முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 32, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...3031323334...405060...இறுதிப்பக்கம் »

19. 03. 2010: கூட்டமைப்பிற்கு வாய்ப்பளித்தால் குடிமுழுகிப் போகுமா?

உருவகக் கதை சொல்லி விடயதானங்களை இலகுவாக விளங்கப்படுத்தும் நடைமுறை பெரும்பாலான கலாச்சாரங்களில் காணப்படுகின்றது. இந்நடைமுறையானது, தமிழ் வாழ்விலும் இரண்டறக் கலந்த ஒரு விடயமாகும். எனவே தான் இப்பத்தியும் ஒரு கதையுடன் ஆரம்பிக்கின்றது. ஆனால் இக்கதையானது கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்ட, தற்போதும் எழுதப்பட்டு வருகின்ற ஓர் உண்மைக் கதையாகும். இப்பத்தியானது சொல்ல விழைகின்ற செய்திக்கான நிலைப்பாடு இக்கதையிலிருந்தே பெறப்படுகின்றது. அவ்வகையில் இக்கதையானது மிக முக்கியமானது.

17. 03. 2010: சிறிலங்கா புலனாய்வுத் துறையின் கொலைப் பட்டியல்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் பாக்கியசோதி சரவணமுத்து, உதயன் மற்றும் சுடரொளி ஏடுகளின் ஆசிரியர் நடேசபி்ள்ளை வித்தியாதரனின் பெயரும் இந்தப் பட்டியலில் முதன்மையாக இடம்பெற்றுள்ளது

சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் தயாரிக்கப்பட்டு கசிய விடப்பட்டிருக்கும் கொலைப் பட்டியல் ஒன்று, தமிழ் மற்றும் சிங்கள சமூக சேவையாளர்களையும், ஊடகத் துறையினரையும் உள்ளடக்கியதாக 35 பேரின் பெயர்களைக் கொண்டிருக்கின்றது. அந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆட்களும் - சிறிலங்கா புலனாய்வுத் துறையால் அவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு அமைவாகப் புள்ளிகள் கொடுக்கப்பட்டுத் தரப்படுத்தப்பட்டு உள்ளனர்.

17. 03. 2010: பொட்டு அம்மான் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார் – இலங்கை புதுக் கதை!

இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களின்போது விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும், அவரது மனைவியும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு விட்டனர். அவர்களது உடலின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. எனவேதான் பொட்டு அம்மான் மரணம் குறித்து சான்றிதழ் கூட கொடுக்க முடியவில்லை என்று இலங்கை அரசு புதுக் கதை விட்டுள்ளது.

17. 03. 2010: விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி, தற்பொழுது பிரித்தானியாவில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.   இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாகப் பேசிய என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரித்தானியாவில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்தார்.

16. 03. 2010: இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10781 பேர் பற்றிய விபரங்களை வெளியிடப்பட்டது! ஏனைய 1000 பேர் பற்றிய விபரங்கள் இல்லை!!

இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 11 000 இற்கும் மேற்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள சிறிலங்கா அரசின் புனர்வாழ்வு அமைப்பு 10 781 பேர் பற்றிய விபரங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஆனாலும் ஏனைய 1000 பேர் அளவான பற்றிய விபரங்களை வெளியிடாமல் தொடர்ந்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

16. 03. 2010: தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து பயங்கரவாதிகளாக சித்தரித்துக் கொண்டிருக்கும் இந்த சாரா சிந்தர் யார்?

சி .என் .என் இன் வட ஆசியா செய்தி நிருபராக செயற்பட்டு வருகிறார். சி .என் .என் இக்கு இலங்கையில் நடை பெறும் யுத்தம் பற்றி செய்திகளை வழங்கி வரும் இவர் தமிழ் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொண்டுவருவது போல் விவரணங்களை வழங்கி வரும் இவர் அவருடைய ஒவொரு விவரனங்களிலும் விடுதலை புலிகளை மிக கொடிய பயங்கர வாத இயக்கமாக குறிப்பிட தவறுவதில்லை.

14. 03. 2010: கூட்டமைப்பின் பிளவுக்கு வித்திட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவு இதோ!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்மொழியப்பட்டுள்ள தீர்வுத்திட்ட நகலின் பிரதி பொங்கு தமிழுக்குக் கிடைத்துள்ளது. கட்சித் தலைவர்கள் தவிர்ந்த ஏனைய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம்கூட கையளிக்கப்படாது வாசித்துக் காட்டப்பட்ட அந்த தீர்வுத் திட்ட நகலின் முழுமையான வடிவம் எமக்குக் கிடைத்துள்ளபோதும் அதன் முக்கிய விடயங்களை மட்டும் இங்கு வெளியிடுகிறோம்.

13. 03. 2010: ஈழத்தமிழரின் அரசியல் அமைப்பைத் தீர்மானிக்க இந்தியாவிற்கு அருகதை உண்டா?

தமிழ் ஈழத்தில், முள்ளிவாய்காலுடன் முழுவதும் முடிந்தது என எண்ணியிருந்த தமிழின எதிர்ப்புச் சக்திகள் அனைத்தும், மூக்கில் விரலை வைத்துக்கொண்டு, தங்கள் கனவுகள்  ஏன் நிறைவேறவில்லை என விறைத்துப்போய் உள்ளனர். “விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர் அத்துடன் தமிழீழக் கொள்கையும் சமாதியாகிவிட்டது” என இவர்கள் நப்பாசையில் மூழ்கியிருந்து, இன்னும் மீளமுடியாது தடுமாறுகின்றனர்.

13. 03. 2010: 11000 புலிச்சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் சிறை வைக்க முடிவு! 11000 ஏக்கர் நிலத்தில் பண்ணை!!

தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 11000 விடுதலைப் புலிகள் போராளிகளையும் நீண்ட கால நோக்கில் சிறைப்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு சர்வதேச சமுதாயம் குரல் கொடுத்துவரும் நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக அரசினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

11. 03. 2010: “ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி”

“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.
பக்கம் 32, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...3031323334...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.