முள்ளிவாய்க்கால் இறுதிச் சமருக்குப் பின்னர் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெறுமை நிலை தோன்றியிருக்கிறது.
விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக நம்பியிருந்த மக்கள்- அடுத்து என்ன செய்வதென்ற குழப்பத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
யுத்த கள முனையில் விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் இலங்கை அரசு நினைத்ததைப் போல் அல்லாமல், தமிழீழ விடுதலைப் போர் முன்னரைக் காட்டிலும் உத்வேகமாக பல்வேறு திசைகளிலும் விரிந்து செல்கின்றது.
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, படுகொலைக் காட்சியால் அதிர்ச்சியுற்ற ஐ.நா. சந்நிதானம், அடுக்கடுக்காக ஆட்களையும் அறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறது.
ஐ.நா. மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படுமென்பதை விட, பான் கீ மூனின் தலையைச் சுற்றிய ஒளி வட்டம் சிதைந்து போகக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால், அதன் அரசியல் விவகாரச் செயலாளர் லின் பொஸ்கோ அவசர பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் நெறிப்படுத்தலுடனும், பல்வேறு உலக நாடுகளின் யுத்த வளங்களுடனும் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும், அந்த யுத்த களத்திலிருந்து தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களின் அவலங்கள் 120 நாட்கள் கடந்த நிலையிலும் தீர்ந்தபாடில்லை.
மீண்டும் ஒரு யுத்த களம் நோக்கி அணி திரள வேண்டிய கட்டாயம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்தாத இந்தப் போர் முனையில் எமக்கு இழப்புக்கள் எதுவுமில்லை. எமக்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களையும், தளபதிகளையும், மக்களையும் நினைவில் ஏந்திக் களம் இறங்க வேண்டிய தருணம் இது.
முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
மேற்குலகத்திற்கும் சிறீலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் முரண்பாடுகள் மேலும் மேலும் கூர்மையடைந்து வருகின்றன. கடந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் சிறீலங்கா அரசு ஐ.நாவின் சிறுவர் நிதியத்தின் கொழும்புக்கான பிரதம பேச்சாளர் ஜேம்ஸ் எல்ட்டன் என்பவரின் நுளைவு அனுமதியை இரத்து செய்து அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டிருந்தது.
விடுதலைப் புலிகளுடனான போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை அரசுக்கு மறைமுகமாகத் துணை நின்ற மேற்குலக நாடுகள், இப்போது அதற்கு எதிராகத் திரும்ப ஆரம்பித்துள்ளன.
புலிகளுக்கு எதிரான போரின்போதும்- போருக்குப் பின்னரும் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது பற்றிய ஆதாரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளதே இதற்குப் பிரதான காரணமாகும்.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சிறிலங்காக அரசு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, தொடர்ந்தும் அந்தத் தீவின் சமாதானத்தைத் தோத்து வருகின்றது. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பெற்ற வெற்றி சரித்திரப் புகழ்வாய்ந்தாக இருந்தாலும் அதற்காகப் பெரும் அளவான இரத்தம் சிந்தப்பட்டுள்ளது.
வன்னி அவலங்கள் உச்சக்கட்டத்தை எட்டிய பொழுது புலம்பெயர் தேசங்களில் உறக்கம் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் போர்க் குரல் எழுப்பியவாறு புலிக் கொடிகளோடு வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். உலகம் வியக்கும் வகையில் புலம் பெயர் தேசங்களில் வாழும் 90 வீதமான தமிழ் மக்கள் 'நாங்கள் புலிகள்' என்று அறிக்கையிட்டார்கள். சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பை உலகுக்கு அம்பலப்படுத்தினார்கள்.