புதுக்குடியிருப்பு கிழக்கு, முள்ளைவாய்க்கால் பகுதி்யில் எடுக்கப்பட்ட M16-A2 எறிகுண்டு செலுத்தி எம் தர இயந்திர துப்பாக்கி மற்றும் 125தற்கொலை அங்கிகள் உட்பட அனைத்தையும் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தனிப்பட்ட பாவனைக்கு உபயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் என இலங்கை அரசு கூறியுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் - யாழ் குடாநாட்டில் - இருபதுக்கும் மேற்பட்ட இறந்தோரின் உடல்கள் கிணறுகளில் வீசப்பட்ட நிலையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.
முன்பு - தொடக்கத்தில் - இவை, தற்செயலாகக் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தவர்களது உடல்கள் என்றே நம்பப்பட்டன.
தென்னிலங்கை அரசியலின் மற்றொரு முக்கிய பேசுபொருளாய் மாறியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தனக்குள் எழுந்த அதீத தமிழ் பற்று மேலீட்டால் தனது கட்சிகளின் ஒருமித்த கொள்கைகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகக் கட்டுப்பணமும் செலுத்தியுள்ளார். தற்போது பரப்புரை நடவடிக்கைகளிலும் தோளில் கறுப்புச் சால்வையுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.
தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது.
இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009.
தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - பெரும் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது.
சரணடைந்த புலிகளின் தலைவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது டி.பி.எஸ். ஜெயராஜ் கூறுகிறார்.
சரணடைவதாக முடிவு செய்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், தம்மை சரணடையக்கோரிய சிறிலங்கா அரசையோ இராணுவத்தினரையோ நம்பாவிட்டாலும்கூட காயமடைந்த போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றவேண்டும் என்ற நோக்குடனேயே சரணடைவதாக முடிவெடுத்தார்கள் என்று சரணடைவதற்கு முன் கடைசி நேரத்தில் நடேசனுடன் பேசிய அவரது நண்பரை மேற்கோள் காட்டி ஊடகவியலாளரும் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தஷ்கின் சினவத்ராவை தமது பொருளாதார ஆலோசகராக நியமிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தின் மற்றொரு முன்னாள் பிரதமர் சொம்சாய் வங்ஸ்வட்டை ஆதாரம் காட்டியே பாக்கொக் போஸ்ட் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
1956 கலவரத்தின் பின் ஈழத் தமிழன் கல்வியில் சிகரங்களைத் தொட்டான் !
1983 கலவரங்களின் பின் ஈழத் தமிழன் பொருளாதாரத்தில் சிகரங்களைத் தொட்டான் !
2009 பேரழிவிற்குப் பின் உலகத்தின் உன்னதங்களை தொடுவான்!
உலக
சரித்திரத்தில் ஒவ்வொரு இனத்திற்கும் மறக்க முடியாத சோகமான ஆண்டுகளாக சில ஆண்டுகள் இருக்கும். அந்தவகையில் 2009 ஈழத் தமிழினத்தின் மனத்தில் இருந்து அழிக்க முடியாத காயங்களை ஏற்படுத்திய ஆண்டாகும். 1956, 1983 ஆகிய இரு ஆண்டுகளும் சிங்கள இனவாதிகளின் கொடுந்தாக்குதலால் துயர் சுமந்த ஆண்டுகளாக பதிவு பெற்றது போல 2009ம் பதிவு பெறுகிறது. இந்த ஒவ்வொரு நிகழ்வும் சுமார் 26 ஆண்டு கால இடைவெளியில் ஏற்பட்டு வருகிறது.
புதியதொரு வருடமும் புதியதொரு தசாப்தமும் 2010 இல் பிறக்கின்றன. கடந்த தசாப்தங்களில் சிறிலங்கா அரசின் இனஅழிப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட வார்த்தைகளால் வடிக்க முடியாத இழப்புக்களையும் துயரையும் கடந்து உலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள் புதியதொரு தசாப்தத்தில் காலடி வைக்கின்றனர்.
ஐனவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளது. அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலிகளின் அறிவுறுத்தலுக்கேற்ப பொன்சேகாவையே ஆதரவளிக்க தீர்மானித்திருக்கிறார் என்று தேசிய முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் வன்னிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதாக அரசாங்கம் கூறினாலும், அவர்களில் பெரும்பாலானோர் சொந்த வீடுகளில் குடியிருக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
மன்னாரின் வடக்குப் பகுதி, வவுனியா வடக்கின் சில பகுதிகள், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்து வருகிறது.