முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 68, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...6667686970...80...இறுதிப்பக்கம் »

16. 10. 2009: எமது கவலையைப் பற்றிப் பேசியவாறு எமது கடமையை மறந்தவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறோம் – இது சரியா? இது தகுமா?

வன்னியில் நடைபெற்ற இறுதிக் கட்டத் தாக்குதல்கள் என வர்ணிக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இருந்து தப்பியோடி வவுனியா வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுச் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கும் மக்களை விடுவிக்கக் கோரி புலம்பெயர் மக்களால் நடாத்தப் பட்டுவரும் போராட்டங்கள் பரவலாக சகல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன.

16. 10. 2009: முதல்வர் கருணாநிதி இலங்கை அரசின் கைப்பாவையா?

இலங்கை விவகாரம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கை அதிபர் ராஜபட்சே கடிதம் எழுதியதன் அடிப்படையிலேயே அங்கு எம்.பி.க்கள் குழு அனுப்பப்பட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ள செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

15. 10. 2009: தமிழின் “பெருமை”யும் “இலங்கை”யின் சிறுமையும்

"பிரபாகரன் என்ற மனிதர் உயிரோடு இருக்கிறார்.அவரால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டுக்கோப்புடன் இருக்கிறது. சிங்களப் படைகளின் அராஜகங்களை எதிர்க்கவும், பதிலடி கொடுக்கவும் முடிந்த பலத்துடன் இன்றும் களத்தில் நிற்கிறது ………." என்னும் நிலை ஈழ மண்ணில் நிலவி வந்தபோது, பதுங்கிக் கிடந்த சிலர்; இப்போது.. இவை எதுவுமே இல்லை 'ஈழக் கனவு கலைக்கப்பட்டுவிட்டது'- இனி இலங்கையர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள், ‘தமிழர்’கள் அல்ல என்று ராஜபக்‌ஷே அறைகூவல் விடுத்த பின்னர் – துணிந்து தங்கள் புற்றுகளிலிருந்து வெளியே வந்து…. "நாங்கள் தமிழரல்ல; இலங்கையர்கள்" என்று கூறத்தொடங்கியுள்ளார்கள்.

15. 10. 2009: தனது மக்களை காப்பற்றப் புறப்படப் போகின்றதா அல்லது தனது சுகபோக வாழ்க்கையில் தீபாவளியை கொண்டாடப் போகின்றதா பிரித்தானியா புலம்பெயர் தமிழீழம்

வதைமுகாங்களில் எமது உறவுகள் அடைக்கப்பட்டு 150 நாட்களாவதை குறிக்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையும் பிரித்தானிய இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாபெரும் பேரணி அக்டோபர் மாதம் 17ம் திகதி சனிக்கிழமை லண்டனின் மையப்பகுதியில் நடைபெறப்போகின்றது.

14. 10. 2009: தீபா”வலி”யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

14. 10. 2009: வவுனியாவில் கடும் மழை – 1500க்கு மேற்பட்டோர் முகாம்களுக்குள் இருக்க முடியாதவாறு பெரும் அவதி மக்களுக்கும் படையினருக்கும் இடையே முறுகல்

வவுனியாவில் இன்று மாலையிலிருந்து கடும் மழை பொழிய  ஆரம்பித்துள்ளது. கடந்த ஓகஸ்ட்டில் பொழிந்தது போன்ற கடும் மழை இது என வவுனியாவிலிருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வவுனியாவின் முகாம்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

14. 10. 2009: லண்டன் பேரணிகளுக்கு புலம்பெயர் தமிழீழ தேசம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்

புலம் பெயர் தமிழர்களின் போராட்டத்தில் லண்டன் பேரணிகள் மிகவும் காத்திரமான பங்கினை வகிக்கின்றன. இப்பேரணிகள் பிரித்தானிய அரசியலில் சில மாற்றங்களிற்கான அழுத்தத்தை கொடுத்தது என ஆய்வாளர்கள் நம்புகின்றார்கள்.

14. 10. 2009: தமிழக அரசியல் தலைமைகள் மீது ஈழத்தமிழர்கள் இன்னும் நம்பிக்கைகொண்டுள்ளனர்

"வாய்மூடி மௌனியாக இருக்கும் கூட்டமல்ல நாங்கள்,வாளெடுத்து மானம் காக்கும் மானத்தமிழினம் நாங்கள்”இந்த வசன நடையை எங்கோ ஒரு நாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான திரைப்படத்தில் கேட்ட ஞாபகம்.

13. 10. 2009: மீள் குடியேற்றம் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு – அல்-ஜசீரா

பருவ மழைக்கு முன்னர் முகாமில் உள்ள மக்களை குடியேற்றுமாறு சர்வதேச சமூகம் விடுத்தவேண்டுகொளை இலங்கை அரசு புறக்கணித்துள்ளதாக அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

13. 10. 2009: ஈழத் தமிழனுக்குரிய விதியா இது?

குழந்தையோடு களியும் பொழுதுகளும், மனைவியின் மூச்சுக்காற்றும் இன்றி ஆளுக்கொருவராய் பிரித்தடைக்கப்பட்ட முகாம்களுக்குள் நான் வாழவில்லை. ஒப்பீட்டளவில் மிக மிக வசதியான ஒரு அருவருக்கத் தக்கம் கசடுகளும், கசப்பும் நிறைந்த ஒரு வாழ்வையே வாழ்கிறோம். ஆனாலும் உறவுகளோடு கரைகிற பொழுதுகளோடுதான் இது பற்றி குற்ற உணர்வோடு பேச வேண்டியிருக்கிறது.
பக்கம் 68, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...6667686970...80...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.