முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 20, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

15. 09. 2010: வெளிப்படையான விசாணைக்குத் தயார்! தவறு செய்திருந்தால் எவ்வித தண்டனையையும் ஏற்றுக் கொள்வேன்!! TRO றெஜி அறிக்கை!

என்மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்கள் அமைப்புக்கள், ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியோரைக் கொண்டு அமைக்கப்படும் எவ்வித வெளிப்படையான விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன்.

14. 09. 2010: செப்டம்பர் 17ஆம் நாள் மஹிந்தவைக் கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்பு

ஐக்கிய நாடுகள் சபை பொதுவிவாதத்தில் உரையாற்றுவதற்காக இந்த மாதம் அமெரிக்காவுக்கு வருகை தரும் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து அவர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு, ரொரன்ரோவிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் (360 University Ave, Toronto (Subway: St. Patrick)), கியூபெக்கிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் (1155 rue St-Alexandré (Corner Of St-Alexandré & Rene Levesque), Montréal, Québec, H3B 1Z1) நடக்கவுள்ளது.

14. 09. 2010: கட்சிதாவிய பியசேனா மகிந்தவுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் எழுதிய கடிதம் அம்பலம்!

இவ் வருடம் மே மாதம் இறுதிப் பகுதியில் பியசேன தான் மகிந்தவுடன் சேரவிருப்பம் எனத் தெரிவித்து எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பியசேன கையெழுத்தும் அவர் அலுவலக முத்திரையும் போடப்பட்டுள்ளது. அவர் சுமார் 4 மாதத்திற்கு முன்னரே மகிந்தவுக்கு எழுதிய கடிதம் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முன்னரே சிலர் தகவல் கொடுத்துள்ளனர், இருப்பினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்பீடம் இதுகுறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

11. 09. 2010: கட்சிமாறிய பொடியப்பு பியசேனாவுக்கு பத்துக் கோடி விலை பேசப்பட்டது. அதை வாங்கிக் கொண்டுதான் ஆளும்கட்சிக்குத் தாவினார்

தமிழ் சிஎன்என் இணையதளம் கட்சி தாவிய பொடியப்பு பியசேனாவை நேர்காணல் கண்டு "கூட்டமைப்பின் கூத்துக்களை அம்பலப் படுத்துகிறார்" என்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் சொன்ன எல்லாவற்றையும் வேத வாக்காக மதித்து இந்தச் செய்தி வெளியிட்டதன் நோக்கம் என்ன? இல்லை உள்நோக்கம் என்ன? 

04. 09. 2010: பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சர் இன்று தமிழ் மக்களை சந்திக்கின்றார்! பெருமளவில் திரண்டுவருமாறு அழைப்பு!!

உங்கள் உறவினர்கள் பிரித்தானியாவில் வசிக்கின்றார்களா, உடனே அவர்களுக்கு இதை தெரியப்படுத்தி அவர்களையும் இதில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துங்கள். பிரித்தானிய வாழ் தமிழ் மக்களை பிரித்தானிய முன்னாள் வெளிநாட்டமைச்சரும் தொழில் கட்சியின் முதன்மை வேட்பாளருமான டேவிட் மிலிபாண்ட் இன்று சனிக்கிழமை சந்திக்கின்றார். இவர் முன்னர் உலகத்தமிழர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார். இதனால் சிறிலங்கா அரசு கடும் சீற்றமடைந்திருந்தது.

03. 09. 2010: என்னால் நன்றாக படிக்க முடியும், ஆராவது உதவி செய்யுங்கள்! கெஞ்சுகிறது ஒரு பிஞ்சு

நெருடல் வாசகர்களுக்கு, இந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக புலம்பெயர் தமிழீழத்தில் இருந்து ஒருவர் (அவரின் பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படவில்லை) பொறுப்பெடுத்துள்ளார். இந்த சிறுமியை போலவே இன்னும் எத்தனையோ சிறுவர்கள் சிதறடிக்கப்பட்டுளார்கள், அவர்கள் அனைவரையும் நெருடல் விரைவில் புலம்பெயர் தமிழீழத்திற்க்கு எடுத்து வரும். இந்த சிறுமிக்கு வழங்கிய ஆதரவை போலவே உங்கள் அனைவரின் ஆதரவும் எம் மக்களுக்கு இருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி நெருடல் குழுமம் சோதனைகளையும், வேதனைகளையும் சாதனைகளாக்கி கடந்த வருடம் இடம்பெற்று முடிந்த தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தி அடைந்து இருப்பவர் அனுசீலன் குணாலிசா.

01. 09. 2010: தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடிநாதத்தையே கேள்விக்குள்ளாக்கிவரும் தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் கலைப்பார்களா?

கடந்த ஆண்டு மே-19ம் திகதியுடன் தமிழ்மக்களது பாதுகாப்பு கவசமாக விளங்கிய ஆயுதங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்ய முடிவெடுத்தமையும் அதன் பின்னர் இன்றுவரை ஓய்வின்றி மக்களை குளப்பும் வகையிலான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது எமது இனத்தின் தூர்பாக்கியமாகும்.

01. 09. 2010: வன்னி மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றமையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது கூட்டமைப்பு!

வன்னியில் இருந்து மக்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதை ஆதாரப்படுத்துவதுடன், இந் நடவடிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக் கண்டிக்கின்றது. இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வன்னிமக்கள் போரால் பேரவலத்தில் இருந்து இன்னமும் மீளாத நிலையில் அந்த மக்கள் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை இந் நிலையில் அவர்களின் சொத்துக்கள் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகின்றமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஆதாரத்துடன் வெளிப்படுத்துகின்றோம்.

31. 08. 2010: மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்ய முடியுமா? உயர் சட்ட ஆலோசனையில் ஒபாமாவுக்கான தமிழர்கள்!

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகை தர இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? என அந்நாட்டின் பிரதம நீதியரசர் ஜோன் ரொபேட்ஸிடம் அமெரிக்கத் தமிழரின் அரசியல் குழுவான ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுத்துமூலம் அபிப்பிராயம் கோரி உள்ளது.

31. 08. 2010: தமிழக மடல்: ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்தது என்ன? உணர்வாரா டி.ஆர்.பாலு!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழிற்கு தமிழர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் தொடர்பாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அளித்துள்ள பேட்டியில், தனது கட்சித் தலைவரையும் விஞ்சும் தமிழினக் கரிசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பக்கம் 20, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.