முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 3, மொத்தம் 88 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

24. 07. 2011: தமிழீழம் தொடர்பாக முகப்புத்தகத்தில் (Facebook) கணக்கு வைத்திருப்பவர்களின் முக்கிய கவனத்திற்க்கு!

ஈழ போராட்டதுக்கு ஆதரவாக பேஸ்புகில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை பேஸ்புக்கில் போடவேண்டாம். இலங்கை கணனி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் பேஸ்புக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள்.

23. 07. 2011: முன்னாள் தேசியவாதியின் மறுபக்கம்!

பளை பிரதேச சபையில் த.தே.கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை போட்டியிலிருந்து ஓதுங்கிக்கொள்ளுமாறும் அவ்விதம் செய்யாவிடில் விபரீத விளைவுகள் ஏற்படும், உயிருக்கு ஆபத்துவரும் என்றும் ஈபிடிபி அமைப்புடன் இணைந்து செயற்படும் ஆயுததாரி கருணாகரன் என்பவர் மிரட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

14. 07. 2011: தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிப்பு!

தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.

13. 07. 2011: 21ம் திகதி லண்டனில் இருந்து 40தமிழர் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர்

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் நிராகரிக்க பட்ட மற்றுமொரு தொகுதியினர் எதிர் வரும் இருபத்தி ஓராம் திகதி 40பேர்இலங்கைக்கு நாடுகடத்த பட உள்ளனர் . இந்த நாடுகடத்தலை உடன் தடுத்து நிறுத்த தமிழர் அமைப்புகள் எவையும் இதுவரை முன் வரவில்லை 

13. 07. 2011: ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம்: யூலை 15ம் திகதி அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் வெளியிட ஏற்பாடு!

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படம் எதிர்வரும் 15 ம் திகதி அமெரிக்க கொங்கிரஸ் மண்டபத்தில் வெளியிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

13. 07. 2011: ” GTV ” தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியா? அல்லது சிங்கள தேசிய தொலைக்காட்சியா? – முடிவு உங்கள் கைகளில்

இலங்கை அரசானது சர்வதேசத்தின் அழுத்தங்களையும் மீறி, மனித உரிமை சட்டங்களையும் மீறி, தமிழினத்திற்கெதிரான தொடர்ச்சியான இன அழிப்பினை நடத்தி வருகின்றது. மக்களின் விடுதலை நோக்கிய உண்மை நிலவரங்களை வெளிப்படுத்தி மக்களுக்கு சரியான பாதையினைக் காட்டுவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு என்பதில் சந்தேகமில்லை.

13. 07. 2011: பொருளாதாரத் தடையை விதிக்க உலகை வேண்டும் நாம் சிறீலங்கா பொருட்களை வாங்குவது தப்பல்லவா கலாநிதி ராம் சிவலிங்கம், பிரதி பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு

நாம் எடுக்கும் அரசியல்ப் போர் இறுதிப்போராக அமையவேண்டுமானால்,  எமக்குக் கிடைத்த இறுதிச் சந்தற்பத்தை நழுவவிடாது வெற்றியடைய வேண்டுமானால் எமது அரசியல்ப் போர் பலமுனைப் போராட்டமாக மாறவேண்டும். மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் பல மடங்கால் அதிகரிக்கப்பட வேண்டும். இது ஓர் மக்கள் போராட்டமாக உலகெலாம் உருவெடுக்க வேண்டும்.

13. 07. 2011: யாகூ இணையத்தினூடாக 88 இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக் கணிப்பு! உங்கள் வாக்கை உடனடியாக அளியுங்கள்

 உங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி காலம் தாழ்த்தாமல் விரைந்து செயல்ப்பட்டு கடலில் தத்தளிக்கும் எம் உறவுகளை காப்பாற்றுங்கள். இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்துநிறுத்தப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கருத்துக்கணிப்பு ஒன்று யாகூ இணையத்தினூடாக இன்று நடைபெற்று வருகிறது. இக் கருத்துக்கணிப்பில் நான்கு விடையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

12. 07. 2011: அகதிஅந்தஸ்துகோரும் நாடுகளின் பட்டியிலில்இருந்து சிறீலங்கா அகற்றப்பட்டுள்ளது !

சிறீலங்காவில் தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலை காரணமாக ஜக்கியநாடுகளில் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12. 07. 2011: சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பினால் இறப்பது உறுதி! விரைந்து செயற்படுமாறு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் வேண்டுகோள்! (காணொளி இணைப்பு)

கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
பக்கம் 3, மொத்தம் 88 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.