முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள்.
நமது தேசம் சிறீலங்கா இனவெறி அரசின் கொடூரத்தால் துயர் சூழ்ந்து நிற்கின்றது. அவர்கள் பொழிந்த நச்சு குண்டுகளால் எமது மக்களின் உயிர்கள் உடைமைகள் அழிக்கப்பட்டு பிறந்த மண்ணிலேயே அகதியாக முட்கம்பி வேலிக்குள்ளும் தகர குடிசைக்குள்ளும் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. வீடிழந்து வாழ்விழந்து அங்கமிழந்து துயர்சுழியில் சிக்கி துயரத்தின் விரிவின் உச்சியிலே வாழும் எம் மக்களை இயற்கை அனர்த்தமும் அழிப்பதாகவே உள்ளது.
தமிழர்களே,
இன்று பிப்ரவரி 4, இலங்கையில் சுதந்திர தினம்… தமிழர்களுக்கு….?…இன்றைய தமிழர்களின் நிலை முள்வேலி முகாமில்… போர் முடிந்து இரண்டு வருடம் நிறைவுபெற இருக்கிறது. அவர்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் இல்லை.
பெப்பிரவரி 04 அன்று பிரித்தானியா இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் என்று தமிழ் மக்களின் சுதந்திரத்தை நிரந்தரமாக சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற இன அழிப்பின் உச்சமாக 2009 மே 19 உலக வரலாற்றில் பதிவாகியது. அன்றில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர்.
குளம் ஒன்று இருந்தது. போய்ப்பார்ப்போம் என்று போனேன். தண்ணீர் இடுப்புக்குக் கீழேதான் இருந்தது. அப்படியே குளக்கட்டுக்கு மேலே ஏறிவிட்டேன். ஒரு சத்தம் கூட இல்லை. எல்லா இடமும் பார்த்தேன். குளக்கட்டுக்கு மேலே பழைய கால்த் தடங்கள் இருந்தது. அப்படியே அந்த வழியால் போய்க்கொண்டிருந்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றும் தெரியாது. உடனே காட்டுக்குள் இறங்கினேன்; பாதைபோல் இருந்தது.
கொழும்பிற்கு அண்மையிலுள்ள இரகசிய முகாமிலிருந்து வந்த அந்தத் தொலைபேசி அழைப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை என்னுள் உருவாக்கியது. தொலைபேசியில் அழைத்தவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞன்.
‘அண்ணா, உங்கள் தொடர்பு மட்டும்தான் கிடைத்தது. இந்தத் தகவலை எப்படியாவது வெளிப்படுத்திவிடுங்கள். இல்லாவிட்டால், எங்களது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்ற அவரது குரலில் பதற்றமும், படபடப்பும் அதிகம் காணப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து பல கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன, ஆனால் இதுபற்றி யாரும் வெளியில் சொல்லாததால் மக்கள் இன்னமும் விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர்.
அன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு வணக்கம்!
நான் தமிழீழம், கிளிநொச்சி,யை பிறப்பிடமாகக்கொண்டவள், உங்களுடைய "வசீகரா என் நெஞ்சினிக்க", என்ற பாடல் எல்லோரையும் கவர்ந்ததுபோல் என்னையும் மிகவும் கவர்ந்திருந்தது, அந்தப்பாடலின் கவி நயமும் இனிமையும், தவிர வேறெதையும் நான் அறிய முயற்சிக்கவுமில்லை,
ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துமோதல் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.