முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 29, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2728293031...405060...இறுதிப்பக்கம் »

07. 04. 2010: தீபசெல்வனின் நேர்காணலை மறுத்திருக்கும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் – ஏன்?? எதற்காக?? – பதிலளிக்க முடியுமா!!

நடைபெறவுள்ள நாடாளமன்றத் தேர்தலை முன்னிட்டு பல தரப்பினர்களையும் நேர்காணல் செய்து வநதோம். அந்த வகையில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் இருவரை நேர்காணல் செய்ய முற்பட்ட வேளை அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்திட்டனர். அதில் எமக்கு நேர்காணல் தருவதாக கூறிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்  குறித்த கேள்விகளை பார்த்துவிட்டு அவற்றுக்கு பதில் அளிக்க மறுத்திருக்கிறார்.

07. 04. 2010: ஈழத் தமிழ் பெருமக்களே! நீங்களே உங்களுக்குக் குழி பறிக்க வேண்டாம்: இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் – நியூசிலாந்து

முள்ளி வாய்க்கால் ஈழத்தமிழர்களின் வலுவின் மூலவேரை அறுத்துவிட்டோம்! தமிழின அழிப்பின் பெரும்பகுதியை முடித்துவிட்டோம்! எஞ்சி இருப்பது அரசியல் களத்தில் வலுவுடன் இருக்கும் தமிழர் தேசிய கூட்டமைப்புத்தான்! அதையும் சிதைத்துவிட்டால் தமிழின அழிப்பை முழுமையாக முடித்துவிடலாம். என்று நினைத்து செயற்படுகிறது சிங்களத் தலைமைகள்.

07. 04. 2010: ஈழத் தமிழ் பேசும் மக்களும், புலம்பெயர் வாழ் தமிழ் பேசும் மக்களும் ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டும்

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக தாயகம் - ஆனால் அது 1931இல் இருந்து டி.எஸ். செனநாயக்காவின் சிங்களமயமாக்கும் திட்டத்தால், அதன் பின் வந்த அரசாங்கங்கள் எல்லாம் திட்டமிட்டு சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கின்றன. இப்போ கிழக்கு மாகாணம் 35 – 40 வீதத்திற்கு மேற்பட்ட நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குள் போய்விட்டது. மேற்கத்தேய நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் 1983 ஆண்டுகளில் இருந்து தமது நாட்டின் உண்மையான நிலைமையை உணராதவர்களாகவே உள்ளனர்.

06. 04. 2010: 6 ஆயிரம் வரையான போராளிகளுக்கு என்ன நடந்தது???

பதினோராயிரம் இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கம் மறுவாழ்வு அளித்து வருவதாகவும், இவர்கள் பற்றிய தகவல்கள் குறித்த அமைச்சின் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறு பெயர் குறிப்பிடப்படாத நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

06. 04. 2010: புலம்பெயர் தமிழீழமே! தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம் – வன்னிமக்கள் பேரவை!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம் எனத் தெரிவித்து வன்னி மக்கள் பேரவை நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு: 21ஆம் நூற்றாண்டில் உலகில் மிகப் பெரும் அவலத்தைச் சந்தித்த ஒரு இனக்குழுமத்தின் ஆத்மார்த்த நேரடிச் சாட்சியமாய் இன்று வன்னி மக்கள் இருக்கிறார்கள்.

06. 04. 2010: நிதானமாகவும் தந்திரோபாயமாகவும் போராட்டத்தை நகர்த்திச் செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வைப்போம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழ முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர்கள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட சூழலில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நிதானமாகவும் தந்திரோபாயமாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுத்து வருகிறது. எமது போராட்டத்தின் இறுக்கமான கால கட்டத்தில் எமது மக்களுடன் மக்களாக வாழ்ந்து எமது மாணவர்களுடன் மாணவர்களாக வாழ்ந்து உரிமைகளுக்காக குரல் கொடுத்து அதற்காக அச்சுறுத்தல்களின் மத்தியில் செயற்பட்ட மாணவப் பிரதிநிதிகளான நாம் இந்த விடயத்தை அன்புக்குரிய எமது மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தி நிற்கிறோம்.

05. 04. 2010: புலம் பெயர் தமிழர்களே!, தமிழ் அமைப்புக்களே! எமது விடுதலையை வென்றெடுக்க ஒருமித்த கருத்துடன் ஒன்றுபடுவீர்களா?

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சில கடந்த நான்கு நாட்களாக தாயகத்தில் நடக்கும் தேர்தல் திருவிழா தொடர்பாக தமது அறிக்கைகளை தமக்கு ஏற்றவாறு தளத் தமிழர்கள் யார்க்கு வாக்களிக்க வேண்டும் என்று தமது கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

05. 04. 2010: துயிலுமில்லத்தில் துரோகிகளின் விளம்பரங்கள்!

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிங்களப் படைகளும் அதன் கைக்கூலிகளும் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்களை அழித்தும் சிதைத்தும் வருவதுடன் அந்தச் சிதைவுகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது தமது தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தும் இழிவு படுத்தல் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

04. 04. 2010: ஆனந்தபுரம் – முடிவடையா நினைவுகள்..!

போர் அநேகமாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஏறக்குறைய எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போகின்றன என்று தெரிந்து கொண்டிருந்தது அப்போது. ஏனென்றால், புவியியல் ரீதியாக சிறிய ஒடுங்கிய பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்ட நிலைக்கு மக்களும் புலிகளும் தள்ளப்பட்டு விட்டனர். சர்வதேச ஆதரவுத்தளத்தையும் பெறக்கூடிய நிலையில், போரைத் தணிக்கக் கூடிய நிலையில் நிலைமைகளும் இல்லை. எனவே போர் தன்னுடைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதாவது அது ஏறக்குறைய முடிவுக் கட்டத்துக்கு வந்து விட்டது என்று நிலைமைகளைக் கூர்மையாக அவதானித்துக் கொண்டிருந்தோர் தீர்மானித்தனர்.

04. 04. 2010: ஏங்கித்தவிப்போரை ஏமாற்றுகிறார் கீதாஞ்சலி நகுலேஸ்வரன்

வவுனியாவில் உள்ள சர்வதேச பாடசாலையின் அதிபரான கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அரச சார்பில் போட்டியிடுகிறார் இவர் இலங்கை இராணுவத்தின் ஆட்காட்டி என்பதை அனைவரும் அறிந்ததே. கடந்த வருடம் இவரின் கணவர் நகுலேஸ்வரன் இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் போய்விட்டார் இத்தேர்தலில் கீதாஞ்சலி போட்டியிட கணவர் முற்றிலும் மறுத்ததினால் இருவரிடையேயும் பெருந்தகராறு ஏற்ப்பட்டது.
பக்கம் 29, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2728293031...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.