சர்வதேசத்தின் கவனத்தை போர்க்குற்றவாளியாக ஈர்த்துள்ள சிறீலங்காவின் அரசத் தலைவர், மகிந்த ராஜபக்சேவின் கட்சியில் அங்கத்தவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ள சிறீலங்கா துடுப்பாட்ட வீரர் "சனத் ஜெயசூரியவை" 25-06-2011 அன்று இங்கிலாந்தில் நடைபெறவுள்ள துடுப்பாட்டத்தில் பங்குகொள்ளவிடாது தடுத்து விரட்டுவோம்.
ஒலிம்பிக் பந்தத்தை தமிழர் தாங்க உலக தமிழ் மக்களே இவருக்கு விரைந்து உங்கள் வாக்கை அளியுங்கள்.
Contact Nimalan on 07877204123 or nimalan@live.co.uk
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்” ஆவணப்படம் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா சிறிலங்கா படை அதிகாரிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஆவணப்படம் போலியானது, இந்தியாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது.
சர்வதேசம் இலங்கை மீதான அழுத்தத்தினை வலுவாக்கிவரும் இன்றைய சூழலில் அதன் அழுத்தங்களில் இருந்து மீண்டெழுவதற்காக கடும் பிரயத்தனத்தில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. அரசாங்கம் சர்வதேச சமூகம் கொடுக்கின்ற நெருக்கடி நிலையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குப் பயன்படுத்தும் ஆயுதங்களில் முக்கிய இடத்தினைப் பெற்றிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
பிரித்தானிய தமிழர் பேரவையை எமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் நினைத்தபடி செயல்பட விடக்கூடாது, அத்தோடு உலகத் தமிழர் பேரவையின் நடவடிக்கைகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டென்மார்க் மக்களவை உறுப்பினர் ஸ்கைப்பில் பேசியது ஒலிநாடாவாக வெளியாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது,
இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி!
அழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
உலகை உறைய வைத்துக் கொண்டிருக்கும் சிறீலங்கா இனவாத அரசின் பயங்கரவாத இராணுவத்தின் கொலைக்களம் இன்று இரவு 23.00 மணிக்கு சனல் 4 ல் வெளிவர இருக்கிறது.
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களைப் பூர்வீகத் தாயகமாகக் கொண்டுள்ள ஈழத்தமிழர்கள், சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து தங்களது அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதற்காகக் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றார்கள். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான இந்த நீண்ட சுதந்திரப் போராட்டத்தினை நாம் வரலாற்றில் மூன்று காலகட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவதாக, 1956-1977 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தந்தை செல்வா அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் சுயாட்சி உரிமைக்கான அகிம்சை தழுவிய அறவழிப் போராட்டம்.
ஆயுதங்களை மௌனித்து விட்டதாக விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாகவும் நாடு கடந்த அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களிற்கு விடுத்த அறிவிப்பை திசை திருப்புமுகமாகவும் இன்று அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட பரம்பரை மீண்டும் தன்மானத்துடன் வாழ, நாதியற்று வாழும் எம்மக்களுக்கு நீதி கிடைக்க ஓவ்வொரு தமிழனும் தனது பங்கைத் தவறாமல் செலுத்தி இறைமையும், சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை மீள் அமைப்போம் என சூளுரைத்துத் தொடங்கிய நாடுகடந்த தமிழீழ அரசை, ஈழத்தமிழர்களின் கனவை, உலகத் தமிழரின் விருப்பை ஊதாசீனம் செய்து பிரிந்து செய்வது சரியா, பிழையா, முறையா, நேர்மையானதா என ஒரு கணம் சிந்தியுங்கள்.