இன்று இரவு 10 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் இலங்கையின் கொலைக்களம் டாக்குமென்டரிப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
அழுகையில்லை, ஆற்றாமையில்லை, பரிதவிப்பில்லை, தழுதழுப்பில்லை. குரலில் எந்தளவுக்கு அழுத்தம் தர முடியுமோ அந்தளவுக்கு அழுத்தமாக இதைக் குறிப்பிட்டுவிட்டு தன் கண்களை மூடிக் கொண்டார் கலைவாணி. தில்சனின் அம்மா என்றால் சட்டென்று புரிந்துவிடும். தினமும் தில்சன் அமர்ந்து டிவி பார்க்கும் இடத்திலிருந்துதான் கலைவாணி இதைச் சொன்னார் என்றதும் அவரது வார்த்தைகளில் இருந்த வலியை உணர முடியும்.
ஈழத்தமிழினத்தை அழிக்கும் நோக்கோடு வரலாறு காணாத படுகொலைப்படலத்தை அரங்கேற்றிய - இனவாத - சிங்களக்கொடுங்கோலரசின் முகத்திரயை, அனைத்துலக அரங்கில் தோலுரித்துக் காண்பித்த "சனல் - 4" தொலைக்காட்சியின் "சிறிலங்காவின் கொலைக்களம்" என்ற பெட்டக நிகழ்ச்சியை, கடந்த 4 ஆம் திகதி மீள் ஒளிபரப்பு செய்தமைக்காக ஏ.பி.ஸி. தொலைக்காட்சிச்சேவைக்கு ஒஸ்ரேலியத்தமிழர்கள் சார்பில் எமது உளமார்ந்த நன்றிகளைத்தெரிவித்து கொள்கின்றோம்.
அவுஸ்திரேலிய வானொலியான 3AW "சிறிலங்காவின் படுகொலைக்களம் காட்டிய உண்மைகளை ஆதாரமாக வைத்து அவுஸ்திரேலியா அரசு சிறிலங்கா மீது மனித உரிமை மீறலுக்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமா?" என்ற கருத்துகணிப்பை அவுஸ்திரேலியா முழுவதும் செய்துகொண்டிருக்கிறது.
உலகத் தமிழர் பேரவையானது (GTF) தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவுடன் (APPG-T) இணைந்து ஒரு நாடாளுமன்ற வரவேற்பு நிகழ்வை வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள போர்ட்கல்லிஸ் இல்லத்தின் அற்லி அறையில் (Attlee Suite of Portcullis House) 2011 சூலை 5ஆம் நாள்,
தமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சென்னையில் மனிதம் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
கரும்புலிகள் நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை.
நாம் எமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாளிலிருந்து எமது மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தினை மாற்று வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்கள். அதேவேளை எமது மக்களோடு சேர்ந்து, எமது இனத்தின் மீதான உரிமை மீறல்களைப் புரிந்துகொண்டு, அதற்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க அக்கறை செலுத்துகின்ற நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் நாம் ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்கத் தயாராகவேயுள்ளோம்.
சனல் 4 னை முடக்க சிங்கள அரசு செய்யும் சதியினை முறியடிக்க உலக தமிழனம்திரண்டு எழுந்து சனல் 4வின் கரங்களை வலுபட்டுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் எமக்கு உள்ளது .தயவு செய்து சிங்களத்தின் சதியினை முறியடிப்போம் மக்களே உங்களை கருத்துகளை உடன் எழுதி அனுப்புங்கள் .
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது. மே பதினேழு இயக்கம் சார்பாக 26ம் திகதி இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் ஈய்ந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது.
நேற்றைய தினம் ஆவரங்கால் புத்தூர் வாதரவத்தை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தூக்கில் தொங்கியநிலையில் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டது என்ற செய்தியைப் பலரும் படித்திருப்பீர்கள்.
இவரை சிலர் அடித்துக்கொலை செய்து பின்னர் தூக்கிலிட்டதாகவும் இவர் ஒரு முன்னாள் போராளி என்பதும் வெளியான செய்திகளே.