முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 59, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5758596061...7080...இறுதிப்பக்கம் »

17. 11. 2009: புலம்பெயர்ந்த தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாமென தமிழர் அமைப்பு வேண்டுகோள்

ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளுக்கும் மற்றும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வது இனவெறி பிடித்த ஸ்ரீலங்கா அரசின் பணபலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்துவதோடு, இந்த நிதியானது தமிழர்களை வேரறுத்து அடிமைகளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்திற்கே போய்ச் சேரும் என்றும் விளக்கிக் கூறியுள்ளது.

17. 11. 2009: ஜனநாயக முலாமிடப்பட்ட இராணுவ ஆட்சி இலங்கையில் நிறுவப்படுமா

ஜெனல் சரத் பொன்சேகா குறித்து எழுப்பப்படும் சர்ச்சைகளுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது. தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஜெனரல் கையளித்துள்ளார். இராணுவச் சீருடையை அகற்றும்வரை அரசியல் பேசுவதை தவிர்க்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

17. 11. 2009: பேரினவாதத்தின் அடக்குமுறை மேலாண்மை மேலாதிக்கத் திமிர் மீண்டும் ஒருமுறை தனது குரூரத்தை வெலிக்கடைச் சிறைக்குள் நேற்றுக் காட்டியிருக்கின்றது

அங்கு தமிழ்க் கைதிகள் மீது காவலர் தரப்பு சீற்றம் கொண்டு தாக்கியதில் பதினேழு கைதிகள் படுகாயமடைந்திருக்கின்றனர். அவர்களில் ஏழு பேரின் நிலைமை மோசமாக உள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுமக்களைக் கைதிகளாக்குகின்ற அரசே அவர்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பு.  அந்தக் கடப்பாட்டிலிருந்து  அரசு  அரசுத் தலைமையும் அதிகாரிகளும்  எக் காரணம் கொண்டும் தப்பிப்பிழைக்க முடியாது; எந்தச் சாக்குப் போக்குச் சொல்லியும் அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

17. 11. 2009: வெலிக்கடை சிறையிலும் தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் நேற்று மேற்கொண்ட உண்ணாவிரதத்தின்போது கைதிகளுக்கும் சிறைச்சாலை காவலர்களுக்கும் இடை யில் கைகலப்பு இடம்பெற்றது. இக் கைகலப்பில் இரண்டு தமிழ் கைதிகள் காயமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12. 11. 2009: விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்தே நான் எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் – சரத் பொன்சேகா

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது தாம் நம்பிக்கை இழந்திருப்பதாக கூட்டுப்படைகளில் தலைமையதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.  இதனால் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக தொடர்ந்தும் பணியாற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு  ஜெனரல் சரத் பொன்சேக்கா பதவியிலிருந்து ஓய்வுபெறும் கடிதத்தை இன்று பிற்பகல் 1.30 அளவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பியிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

12. 11. 2009: கடலில் தத்தளிக்கும் எம் மக்களை காப்பற்ற இங்கே உடனடியாக வாக்களியுங்கள்

கொடிய சிறிலங்கா நாட்டில் இருந்து உயிர் தப்புவதற்காக படகுகளில் சென்று 3 வாரங்களாக எதுவித முடிவுகளும் கிடைக்காது அவதியுறும் அகதிகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவுஸ்திரெலியா அரசு சொல்கிறது.

11. 11. 2009: இலங்கையின் விசாரணைக் குழுவை சர்வதேச சமூகம் நம்ப வேண்டாம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை பற்றி ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

11. 11. 2009: சர்வதேச மன்னிப்புச்சபை தமிழ் படகு அகதிகளுக்கு நீதி வழங்குமாறு நடத்தும் போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்கேற்போம்

சர்வதேச மன்னிப்புச்சபை தமிழ் படகு அகதிகளுக்கு நீதி வழங்குமாறு நடத்தும் Petition போராட்டத்தில் ஒவ்வொருவரும் பங்கேற்போம்.

10. 11. 2009: வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்புத் தொடர்பாக பிரான்ஸ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கை

வட்டுக்கோட்டை தீர்மானம்? தமிழன் தமிழனாக நின்று  ஆங்கிலேய, சிங்கள காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற 28 வருட இனவெறி ஆட்சியின் கொடூரப்பிடியிலிருந்து 28 வருட ஆட்சிப்போராட்டத்திற்கு பின் தந்தை செல்வாவின் தலைமையில் அனைத்து தமிழ்கட்சிகளும் ஒண்றிணைந்து எடுக்கப்பட்ட தீர்மானமே வட்டுக்கோட்டை தீர்மானம்! தமிழர் மனதில் வட்டுக்கோட்டை என்ற சிறு நகரம் சரித்திரத்தில் அதன் பெயர் நிலைநாட்டப்பட்டு தமிழ் மக்களின் விடுதலைக்கு அடுத்து வரும் தலைமுறையினர் சுதந்திரமாக ஒரு தேசிய இனமாக தமது பாரம்பரிய தாய்நிலத்தில் தன்னாட்சியுடன் சுபீட்சமாக வாழ இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அதை ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் அதிகார பூர்வமாக அங்கீகரித்தார்கள்.

10. 11. 2009: உலகம் மறந்துபோக முற்பட்ட உண்மைகளை மீண்டும் உரத்துக் கூறியவர்கள்

புகலிடத்தஞ்சம் கோரி ஈழத்தமிழ் மக்கள் பயணித்த கப்பலொன்று இந்தோனேசிய கடற்பரப்பை சென்றடைந்ததுடன், அது அவுஸ்திரேலியாவை நோக்கி பயணிக்க முயன்றமை அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் பல அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.
பக்கம் 59, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5758596061...7080...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.