கட்டுரைகள்

பக்கம் 90, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...8889909192...100...இறுதிப்பக்கம் »

22. 05. 2009: நடேசன், புலித்தேவன் மற்றும் தளபதி ரமேஸ் சரணடைய முற்பட்டபோது நடந்த அந்த துரோகச்செயல் என்ன?

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர் ஆயினும் போரது நீறும், புலி ஆடும் கொடி நிலம் ஆறும். பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில் பாசறை ஆயிரம் தோன்றும், கருப் பைகளும் ஆயுதம் ஏந்தும். மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த சிங்கள கூட்டங்கள் ஓடும்.

22. 05. 2009: நிலைகுலைய ஒன்றுமில்லை… நிமிர்ந்து நட… விடுதலை!

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகத்துயர் படிந்த தருணத்தில் ஈழத்தமிழினம் தற்போது தவித்து நிற்கின்றது. தமிழர் அனைவரினது முகத்திலும் சோகத்தினையும், இழப்புகளாலான துயரத்தினையும் தவிர வேறெதையும் காண முடியவில்லை.

22. 05. 2009: இனி அகதிகள் கதி என்ன?

தொடர்ந்து சிங்கள அரசும், இந்திய அரசும், ஊடகங்களும் பிடிவாதமாக பிரபாகரனும், புலிகள் இயக்கமும் அழிந்து விட்டதாக சாதிக்க முயல்கின்றன. இடையிடையே வெகு சில ஊடகங்கள் அப்படியொன்றும் நடந்து விடாது என்ற நம்பிக்கையை பற்பல ஊகங்கள் மூலமும், உலாவரும் ஆதாரங்களின் மீதான சந்தேகங்கள் மூலமும் உயிர்ப்பிக்க முனைகின்றன. நிறைய அஞ்சலி கட்டுரைகள் - சில நிஜமான ரத்தக்கண்ணீரோடும், சில உள்ளுக்குள்ளே எழும் நிம்மதி பெருமூச்சை அடக்கிக் கொண்டும் எழுதப்பட்டு இணையமெங்கும் இறைக்கப் பட்ட வண்ணம் இருக்கின்றன.

21. 05. 2009: கடந்து செல்ல வேண்டிய தருணமும் சொல்ல வேண்டிய செய்தியும்

சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு இந்தியாவின் ஆகப் பெரிய பாசிசப் படுகொலையாகும்.

21. 05. 2009: புலிகளே மக்கள்! மக்களே புலிகள்!

ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே இழப்புக்குப் பஞ்சம் இல்லை. இதில் உனது இழப்பு சிறிது, எனது இழப்பு பெரிது என்று அடிபட்டுக்கொள்ள முடியாது. இதில் புலம் பெயர்ந்த மக்களும் அடக்கம். உனது வேதனை வரிகளை விமர்சிக்க முடியாது. ஆனாலும் கூட ஒருசில நெருடல்கள் என் மனதைத் துண்டுகளாக உடைத்துத் தூங்கவிடாமல் பண்ணியது. ஐந்து வேளையும் இணையதளத்தில் செத்தவர்களின் பெயர்ப் பட்டியல் பார்ப்பது நீ மட்டுமல்ல… வன்னி மண்ணில் இருக்கும் தங்கள் பெற்றோரை, சகோதர-சகோதரிகளை, உறவுகளை எண்ணி உணவு இறங்காமல் நடைப் பிணமானவர்கள் இங்கும் இருக்கிறார்கள்.

21. 05. 2009: மரணத்தை வென்ற மாவீரன்………

இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????

21. 05. 2009: டிஎன்ஏ டெஸ்ட்… அப்படீன்னா? அந்த வசதி இலங்கையில் இருக்கா?

தலைவர் பிரபாகரன் குறித்த வதந்திகளூடே இப்போது அதிகம் அலசப்படும் விஷயமாக இருப்பது டிஎன்ஏ டெஸ்ட் எனப்படும் மரபணுச் சோசதனை முடிவுகள்… அது என்ன மரபணுச் சோதனை? இறந்து போன ஒரு நபரை யாராலும் அடையாளம் காட்ட முடியவில்லை என்றால், அப்போது அவரது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களையும், அவரது ரத்த சொந்தங்களின் மரபணுக்களையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றின் ஒற்றுமைகளின் அடிப்படையில் அடையாளம் காட்டுவார்கள். இதற்குப் பெயர்தான் டிஎன்ஏ சோதனை முறை.

21. 05. 2009: புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி் – தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு!

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

20. 05. 2009: வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம். பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் விளைவிக்க பிரபாகரன் தப்பியோட முனைந்தார், சுடப்பட்டார் என சிங்கள ஊடகங்களும், இந்திய பார்ப்பனீய, பனீயா ஊடகங்களும் தொடர்ந்து செய்தி பரப்பின. அது தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன் தற்பொழுது புதுக் கதைகளை வெளியிட்டு வருகின்றன.

20. 05. 2009: தமிழீழ தேசியத் தலைவர் பற்றிய சிறீலங்காவின் நாடகம் எதற்காக?

விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளத்தை வெட்டி வீழ்த்தியது போல, எத்தனை முறை பொய்யான வதந்தி வேதாளங்களை வெட்டி வீழ்த்தி அடக்கம் செய்ய சுமப்பது? தமிழர்களின் வரலாற்றில் மிக உன்னதமான போராளியான பிரபாகரன் துப்பாக்கி தூக்கிய காலங்கள் முதல் வதந்திகளும் அவரைச் சுற்றி பரப்பப்படுகிறது. இம்முறை வேதாளம் நிமிடத்துக்கு, நிமிடம் காட்சிகளை மாற்றிக் கொண்டு வருகிறது.
பக்கம் 90, மொத்தம் 106 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...8889909192...100...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.