முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 6, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...45678...203040...இறுதிப்பக்கம் »

04. 07. 2011: இந்தியாவை எதிர்த்து முதல்முறையாக பிரித்தானியா எச்சரிக்கை உலகத் தமிழர் பேரவை அறிவிப்பு ! (காணொளி இணைப்பு)

உலகத் தமிழர் பேரவையானது (GTF) தமிழருக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவுடன் (APPG-T) இணைந்து ஒரு நாடாளுமன்ற வரவேற்பு நிகழ்வை வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள போர்ட்கல்லிஸ் இல்லத்தின் அற்லி அறையில் (Attlee Suite of Portcullis House) 2011 சூலை 5ஆம் நாள்,

04. 07. 2011: ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தை மீது பாலியல் பலாத்காரம்! தமிழ்நாட்டில் சம்பவம் (காணொளி இணைப்பு)

தமிழ்நாடு புதுப்பட்டு அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழ் அகதியின் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி அந்த முகாமில் உள்ள சுமார் 700 அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சென்னையில் மனிதம் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

03. 07. 2011: காலத்தின் கட்டாயம் தான் கரும்புலிகளை உருவாக்கியது; தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட எமது தற்கொடையாளர்களின் கனவை நாம் என்றென்றும் நெஞ்சில் நிறுத்திப் பூசிப்போம் – தமிழீழ விடுதலைப் புலிகள்

கரும்புலிகள் நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை. நாம் எமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாளிலிருந்து   எமது மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தினை மாற்று வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்கள்.  அதேவேளை எமது மக்களோடு சேர்ந்து, எமது இனத்தின் மீதான உரிமை மீறல்களைப்  புரிந்துகொண்டு, அதற்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க அக்கறை செலுத்துகின்ற நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் நாம்  ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்கத் தயாராகவேயுள்ளோம்.

02. 07. 2011: சனல் 4 னை முடக்க சிங்கள அரசு செய்யும் சதியினை முறியடிப்போம் – தமிழர்களே எழுக…!

சனல் 4 னை முடக்க சிங்கள அரசு செய்யும் சதியினை முறியடிக்க உலக தமிழனம்திரண்டு எழுந்து சனல் 4வின் கரங்களை வலுபட்டுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் எமக்கு உள்ளது .தயவு செய்து சிங்களத்தின் சதியினை முறியடிப்போம் மக்களே உங்களை கருத்துகளை உடன் எழுதி அனுப்புங்கள் .

29. 06. 2011: பெருந்தீயாய் சுட்டெரிக்கட்டும்… தமிழக தலைவர்கள் ஆவேசம் (காணொளி இணைப்பு)

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது. மே பதினேழு இயக்கம் சார்பாக 26ம் திகதி இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் ஈய்ந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடை பெற்றது.

28. 06. 2011: தூக்கில் தொங்கிய போராளி பொலித்தீனால் மூச்சடக்கி கொல்லப்பட்டாரா? வெளிவராமல் மூடிமறைக்கப்பட்ட செய்திகள் என்ன? இச் சம்பவத்தின் பின்னணி என்ன?

நேற்றைய தினம் ஆவரங்கால் புத்தூர் வாதரவத்தை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தூக்கில் தொங்கியநிலையில் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டது என்ற செய்தியைப் பலரும் படித்திருப்பீர்கள். இவரை சிலர் அடித்துக்கொலை செய்து பின்னர் தூக்கிலிட்டதாகவும் இவர் ஒரு முன்னாள் போராளி என்பதும் வெளியான செய்திகளே.

27. 06. 2011: இலங்கை இனவாதிகளுடன் சேர்ந்தியங்கும் நந்தகோபன் ஊடாக அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் உடைக்கப்பட்டது ! அதிர்சித் தகவல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் ஊடறுப்பு நடாத்தப்பட்டுள்ளதாக உடைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களின் ஒன்றாக அன்று செயற்பட்ட அனைத்துலக செயலகத்தில் ஊடகங்களுக்கான இணைப்பாளராக விளங்கிய நந்து என்று அழைக்கப்படுகின்ற நந்தகோபன் என்ற நபர் ஊடகவே இந்த மின்னஞ்சல் உடைப்பை சிங்கள புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ளதாக அந்த சிங்கள நாளேட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27. 06. 2011: “தமிழர் பிரதிநிதிகளுக்கு அன்பான ஓர் வேண்டுகோள்” – சிங்கத்தின் குகையிலிருந்து ஒரு குடிமகன்

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில் எமது குரலினை இனியும் நாம் தனித்தனியே நின்று ஒலிப்பதா? அல்லது தமிழர் தரப்புக்கள் எனச்சொல்லிக்கொள்ளும் சக்திகளும் உலக தமிழர்களும் ஒன்றுசேர்ந்து குரல்கொடுப்பதா? என்பதை எல்லோரும் தாமதிக்காது முடிவெடுக்கவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நிற்கின்றோம்.

27. 06. 2011: சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தீபம் தொலைக்காட்சி சென்று கொண்டிருக்கிறதா?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நெருக்கடிமிகுந்த வேளையில் புலம்பெயர்தேசங்களில் புதிய பரிமானத்தோடு விடுதலைப் போராட்டத்தை சர்வதேச ரீதியில் வீச்சாக்க வேண்டியது இன்றைய புலம்பெயர் மக்களின் தலையாய கடமையாகும்.

25. 06. 2011: நாடுகடந்த தமிழீழ அரசை அவமதித்தாரா சீமான்? (ஆதாரக் காணொளி இணைப்பு) – உலகத் தமிழர்களுக்கு சீமான் விளக்கம் கொடுப்பாரா?

புலம்பெயர்ந்த மக்களையும் தமிழக உறவுகளையும் ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்லும் முயற்சியில் உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு செயற்படுவதை அண்மைக்காலங்களில் மிகவும் வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. என்று இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் சேரமான் கும்பல் ஈழமுரசுபத்திரிகையில் (21/06/2011) அன்று பிரசுரித்து இருந்தனர்.
பக்கம் 6, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...45678...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.