முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 53, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5152535455...607080...இறுதிப்பக்கம் »

27. 11. 2009: இன்னுயிரை மாய்த்த மாவீர்களின் கனவு நிறைவாக வேண்டும் – ரி.ஆர். ராஜேந்திரன்

இன்னுயிரை மாய்த்த மாவீர்களின் கனவு நிறைவாக வேண்டும் என்று இந்த மாவீரர் நாளையொட்டி இந்தியாவிலிருந்து ரி.ஆர். ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

27. 11. 2009: மாவீரர் இலட்சியக் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோம்!: நாடு கடந்த தமிழீழ அரசு

இன்று மாவீரர் நாள்! தமிழ்த் தேசியத்தைப் பேணவும், தமிழர் தாயகத்தை பாதுகாக்கவும், தமிழத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உருவம் கொடுக்கவும், தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பிரயோகிக்கவும் களமாடி, தமிழத் தேசிய இனத்தின் சுதந்திர வேள்விக்கு தம் உயிர்களை ஈந்த மாவீரர்களை பூசித்து வணங்கும் புனித நாள் இன்று.

27. 11. 2009: சீமான் இரவோடு இரவாக விமானத்தில் ஏற்றப்பட்டு நாடுகடத்தப்பட்டார்

கனடா அரசின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான கொள்கைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமானை கனடா அதிகாரிகள் இந்திய விமனத்தில் ஏற்றி நாடு கடத்தி விட்டதாகத் தெரிகிறது.

27. 11. 2009: சீமான் கனேடிய காவற்துறையால் தடுத்து வைப்பு? நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் எனத் தகவல்கள்?

தமிழகத்தின் திரைப்படத் தயாரிப்பாளரும் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.   விடுதலைப் புலிகளால் வருடாவருடம் நடாத்தப்படும் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொள்ள கனடா சென்ற அவர் நேற்று கனேடிய நேரம் இரவு இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரை பயங்கரவாதம் குறித்து கனடா பின்பற்றும் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக அமைந்தது என்ற வகையில் அவர் கனேடிய காவற்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

26. 11. 2009: தமிழர்களின் எதிர்பார்ப்பும், மாவீரர்தினமும்…

இலங்கையில் தமிழ்மக்களின் உரிமைக்காக உண்மையாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 18.5.2009 உடன் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் பல தமிழ் அரசியல்வாதிகளும் அவ்வறிவித்தலை தலைமேல் கொண்டு தாம்தான் தமிழினத்தின் உண்மைக் காவலர்கள் என்ற தோரணையில் தமிழ் மக்களின் மனங்களை மேலும் புண்ணாக்கி வருகின்றனர்.

26. 11. 2009: தமிழீழம் அடுத்த வல்லரசாக உருவாகும் என்ற அச்சத்தில் உலகமே ஒன்றுசேர்ந்து அதனை அழித்தது: கனடாவில் சீமான்

“பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் செல்லுமானால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான-தூய்மையான-நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசென்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்றுவிடுவான் என்ற பயம்.

26. 11. 2009: பிரபாகரன் இறப்பதில்லை வருவார்! கொஞ்சம் பொறுங்கள்!

ஈழத் தமிழர் வரலாற்றில் இருவர் என்றுமே இறப்பதில்லை ஒருவர் எல்லாளன் மற்றவர் பிரபாகரன். எல்லாளன் சமாதிக்கு விளக்கு வைத்த பொழுதில் கருவுற்றவர் பிரபாகரன். தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இன்று ( 26.11.2009 ) தனது 55 வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். யுத்தகளத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார் என்ற தகவலை பலர் வெளியிட்டுள்ளனர். ஆகவே அவர் வருவார் என்ற நம்பிக்கை விடுதலைப் புலிகள் அபிமானிகளிடையே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

26. 11. 2009: தமிழீழத் தேசியத்தலைவரின் 55வது அகவையை முன்னிட்டு சுவிஸ் பேர்ணில் இரத்ததானம்

தமிழீழத் தேசியத்தலைவரின் 55வது அகவையை முன்னிட்டு சுவிஸ் பேர்ணில் உள்ள பிரதான வைத்தியசாலையில் இரத்ததானம் வழங்க சுவிஸ்தமிழர் விளையாட்டுப்பிரிவின் கராத்தே அணியினர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளர். நீங்களும் விரும்பினால் இவ் இரத்ததானத்தில் கலந்து சிறப்பிக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் அறியத்தருகின்றனர்.

26. 11. 2009: 55 வது அகவையில் எங்கள் தலைவன்: வாழ்த்துக்கள்

வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை - எங்கள் தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை. தேசம் மீட்க படை  கட்டிய வீரன்.

26. 11. 2009: மாவீரர் நாளை முன்னிட்டு தமிழீழ வானொலியின் நேரடி ஒலிபரப்புக்கான அலைவரிசை வெளியிடப்பட்டுள்ளது

மதிப்புக்குரிய தமிழீழ மக்களே, தமிழக உறவுகளே, புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே, உலகவாழ் எம்முறவுகளே தமிழீழத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் வானொலியின் மாவீரர்வார சிறப்பு ஒலிபரப்புக்களை அனைத்துலகத்திற்கும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
பக்கம் 53, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5152535455...607080...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.