முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 55, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5354555657...607080...இறுதிப்பக்கம் »

25. 11. 2009: திரு சீமான் அவர்கள் பங்கேற்கவுள்ள கனேடிய தமிழ் இளையோர் ஒன்றிணைந்து வழங்கும் மாவீரர் நாள் தொடக்க நிகழ்வு

தனித்தமிழீழம் மீட்க தமதுயுரை தர்மப் போரில் ஆகுதியாக்கிய மாவீரரை  நினைவு கொள்ளும் முகமாக கனடாவாழ் மாணவர்கள் அனைவரும் இணைந்து, ஒன்றிணைந்த இளையோர் மாவீரர் நாளை நவம்பர் 25ம் நாள் புதன்கிழமை அதாவது இன்று மலை  நடாத்தவுள்ளனர்.

25. 11. 2009: மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள் – உண்மை மனிதனின் முன்னால் உண்மை மனிதனின் கதை பிறந்த நாள்

எந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய  அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார்  27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார். சங்கர் அவர்கள் வீரச்சாவு அடையும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு வே பிரபாகரன் அவர்கள் உடன் இருந்தார்.

25. 11. 2009: தடுப்புமுகாம்களில் இலங்கை இனவாதப் படையினரால் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு! திடுக்கிடவைக்கும் சம்பவங்கள்!!

வவுனியா வதைமுகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்ப்பெண்கள் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினரால் பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுவருவது தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இந்தக்கொடூரம் குறித்து எந்த தகவல்களும் வெளிவராதபோதும் கடந்த ஒக்டோபர் மாதம் இதுதொடர்பான மூன்று வழக்குகள் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததை அடுத்து விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

25. 11. 2009: தப்புத்தாளம் போடும் சிவநாதன் கிஷோரும் நல்லதம்பி சிறிகாந்தாவும்!

பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் என்பார்கள். இப்போது புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன.   தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கொஞ்சக் காலமாக தமிழ்மக்களை வானிலிருந்து குண்டு போட்டும் தரையில் இருந்து செல் அடித்தும் மனிதப் படுகொலையை கச்சிதமா அரங்கேற்றின மகிந்த இராசபக்சேயின் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

25. 11. 2009: வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை – மஹிந்த திட்டவட்டமாக அறிவிப்பு

"வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை.'' இப்படித்திட்டவட்டமாகக் கூறிவிட்டார்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்றுக் காலை அலரி மாளிகையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரைச் சந்தித்த பின்னர், "உதயன்", "சுடர்ஒளி' நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் உரையாடிய போதே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடக் கூறினார்.

25. 11. 2009: இலங்கை அரச இனவாதிகளால் யாழ்ப்பணத்தில் இருந்து இயங்கும் பத்திரிகைகளுக்கு கொலை அச்சுறுத்தல்

கறுப்பு தலைக்கவசமணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் யாழ். தினக்குரல், உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் கடிதங்களைக் கையளித்துச் சென்றுள்ளனர்.

25. 11. 2009: வெளிப்படையாகச் சொல்லுங்கள், ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்? – ஜெகத் கஸ்பாரும் தமிழீழமும்…

கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்... மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

25. 11. 2009: தமிழ் மக்களினதும் போராளிகளினதும் பிணங்களின் மீது நடக்க முற்படும் கூட்டம்….?

கடந்தவாரம் இப்பத்தியிலே கிழக்கிலும் பின்பு வடக்கிலும் குறிப்பாக வன்னியிலும் பேரழிவை ஏற்படுத்திய அரசியல் இராணுவச் சூறாவளி இப்போது தெற்கு நோக்கி நகர்ந்து வந்துள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. நேரடியான இராணுவச் சூறாவளியா இல்லாவிடினும் அரசியல் சூறாவளியானது இராணுவத் தன்மை கலந்ததாக கொழும்பில் மையம் கொண்டுள்ளது.

25. 11. 2009: மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழீழ வானொலியில் நேரடி ஒலிபரப்பு

இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் முதன் முறையாக புலத்தில் இருந்து நேரடி அஞ்சல் செய்யப்பட விருக்கின்றது. புலிகளின் குரல் வானொலியில் செய்மதியூடாகவும், சிற்றலை வரிசை ஊடாகவும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படவிருக்கின்றது.

24. 11. 2009: கருணாநிதி தனது முதலைக் கண்ணீர் தொடரின் பாகம் இரண்டை இன்று வெளியிட்டுள்ளார் – எங்கள் தலைவனுக்காக தான் கண்ணீர் விட்டு அழுகின்றாராம்

பிரபாகரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி  வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பக்கம் 55, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5354555657...607080...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.