விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் தமிழீழ புலனாய்வுப் பிரிவின் சார்பில் நெருடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை. தளபதி ராம் மற்றும் நகுலனால் குழம்பிப் போயுள்ள புலம் பெயர் தமிழீழத்தை, தெளிவுபடுத்தும் அறிக்கையாகவே தமிழீழ புலனாய்வுப் பிரிவால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ தேசத்தின் காவற்தெய்வங்களை நெஞ்சில் நிறுத்திப் பூசிக்கும் தேசிய நினைவெழுச்சி நாளை 27.11.2009 வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகியிருக்கும் நிலையில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சதி நடவடிக்கைகளில் சில நாசகார சக்திகள் இறங்கியுள்ளன.
நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு பரவிக் கிடந்தது!
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடந்த கால மாவீரர் தின உரை நூல் வடிவில் வெளிவந்துள்ளது.
1989 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாவீரர் தினத்திலிருந்து கடந்த வருடம் வரை தேசியத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்ட மாவீரர் தின உரைகளின் தொகுப்பு, நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளது.
தனித்தமிழீழம் மீட்க தமதுயுரை தர்மப் போரில் ஆகுதியாக்கிய மாவீரரை நினைவு கொள்ளும் முகமாக கனடாவாழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து, ஒன்றிணைந்த இளையோர் மாவீரர் நாளை நவம்பர் 25ம் நாள் புதன்கிழமை அதாவது இன்று மலை நடாத்தவுள்ளனர்.
எந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார் 27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார். சங்கர் அவர்கள் வீரச்சாவு அடையும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு வே பிரபாகரன் அவர்கள் உடன் இருந்தார்.
வவுனியா வதைமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பெண்கள் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரால் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுவருவது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்தக்கொடூரம் குறித்து எந்த தகவல்களும் வெளிவராதபோதும் கடந்த ஒக்டோபர் மாதம் இதுதொடர்பான மூன்று வழக்குகள் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததை அடுத்து விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் என்பார்கள். இப்போது புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கொஞ்சக் காலமாக தமிழ்மக்களை வானிலிருந்து குண்டு போட்டும் தரையில் இருந்து செல் அடித்தும் மனிதப் படுகொலையை கச்சிதமா அரங்கேற்றின மகிந்த இராசபக்சேயின் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
"வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை.'' இப்படித்திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்றுக் காலை அலரி மாளிகையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரைச் சந்தித்த பின்னர், "உதயன்", "சுடர்ஒளி' நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் உரையாடிய போதே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடக் கூறினார்.
கறுப்பு தலைக்கவசமணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் யாழ். தினக்குரல், உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் கடிதங்களைக் கையளித்துச் சென்றுள்ளனர்.