முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 30, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »

01. 04. 2010: வீரச்சாவடைந்ததாகச் சொல்லப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன நிறுவனத்தின் மற்றும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளராக இருந்து முள்ளிவாய்க்காலில் வீரச்சாவினை தழுவிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட சேரலாதன் தற்போது உயிருடன் இருப்பதாக நெருடல் இணையத்தளத்திற்கு தெரியவருகின்றது.

27. 03. 2010: சிறிலங்காவின் இரகசிய தடுப்பு முகாம்களில் உள்ளோர் பற்றிய விபரங்களை திரட்டுகிறது வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகம்

முள்ளிவாய்கால் இறுதிக்கட்ட போரைத் தொடர்ந்து மக்களும் போராளிகளும் பெரும்திரளாக வெளியேறியபோது இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். மார்ச் 16ம் திகதி இதுபற்றிய தகவல் திரட்டுவதற்காக வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகம் ஒரு வேண்டுதல் விடுத்திருந்தது.

27. 03. 2010: அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரைத் தாக்க இனியபாரதி குழு முயற்சி்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹென்றி என அழைக்கப்படும் குலசேகரம் மகேந்திரனை, சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணைப்படைக் குழுவான (கருணா குழு) இனியபாரதி குழுவினர் தாக்க முற்பட்டுள்ளனர்.

27. 03. 2010: ‘சிறி லங்காவைப் புறக்கணியுங்கள்’ – உலகத் தமிழர் பேரவையின் கோரிக்கை

இலங்கையில் நிலவுகின்ற உண்மையான மனித உரிமை நிலை பற்றிய உலகளாவிய புரிந்துணர்வை ஏற்படுத்துமுகமாகவே இலங்கையின் பொருள்களையும், சேவைகளையும் உலகளாவிய அளவில் புறக்கணிக்கும்படி உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தனிப்பட்ட ரீதியில்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26. 03. 2010: மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான சவால்களை சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணித்து வருகின்றது!

மேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது.  விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன.

26. 03. 2010: அழிக்கப்படுபவை புலிகளின் சின்னங்களல்ல! தமிழர்களின் சின்னங்கள்!!

ஈழத்தமிழர்களின் ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டமானது, சமகால அரசியல் இராணுவ புறநிலைகளை கருத்திற்கொண்டு, மீண்டும் அரசியல் வழியிலான விடுதலைப் போராட்டமாக வீரியமடைகின்ற காலகட்டத்தில் இருக்கின்றது. அரசியல் ரீதியான விடுதலை போராட்டமாக முன்னெடுத்து செல்லவேண்டிய பொறுப்பு தற்போதைய தலைமைகளிடம் உண்டு.

26. 03. 2010: வன்னியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த இலங்கை இனவாதப் படையினர்!

கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி  அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. 24.03.2010 அன்று பாடசாலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த 15 வயது மாணவியை ஆனைவிழுந்தான் சந்தியில் காவலரண் அமைத்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கட்டாயப்படுத்தி காவலரணிற்குள் அழைத்துச் சென்றனர்.

26. 03. 2010: இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் தேடப்படுவோர் பட்டியலிலிருந்து தமிழீழத் தேசியத் தலைவரின் பெயர் நீக்கம்!

இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் (CBI) இணையத்தளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் பகுதியில் நடந்த போரின் போது கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்திருந்தது.

26. 03. 2010: காரணம் தேடும் ஆய்வுத் தொடர்: 80 மில்லியன் தமிழரை விட 18 மில்லியன் சிங்களவர்கள் ஏன் உலகுக்கு முக்கியமாய்ப் போனார்கள்? – உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 6

இந்திய – தமிழீழ புவிசார் அரசியல் குறித்து கடந்த அங்கத்தில் நோக்கியிருந்தோம். புவிசார் அரசியல் குறித்த நமது பார்வை கெடுபிடிக்கால புவிசார் அரசியல் என்ற காலப்பகுதிக்குள்தான் நின்று கொண்டிருக்கிறது. இன்றைய அங்கத்தில் சிறிலங்காவின் புவிசார் அரசியலை தமிழீழத்துடன் பொருத்திப் பார்ப்போம்.

26. 03. 2010: யுத்தம் முடியவில்லை; அது புதுவடிவம் பெற்றுள்ளது!

நெஞ்சில் ஈரமற்ற வரண்டு இறுகிய கற்பாறைகளால் தமிழ் இதயங்களை நசுக்கிப் பிழிந்த சாற்றில் இருந்து சிங்கள சமூகம் அரசியற் கெந்தகம் ஆகிவிட்டது. இந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவு இப்போது ஒரு வெடிமருந்துக் கிடங்கு. இந்து சமுத்திரம் சார்ந்த வல்லரச நலன்கள் ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறையில் மையங்கொண்டது. நுனித்துலாவில் எரிந்த தீப்பந்தம் இப்போது அடித்துலாவுக்கு மாறிவிட்டது.
பக்கம் 30, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.