சாட்சிகள் அற்ற போர் என்ற அமைப்பு சில புதியபடங்களை வெளியிட்டுள்ளது. அதில் ஆனந்தபுரச் சமரில் இறந்த பெண்போராளிகள் உட்பட பலரது உடல்கள் நிர்வாணமான நிலையில் போடப்பட்டுள்ளது தெளிவாகக் காண்பிக்கப்படுகிறது.
போரில் இறந்த போராளிகளின் சீருடைகள களைந்து அவர்களை அவமானப்படுத்தும் இலங்கை அரச இராணுவத்தினர் போர்குற்றங்கள் புரிந்திருக்கின்றமை இப் புகைப்படத்தில் நன்கு தெரிவதோடு, இறந்த சில போராளிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.
2009ஆம் ஆண்டு பாரிய மனிதப் பேரவலம் இடம்பெற்று ஒன்றரைவருடங்களை தாண்டி நின்றபோதும் அதற்கான சர்வதேச சமூகத்தாலோ, ஐக்கியநாடுகள் சபையினராலோ விசாரணைகளும் ஆரம்பிக்கப்படாத நிலையிருந்து வந்தது ஆனால் தற்போது ஐக்கியநாடுகள் சபையே உத்தியோகபூர்வமாக ஒரு அமைப்பினை உருவாக்கி நேற்றைய தினம் அதற்கான சாட்சியங்களை பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கலாம் என்ற ஓர் ஆறுதல் தகவலை தெரிவித்திருக்கின்றார்கள்.
நக்கீரன் அண்ணாவுக்கு, முல்லைத் தீவிலிருந்து அதீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற 14 வயசு பொண்ணு எழுதறேன். நல்லாயிருக்கீங்களா?
நாங்க இங்கு நல்லயில்லையண்ணா. ‘நல்லாயிருக்கீங்களா… எப்படி இருக்கீங்க’ன்னு கேட்க எந்த ஒரு சனமும் இல்லையண்ணா. நல்லாயிருக்கீங்களான்னு ஒரு வார்த்தையை எங்க செவிகள் கேட்டு ரொம்ப நாளாச்சு. எங்கிருந்தாவது அந்த வார்த்தை ஒருமுறை எங்க செவிகள்ல விழாதான்னு ஏங்கிக் கிடக்கிறோமண்ணா.
ஜூன் 22ம் திகதி ஐ.நா ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக் குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிபுணர்கள் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், மேலதிக விபரங்களையும் பெறவிரும்புவதாக தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது. இன்று புதன்கிழமை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பீரிஸ் பிரித்தானியால் பல சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ள நிலையில் - இப்படங்களை வெளியிட்டுள்ளது.
அன்புக்குரிய திரு. சி. சந்திரமௌலிசன்; ‘சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நாடு கடந்த அரசின் யாப்பு’ எனும் உங்கள் கட்டுரைக்கு பதிலளிக்கும் திறந்த மடல்
அன்புக்குரிய திரு. சி. சந்திரமௌலிசன் அவர்களுக்கு,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுள் ஒருவனாகிய ஜெயசங்கர் முருகையா (பிரித்தானியா) ஆகிய நான் அன்புடன் எழுதிக் கொள்வது. சர்வதேச நியமங்களுக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட நாடு கடந்த அரசின் யாப்பு என்னும் தலையங்கத்தில் நீங்கள்
ponguthamil.com எனும் தமிழ் இணையதளத்தில் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரைக்கு பதிலளிக்கும் முகமாக நான் இந்த திறந்த மடலினை உங்களிற்காக வரைகின்றேன்.
தாய்லாந்தில் அகதியாக வாழும் உதயனாகிய நான் மீனகம் நிருபர் ஏற்படுத்தித் தந்ததன் பேரில் கனேடியத்தமிழ் வானொலியுடன் தொடர்பு கொண்டு தாய்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதிகளின் தற்போதைய நிலைமை பற்றிய செய்திகளை நேர்காணலிற் கூறியபோது நான் பகிர்ந்து கொண்ட விடயங்களையும் அதற்குக் கனேடியத்தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை முன் வைத்த ஆலோசனைகளையும், இது தொடர்பான தமது செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டவற்றைச் செய்தியாகத் தொகுத்துள்ளேன். மேலும் இச்செவ்வியானது கனேடிய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு வழங்கப்பட்டது.
தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளுடன் நேர்காணல் ஒன்றை வீரகேசரி இணையம் எடுத்துள்ளது. அவை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தீவிரவாதம் குறித்து விவாதிக்கவும், மற்றும் பிரித்தானிய அரசுடனாக உறவைக் கட்டி எழுப்பும் ஒரு பாரிய மறைமுக வேலைத் திட்டத்தோடு, அமைச்சர் ஜி.எல் பீரிஸ் லண்டன் வந்துள்ளார். நாளை இம் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் தமிழர்கள் பலத்த எதிர்ப்பை வெளிக்காட்டவுள்ளனர். பல நாடுகளில் இயங்கிவரும் பயங்கரவாதம் என்ற தலைப்பில் கொள்கைகளுக்கான சர்வதேச கற்கைமையம் என்ற அமைப்போடு சேர்ந்து இம் மாநாட்டை நடத்தி பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு மேலும் சிக்கலை தோற்றுவிக்க, மறைமுக நோக்கில் இது கையாளப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என் அன்புக்குரிய திரு. ஜெயானந்தமூர்த்தி அண்ணன் அவர்களுக்கு உங்கள் சகோதரன், ஜெயசங்கர் முருகையா (நா.க.த.அ. உறுப்பினர், பிரித்தானியா) ஆகிய நான் உங்களிடம் தனிப்பட்ட வகையில் விடுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் இது.
அண்ணா, சென்ற வாரம், நியூ யோர்க்கில் நடைபெற்ற நா.க.த.அ.இன் இரண்டாவது அமர்வைப் பற்றி நீங்களும், உங்களைச் சார்ந்தோரும் விட்டிருக்கும் மிகவும் அவதூறான அறிக்கைகளைப் படித்து, மிகவும் மனவேதனையுடன் இத்திறந்த மடலினை நான் உங்களுக்கு வரைகின்றேன்.