இலங்கைத்தீவில் தொடர்ந்துவந்த ஆயுத வழியிலான விடுதலைப் போராட்டம் இக்கட்டான நிலையை சந்தித்த நிலையில் இலங்கைத்தீவில் தமிழரின் அடையாளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஐந்து முனைகளில் மகிந்த அரசாங்கம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசிய அரசியல் விடுதலைப் போராட்டமானது ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் பயணிக்கின்றது. விடுதலைபுலிகளின் ஆயுதப்போராட்ட பின்னடைவுக்குப் பிந்தைய காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள பலவீனத்தை பயன்படுத்தி தமிழ் தேசியத்தை அழிக்கவேண்டும் என சிங்களப் பேரினவாதிகள் கங்கணங்கட்டி செயற்படுகின்றனர்.
கடந்த புதன் கிழமை பாகிஸ்தான் - வங்க தேச கடல் எல்லையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கப்பல் ஒன்று நடமாடியதனை கண்ட இந்திய கரையோர காவல் படையினர் அந்த கப்பலை பிடிப்பதற்கு உசார்படுத்தப்பட்டனர். அந்த கப்பல் தலைமறைவாகும் முயற்சியில் ஈடுபட்டது. சரியான அடையாளங்களை தெரிவிக்க மறுத்ததால் அந்த கப்பல் பிடிக்கப்பட்டது.
நிறைய விஷயங்கள் கடந்த பத்து நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. நல்லனவும், அல்லாதனவும். மே 17-க்குப்பின் ஈழமக்கள் தொடர்பாக இந்தியாவில் நடந்த மிக முக்கியமான முன்னேற்றம் கடந்த வாரத்தின் பாராளுமன்ற விவாதம்தான். இதனை நேர்மையான அக்கறை யுடன் முன்னெடுத்த பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இன்னபிற கட்சிகள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.
தேர்தலைப் புறக்கணித்தல் என்னும் மந்திரச்சொல் பொருத்தமானதா? ஈழத் தமிழர் அரசியலில் தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு மந்திரக் கோல் போல பயன்படுத்தப்பட்டு வருகின்றது. புறக்கணிப்பு, சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், சட்டமறுப்பு, கதவடைப்பு போன்ற போராட்ட முறைகள் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து பெறப்பட்ட அம்சங்களாகும்.
அரசியல் விடயங்கள், அணி சேரல்கள், கட்சி மாறல்கள் போன்றவை போகின்ற போக்கைப் பார்த்தால் பெரும் பாலும் இலங்கை எதிர்கொள்கின்ற நிறைவேற்று அதி கார ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்ற கடைசித் தேர் தல் இதுவாகத்தான் இருக்கப் போகின்றது என எண்ணத் தோன்றுகின்றது.
"இந்து சமுத்திரத்தின் முத்து" என வர்ணிக்கப்படும் இலங்கைத்தீவு இரத்தக் குழம்பில் முழ்கியிருப்பதற்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து, அறிய வேண்டியது அவசியம். தெற்கு, தென் கிழக்காசியாவில் மிகவும் பலம் பொருந்திய இடதுசாரி அரசியல் தோன்றி உருப்பெற்ற நாடு இலங்கைத் தீவாகும். ஆனால் அங்கே அந்த இடதுசாரி இயக்கங்கள் முற்றிலும் படு தோல்வி அடைந்துள்ளன. இனப்பிரச்சினையைப் கையாள்வதில் அவர்கள் கைக் கொண்ட நிலைபாடுகள் வரலாற்று வளர்ச்சிக்கு எதிர்க்கணியமாய் அமைந்து விட்டன. இத்தகைய நிலை எவ்வாறு ஏற்பட்டது என் பதை இங்கு நாம் ஆராய வேண்டியது அவசியமாகும்.
உயிரினங்களில் மனத்தை உடையவன் மனிதன், அத்தகைய ஆறறிவுடைய சமூகப்பிராணியான மனிதனில், விரிந்த உளவியல் செயற்பாடு இல்லாமையே மனித உரிமைகள் மீறப்படுவதற்குக் காரணம். வல்ல ஓர் சாரார் பலவகையிலும் நலிந்த இன்னோர் சாராரை அடக்கி, ஒடுக்கி வருவது எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல என சர்வதேச மனித உரிமைகள் சாசனமும் சட்டமும் கூறுகின்றன.
சிங்களப்படைகளால் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொன்றொழிக்கப்பட்ட பிரதேசமான புதுமாத்தளன் பகுதியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த படையினருக்கான நினைவுத்தூபி என்ற பெயரில் தமிழ்மக்களை வென்ற வெற்றிச்சின்னத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைத்தள்ளார்.
தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! இலங்கை அரசின் உறவை நாம் இழக்க விரும்பவில்லை! இலங்கை அரசு ஒரு இறைமையுள்ளது! தற்போது அமெரிக்க அரசியல் வாதிகளின் வாயில் இருந்து வரும் சொற்கள் இதுவாகும்.