முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 60, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5859606162...7080...இறுதிப்பக்கம் »

10. 11. 2009: தமிழீழம் பெற்றெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இலங்கை இனவாதிகளுடன் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டுள்ளது – இவர்களை வரலாறு மன்னிக்குமா??

வடக்கு கிழக்கு மாநகரச சபைகளைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, டெலோ, ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்கள் இன்று உத்தியோகபூர்வமாக லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக் கொண்டனர்.

09. 11. 2009: தடுப்பு முகாம்களில் விடுதலைப்புலிகளின் துண்டு பிரசுரங்கள்! – மக்களை தடுத்து வைத்து கொடுமைப்படுத்துவதற்க்கான இலங்கை இனவாதிகளின் சதியா??

தமிழீழ விடுதலைப்புலிகளால் எழுதி ஒட்டப்பட்டதாக கூறப்படும் துண்டு பிரசுரங்கள் தடுப்பு முகாம்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைவர் பிரபாகரன் இருப்பதாகவும், அவர் தலமையில் போராட்டம் தொடரும் எனவும் அத்துடன் இராணுவத்தினருடன் சேர்ந்து யாரையும் செயற்படவேண்டாம் எனவும் வாசகங்களில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

09. 11. 2009: சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 329 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் உதவியின் இரண்டாம் தவணைக்கான கடன் உதவியை இலங்கைக்கு வழங்க நிதியத்தின் நிறைவேற்று சபை கடந்த 6ம் திகதி அனுமதி வழங்கியுள்ளது.

09. 11. 2009: எமது மக்களின் ஒற்றுமையை எம்மவர்களையே வைத்து பிளவுகளை ஏற்படுத்தி போராட்டத்தை குலைக்கும் முயற்சியில் இலங்கை அரசு

புலம் பெயர் தமிழர் போராட்டமும் அது எதிர்கொள்ளும் சவால்களும் ஈழத்தமிழர் போராட்டம், புலம் பெயர் தமிழ்மக்களின் கரங்களுக்கு வந்தடைந்துள்ள நிலையில், அரசியல் மயப்படுத்தப்பட்ட தாயகம் நோக்கிய இந்த புனிதப் பணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து வருகின்ற இந்த முக்கிய காலப்பகுதியில் இதனை சிதைக்கும் பல நடவடிக்கைகளும் , சதிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

09. 11. 2009: தற்போதய சூழலில் புலம்பெயர் தமிழீழம் செய்ய வேண்டியது என்ன – தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக அறிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை செயலகத்தால் நெருடலுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ள ஊடக அறிக்கை. இப்போது உள்ள சூழலில் புலம்பெயர் தமிழீழம் என்ன செய்ய வேண்டும் என்பதற்க்கான முழு விளக்கம்.

08. 11. 2009: இந்திய, தமிழக துரோகங்களுக்குள் நாம் முடக்கி விட்டால் இனி தமிழன் சூடு ‐ சுரணையற்றவன் என்ற தீராப்பழிதான் நம்மீது சுமத்தப்படும் – பொங்குமா புலம்பெயர் தமிழீழம்??

ஈழப் போருக்குப் பின் முகாம்களில் வதைபடும் ஈழத் தமிழ் மக்களின் நிலைமையை அறியுமுகமாக ஐந்து நாட்கள் பயணமாக தமிழக எம்.பிக்கள் கடந்த மாத்தில் இலங்கைக்குச் சென்று வந்துள்ளனர். மேள தாள வரவேற்பு, மாலை மரியாதைகள், ஆடல், பாடல்கள் என திருமணவிழாவிற்கு வருபவர்களைப் போல தமிழகத் தூதுக் குழுவினருக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்தது சிங்கள அரசு.

07. 11. 2009: தமிழருக்கு தகரம் சிங்களவருக்கு இரயில்

இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்து வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டத் தமிழர்கள் ‘விடுவிக்கப்பட்டு’ தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது அவர்கள் வீடு கட்டிக் கொள்ள 2,600 டன் மின் முலாம் பூசப்பட்ட துத்தநாகத் தகடுகள் (Galvanized corrugated sheets) அனுப்பி வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

06. 11. 2009: தமிழகத்தில் உள்ள நாங்களும் கம்பி வேலிகளுக்கு இடையில்தான் வசிக்கிறோம் ‐ தமிழக அகதி முகாம்களின் அவலம்

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதி முகாம்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரச்சனைகள் இருப்பதாகவும். அவைகளைக் களையவும். அகதிகளின் வாழ்வை மேம்படுத்தவும் 12 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியிருப்பதாகவும் அண்மையில் அறிவித்தார். தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.

06. 11. 2009: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் யோசனையை அரசாங்கம் நிராகரித்துள்ளது

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களின் நிர்வாகத்திலிருந்து இராணுவத்தினரை அகற்றிவிட்டு அதனை சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும் அந்த முகாம்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் செல்வதற்கு அனுமதிக்குமாறும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நேற்று நிராகரித்துள்ளது.

06. 11. 2009: மாவோயிஸ்ட் – புலிகள் உறவு! இலங்கை இனவாதிகள் சொல்ல வரும் செய்தி என்ன? – இந்த புரளியின் பின்னணியில் “றோ”

தமிழீழ விடுதலைப்புலிகளின் நன்கு பயிற்சி பெற்ற 12 பேர் கொண்ட அணியினர் ஆந்திரா ஊடாக ஊடுருவி  மாவோயிஸ்டுக்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளதாகவும் அந்த பயிற்சியினை கொண்டே இந்திய படையினருடன் மாவோயிஸ்டுக்கள் கடும் சண்டை புரிவதாகவும் அமைச்சர் ராஜீவ விஜய சிஙக குறிப்பிட்டுள்ளார்.
பக்கம் 60, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5859606162...7080...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.