முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 69, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...6768697071...80...இறுதிப்பக்கம் »

14. 10. 2009: தீபா”வலி”யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

14. 10. 2009: வவுனியாவில் கடும் மழை – 1500க்கு மேற்பட்டோர் முகாம்களுக்குள் இருக்க முடியாதவாறு பெரும் அவதி மக்களுக்கும் படையினருக்கும் இடையே முறுகல்

வவுனியாவில் இன்று மாலையிலிருந்து கடும் மழை பொழிய  ஆரம்பித்துள்ளது. கடந்த ஓகஸ்ட்டில் பொழிந்தது போன்ற கடும் மழை இது என வவுனியாவிலிருந்து ஜீரீஎன்னிற்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக வவுனியாவின் முகாம்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

14. 10. 2009: லண்டன் பேரணிகளுக்கு புலம்பெயர் தமிழீழ தேசம் ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்

புலம் பெயர் தமிழர்களின் போராட்டத்தில் லண்டன் பேரணிகள் மிகவும் காத்திரமான பங்கினை வகிக்கின்றன. இப்பேரணிகள் பிரித்தானிய அரசியலில் சில மாற்றங்களிற்கான அழுத்தத்தை கொடுத்தது என ஆய்வாளர்கள் நம்புகின்றார்கள்.

14. 10. 2009: தமிழக அரசியல் தலைமைகள் மீது ஈழத்தமிழர்கள் இன்னும் நம்பிக்கைகொண்டுள்ளனர்

"வாய்மூடி மௌனியாக இருக்கும் கூட்டமல்ல நாங்கள்,வாளெடுத்து மானம் காக்கும் மானத்தமிழினம் நாங்கள்”இந்த வசன நடையை எங்கோ ஒரு நாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவான திரைப்படத்தில் கேட்ட ஞாபகம்.

13. 10. 2009: மீள் குடியேற்றம் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு – அல்-ஜசீரா

பருவ மழைக்கு முன்னர் முகாமில் உள்ள மக்களை குடியேற்றுமாறு சர்வதேச சமூகம் விடுத்தவேண்டுகொளை இலங்கை அரசு புறக்கணித்துள்ளதாக அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

13. 10. 2009: ஈழத் தமிழனுக்குரிய விதியா இது?

குழந்தையோடு களியும் பொழுதுகளும், மனைவியின் மூச்சுக்காற்றும் இன்றி ஆளுக்கொருவராய் பிரித்தடைக்கப்பட்ட முகாம்களுக்குள் நான் வாழவில்லை. ஒப்பீட்டளவில் மிக மிக வசதியான ஒரு அருவருக்கத் தக்கம் கசடுகளும், கசப்பும் நிறைந்த ஒரு வாழ்வையே வாழ்கிறோம். ஆனாலும் உறவுகளோடு கரைகிற பொழுதுகளோடுதான் இது பற்றி குற்ற உணர்வோடு பேச வேண்டியிருக்கிறது.

13. 10. 2009: மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்ட தமிழ்ச் சமூகம்

இலங்கையின் பழைய நாடாளுமன்றம் இது. ரம்மியமான கடற்காற்று வீசும் காலிமுகத்திடலுக்கு அண்மித்து இருக்கும் பழமைவாய்ந்த கட்டடம்.   இலங்கையின் சிறுபான்மை இனத்தவரை கசக்கிப் பிழிந்த சட்டங்கள் பற்றியும் தீர்மானங்கள் பற்றியும் இந்தப் பழமைவாய்ந்த நாடாளுமன்றத்தின்  ஒவ்வோர் சுவர்களுக்கும்  நன்கு தெரியும்.
Tags:

12. 10. 2009: கலங்க வைக்கும் கடிதங்கள்! – ஜெகத்கஸ்பர்

சஞ்சனாதேவிஎனக்கு முதற் கடிதம் எழுதியது 1996 ஜனவரி மாதத்தில் என்று நினைக் கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து சந்திரிகா குமாரதுங்கே ஏவிய சிங்களப் படைகளால் அடித்து விரட்டப்பட்டு வன்னி அக்கராயன் குளம் பகுதியில் அகதி யாகிய நாட்களில் அவர் எழுதிய கடிதம் அது.

11. 10. 2009: ‘எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களை மரணத்திலிருந்து காப்பாற்றுங்கள்!!’ என்று எங்கள் உறவுகள் அவலக் குரல் எழுப்புகிறார்களே… எங்கே போய்விட்டீர்கள்?

‘நாங்கள் இங்கு இறக்கப் போகின்றோம். அதற்கு முன்பாக எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறி அழும் வவுனியா வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் உறவுகளின் அவலக் குரல்கள் எங்களுக்குக் கேட்கிறதோ, இல்லையோ உலகின் மனச்சாட்சியை உருக வைத்துள்ளது.

11. 10. 2009: விடுதலைப்போரை விலை பேசுவோரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத் தமிழினம் மிக மோசமானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் வழிகாட்டியாக- அவர்களின் உரிமைக்குரலாக ஓயாமல் இயங்கிய புலிகள் இயக்கமும், அதன் தலைமைத்துவமும் இல்லாது போயுள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை இது.
பக்கம் 69, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...6768697071...80...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.