் மக்களும், புலம்பெயர் வாழ் தமிழ் பேசும் மக்களும் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டும்

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக தாயகம் - ஆனால் அது 1931இல் இருந்து டி.எஸ். செனநாயக்காவின் சிங்களமயமாக்கும் திட்டத்தால், அதன் பின் வந்த அரசாங்கங்கள் எல்லாம் திட்டமிட்டு சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கின்றன. இப்போ கிழக்கு மாகாணம் 35 – 40 வீதத்திற்கு மேற்பட்ட நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குள் போய்விட்டது. மேற்கத்தேய நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் 1983 ஆண்டுகளில் இருந்து தமது நாட்டின் உண்மையான நிலைமையை உணராதவர்களாகவே உள்ளனர்.

06. 04. 2010: தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…

திருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் - தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம். "தனி நாடு" பற்றிப் பேச முடியாத ஆறாவது சட்டத் திருத்தத்திற்கு கீழ் தான் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பு.

05. 04. 2010: ராஜீவ் கொலை – நளினி விடுதலை – தடை என்ன?

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை விடுவிக்க வேண்டும் என்ற சட்ட நடவடிக்கை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்ற கருத்துடையவர்கள் என்று மீடியாக்கள் கூறுகின்றன.

05. 04. 2010: தமிழ் தேசியமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பற்றிய அறிக்கை ஒரு அலசல்

இலங்கை தமிழ் அரசியலிலே சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பல அரசியல் கட்சிகள் உருவாகின. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தலைமையில் அக்காலப் பகுதியில் 50ற்கு 50 கேட்டு வாதாடியவர். பின் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து ஓர் மந்திரிப்பதவி எடுத்து தமிழ் சனத்தொகையின் 40வீதமான மலையக மக்களின் வாக்குரிமை, பிரசாஉரிமை ஆகியவை பறிக்கப்படும் சட்டத்திற்கு ஆதரவளித்தார்.
பக்கம் 60, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5859606162...708090...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.