‘மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்று ‘பூம்புகார்’ திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது.
இன்றைய அரசியல் சதுரங்கக் காட்சிகளில் சர்வதேசத்தாலும் சிங்களத்தாலும் விடுதலைப் புலிகள் இல்லை என்றாகிவிட்ட நிலையில் நோர்வேயானது, தமிழர் இனவழிப்பைத் தொடர்ந்து செய்யும் சிறீலங்காவிற்குத் தோள்கொடுக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது.
தலைவன் பிறந்ததனாலும், விடுதலை பயணதத்தில் முதல் வித்து வீழ்ந்ததனாலும் கார்த்திகையே பெருமையடைந்தது. ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் மாத்திரமன்றி உலகத் தமிழர்களையும் தாண்டி உலக வல்லரசு நாடுகளை பொறுத்த வரையிலும் அதிக எதிர்பார்ப்பிற்கு உரியதாகவும் முக்கியத்துவம் மிக்கதுமாக ஒவ்வொரு கார்த்திகை மாதமும் அமைந்திருந்தது எவ்வளவிற்கு எவ்வளவு உண்மையோ அவ்வளவிற்கு அவ்வளவு ஏன் அதனைவிட அதிகமாக எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் வாய்ந்ததாக அமைந்துள்ளது இந்த கார்த்திகை மாதம்.
தமிழகத்தில் மீனவர்களுக்கிடையே எழுந்துள்ள எழுச்சியையும் சிங்கள அரசுக்கு எதிரான மீனவர் போராட்டத்தையும் மழுங்கடிக்கவும் அதை திசை திருப்பவும் நிகழ்வுகள் நடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர், இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் அருகே இந்திய கடலோர பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்தன. அப்போது அங்கு 15 காஸ் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றிவளைத்தனர்.
நீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் “ஓட்டிச்” சொல்லப்பட்டனர்.
பிரபாகரனை கொல்லச் சொன்னதே இந்தியாதான்!” – போட்டுத் தாக்கத் தயாராகும் பொன்சேகா : சரத் கார்டிஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா… இதுதான் இலங்கையில் புயலைக் கிளப்பி இருக்கும் பொன்சேகாவின் முழுப்பெயர். அம்பலங்கொடை தர்மாசோக்க கல்லூரியிலும், கொழும்பு ஆனந்தா கல்லூரியிலும் படித்த அவர், விளையாட்டு வீரராகவும் விளங்கியவர்.
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.
'போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்' என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா? பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா? என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்!
முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஈழத் தமிழர்கள் தமது படைபலத்தை மட்டும் இழக்கவில்லை, தமது அரசியல் பலத்தையும் சேர்த்தே இழந்துள்ளார்கள் என்பது தற்போதைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கதகளி நடனத்தினால் உணர்த்தப்பட்டு வருகின்றது.