புலம் பெயர் மக்கள் இன்று தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒரு ஊன்று கோலாக செயல்பட்டு வருகின்றமை சிறீ லங்கா அரசுக்கு பெரும் தலையிடியாகவும் உலகின் கண்களுக்கு எங்கள் போராட்டம் முடியவில்லை என்று உணரவைக்கவும் விளங்குவதை உலக அரங்கில் காண்கிறோம்.
ஆயுத போராட்டத்தின் பணபலத்தை வாரி வழங்கிய அதே மக்கள் 2009 காலபகுதியில் பெரும் குழப்பமுற்று புலிகளின் சில இரண்டாதர தலைவர்களின் குழப்பமான செயல்பாடுகளால் மௌனம் காத்து வந்தாலும் தமது போராட்ட உணர்வை பல்வேறு வடிவங்களில் தனிபட்டவர்களாக அல்லது சில அமைப்புகளாக செய்து வந்து உள்ளனர்.
மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உன்னதமானவர்கள். மாசுமறுவற்ற மண்ணின் மைந்தர்கள். விடுதலை என்ற இலட்சியக்கனவோடு தாய்மடியில் வீரவிதையாய்ப் புதைந்திருப்பவர்கள்.
அவர்களின் நினைவுகள் புனிதமானவை. பரிசுத்தமானவை.
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் உந்துசக்தியாக, தமிழர் மனங்களில் புத்தொளி பாய்ச்சி, புதுவிசை கொடுக்கும் ஆன்மசக்தியாக இருப்பது மாவீரர்களின் நினைவுகளே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் லண்டனில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பிலான கருத்துவெளிப்பாடுகளும், அதன் எதிர்விளைவுகளையும் அவரை அறிக்கைவிடும் அளவிற்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன. தேசியம் தொடர்பில் புலம்பெயர் மற்றும் தாயக ஊடகங்களும், மக்களும் கொண்டிருக்கின்ற உறுதியான நிலைப்பாட்டின் வெளிப்பாடே அவரை அறிக்கை விடும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தியாகும்.
லண்டனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிளை ஒழுங்கு செய்த கூட்டத்தில் சுமந்திரன் ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் புலம்பெயர் மற்றும் தாயகத்தில் இயங்கும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பில் பாரிய எதிர்ப்பலை தமிழ் மக்களால் சுமந்திரன் மீது முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையை ஊடக தர்மம் கருதி எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே இங்கு பிரசுரிக்கிறோம்.
கடந்த 23-07-2011 அன்று தமிழர் தாயகப்பிரதேசத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சிங்கள பௌத்த பேரினவாதக்கட்சிகளையும் அதன் துணைக் குழுக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதன் மூலம் தமிழ்த்தேசத்தின் தனித்துவத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
சனல் 4தொலை காட்சி நேற்று ஒளிபரப்பிய காட்சி பதிவில் இரு நேரடி சாட்சிகள்கோத்தபாயாவின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் சரண் அடைந்த புலிகளை சுட்டனர் என தெரிவித்துள்ளனர்.
அவ்வாறன இருவரையும் வைத்து மகிந்தாவிற்கு வழக்கு போட பிரித்தானிய தமிழர் சட்ட மேதைகள் தயாராகி வருகின்றன
2009 ஆண்டு வன்னியில் மெற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போது சரணடைந்த போராளிகளை படுகொலை செய்வதற்கான கட்டளையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலாளர் கோதபாய ராஜபக்ஷ வழங்கினார் என ச்சனல் - 4 செய்தி வெளியிட்டிருக்கிறது.
பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு படுகொலை புரிவதற்கான கட்டளையை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் என யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சாட்சியம் வெளியிட்டிருப்பதாக ச்சனல்-4 குறிப்பிட்டிருக்கிறது.
சனல்4 வில் இலங்கை கொலைக்களம் சார்ந்த அதிர்ச்சிகரமான மற்றுமொரு காணொளி இன்று மாலை பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு காண்பிக்கப்பட உள்ளதாக நெருடலுக்கு நம்பகத்தரமான தகவல்கள் கிடைத்துள்ளது.
வணக்கம் !!!
இத்துடன் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வருடாந்த குருதிக்கொடை நிகழ்வு, பற்றிய சமூக அறிவித்தலை இணைத்துள்ளோம். ஊடக நண்பர்களே, தயவு செய்து உங்கள் ஊடகங்களின் ஊடாக, இந்நிகழ்வு நடைபெற்று முடியும் வரை தயவுகூர்ந்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களுக்கு முழுமையான உங்கள் ஆதரவை தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
“இலங்கையில் 1983ம் ஆண்டு அந்த கறுப்பு ஜுலை மாதத்தில் நடைபெற்ற இனக் கலவரத்தில் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட, தமிழின மக்களின் அவலநிலையை நினைவூட்டும் முகமாகவும், தமிழர் மாத்திரமன்றி உலகின் ஏனைய இன மக்களும் அறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் ...
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொல் திருமாவளவன் கையெழுத்து வேட்டை ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். பலரிடம் சென்று கையெழுத்து வாங்கி வரும் இவர் தற்போது விஜயிடம் சென்றாராம், அவர் கையெழுத்துப் போட மறுத்துவிட்டாராம்????