முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 61, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5960616263...7080...இறுதிப்பக்கம் »

06. 11. 2009: விடுதலைப் புலிகள் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய மாவோயிஸ தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சின் செயலளார் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.   இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு அந்நாட்டில் வைத்து இந்த பயிற்சிகளை புலிகள் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

06. 11. 2009: இலங்கை பயங்கரவாதிகளால் கே.பி. கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரும், முன்னாள் சர்வதேசத் தொடர்பாளருமான கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் இலங்கைப் புலனாய்வுப்பரிவினரால் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி லங்கா கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

06. 11. 2009: பெல்ஜியத்தில் மாவீரர் நாள் 2009

06. 11. 2009: பிரான்சின் பல பாகங்களிலும் நடை பெறவுள்ள மாவீரர் நாள் பற்றிய அறிவிப்புகள்

பிரான்சின் பல பாகங்களிலும் நடை பெறவுள்ள மாவீரர் நாள் பற்றிய அறிவிப்புகள்.

05. 11. 2009: “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” பாடல் வெளியிடப்பட்டுள்ளது

பாடல்: வட்டுக்கோட்டைத் தீர்மானம் பாடியவர்: கிஷ்ணராஜ் பாடவரி: வசீகரன் இசை: உதையா @ Yahoo! Video

05. 11. 2009: தமிழீழ தேசியத் தலைவரின் பெற்றோர் 4ம் மாடியின் சித்திரவதைக்குள்….

பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.

05. 11. 2009: புது மாத்தளனில் இராணுவத்தினரால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மனைவியைக் காணவில்லை – கணவர் முறைப்பாடு

கடந்த மே மாதம் புது மாத்தளன் பகுதியினை இராணுவத்தினர் ஆக்கிரமித்த போது  பதுங்கு குழியில் பாதுகாப்பிற்காக இருந்த காயமடைந்த தனது மனைவி இராணுவத்தினரால் சிகிச்சைக்காக அநுராதபுரத்திற்குக் கொண்டு சென்ற பின்பு அவர் இருக்குமிடம் தெரியாது உள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

05. 11. 2009: சகோதரனைக் காப்பாற்றுமாறு மகிந்தா இந்தியாவிடம் உதவி!! உதவக்கூடாது என்கிறார் நெடுமாறன்

கோத்தபாய ராஜபக்சவையும், ஜெனரல் சரத்பொன்சேகாவையும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா உதவக்கூடாது என தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

05. 11. 2009: தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் தலைமையிலான எதிரணியில் சேரும் வாய்ப்பு இல்லை

இன்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அழைத்த எதிரணி கூட்டணியின் உறுப்பினர்கள் தமது ஐக்கிய தேசிய முன்னணியில் இணையுமாறு அழைப்பு விடுத்ததுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினையும் வழங்கியுள்ளனர்.

04. 11. 2009: தமிழீழத்தால் பெற்றெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்காக?

நேற்று பாராளுமன்றத்தில் எதிரணிகளின் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணி அங்குராற்பண வைபவம் இடம்பெற்றது. இதில் 12 கட்சிகள் பங்கெடுத்து கொண்டுள்ளன. இந்த எதிரணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரச கட்சிக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அணி திரண்டுள்ள எதிர்க்கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முன்னணி என்பது குறிப்பிடதக்கது.
பக்கம் 61, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...5960616263...7080...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.