முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 71, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...6970717273...80...இறுதிப்பக்கம் »

07. 10. 2009: தமிழர்களுக்கு கட்டுநாயக்காவில் நடந்த ஒரு கொடூரமான உண்மை சம்பவம் இது

அந்த இளைஞன் அழைத்துச் செல்லப்படுகிறான். அந்த ஒடுகலான நடைபாதையைக் கடந்து எதிரே இருந்த அறைக்குள் அவன் இழுத்துச் செல்லப்பட்டுதும் அறைக்கதவு தாழிடப்படுகிறது. அவன் எதிர்பார்க்காத கணமே அவன் முகத்தில் குத்து விழுகின்றது. சுதாகரிப்பதற்குள் அடுத்த அடி கன்னத்தில் பாய்கிறது.

04. 10. 2009: கிளிநொச்சியில் இன்று பாரிய குண்டு வெடிப்பு – இது அதனால் என்று அரசாங்கம் உண்மைத்தன்மையை மறைத்துள்ளது

இன்று காலை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரின் 58 வது படைப்பிரிவின் முகாமில் பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாகக் கேட்ட இக் கூண்டுவெடிப்பால் கிளிநொச்சி அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது கிடைக்கப்பெறவில்லை.

03. 10. 2009: பிரித்தானிய தொழிற்கட்சி தமிழர்களை ஏமாற்றுகிறதா?

பிரித்தானியத் தொழிற் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய தமிழரான சென் கந்தையா அவர்கள் பிரித்தானியாவில் மூன்று இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் எல்லோரும் தொழிற்கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்றும் கூறினார். பதினொரு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் தொழிற்கட்சி தமிழர்களுக்கு என்னசெய்தது?

14. 09. 2009: விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்?

முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

30. 08. 2009: ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்: மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்

இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும்  முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

29. 08. 2009: களத்தில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளாகிய நாம் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றோம் – தளபதி ராம் அறிவிப்பு

29/08/2009 அன்று தளபதி ராம் அவர்கள் அனுப்பிவைத்த அறிக்கையொன்று கிடைக்கப்பெற்றது. அவ்வறிக்கையில் களத்தில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகள் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்கள் என ராம் அவர்கள் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையின் முழுப்பிரதி பின்வருமாறு:

28. 08. 2009: சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தல்

பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்ட, சிறிலங்கா அரச படைகளின் படுகொலை தொடர்பான காணொலி தொடர்பாக சிறிலங்கா மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சமாதான சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.

26. 08. 2009: (காணொளி) இலங்கை இனவாதிகளின் தமிழினப் படுகொலையின் கொடுரம்

சிறுவர்கள், வயோதி முதிர்ந்தவர்கள் மற்றும் மனதளவில் தையிரியம் இல்லாதவர்கள் தயவு செய்து இதைப் பார்க்க வேண்டாம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டு விட்டோம் என்று சிறீலங்கா அரசாங்கம் அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், வெளிவந்துள்ள காணொளியானது சிறீலங்காப் படையினரிடம் அகப்பட்டுள்ள தமிழர்களை சிறீலங்கா அரசாங்கம் படுகொலை செய்கின்றது என்பதை உறுதி செய்துள்ளது.

26. 08. 2009: எம் தமிழீழ மக்களுக்காக…..வணங்கா மண்ணிலிருந்து அடங்கா தமிழன்

ஓர் குறுகிய இடைவெளிக்குப் பின்பு உங்களை ஓர் ஒலிப்பேழயின் வழியாக சந்திப்பதையிட்டு எமது தலைவனின் வழியில் உருவான தமிழன் என்ற ரீதியில் சற்று ஆறுதல் அடைகின்றேன்.

25. 08. 2009: தமிழீழ வான் படையின் உருவாக்கம்

விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.
பக்கம் 71, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...6970717273...80...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.