முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 8, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...678910...203040...இறுதிப்பக்கம் »

04. 03. 2011: நாடுகடந்த தமிழீழ அரசை குழப்ப முயலும் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்!

குதிரையை ஆற்றுக்கு இட்டுச் செல்லலாம். ஆனால் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது. நாகதஅ க்கு தேர்தலில் போட்டி போட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள் முதலில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும். நிறைவேற்றாத யாப்புக்கு எப்படி உறுதிமொழி எடுக்கலாம் என்பது விதண்டாவாதம். சரி பாதிக்கு மேலான உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துவிட்டார்கள்.

04. 03. 2011: நாடு கடந்த அரசாங்கத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோள்!!

அன்புடையீர்! நாடு கடந்த தமிழீழ  அரசாங்கத்தின் கருப்பொருளை முற்று முழுதாகவும், உன்னதமாகவும் உள்வாங்கி, தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு, தமிழீழ தேசத்தின் விடுதலையை சனநாயகப் பாதையில் வென்றெடுக்கும் உறுதியுடன் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், மக்களது தெரிவு மறுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் சனநாயகப் பண்புகளிற்கு மாறாக பின்வரும் கோரிக்கைகளை பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் உங்களிடம் முன்வைக்கின்றோம்.

02. 03. 2011: செந்தமிழன் சீமான் உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் பத்திரிக்கை நிறுவனத்திற்கு நேற்று ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அக்கடிதம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வண்ணம் வாசாகங்கள் இடம்பெற்றிருந்தது.

02. 03. 2011: தமிழீழத்திற்கான செயற்பாட்டில் மலினப் பிரச்சாரங்களை தவிர்ப்போம் – நா.க. அரச சபாநாயகர்

தமிழீழத் தனியரசு என்ற தேசியத் தலைவரின் இலட்சியக் கனவிற்கான பாதைகளில் ஒன்றாகத் தோற்றம் பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசு செய்ய வேண்டிய பணிகளின் வேகம் அதிகரிக்கப்பட்டு நாங்கள் எங்கள் இலக்கை அடைவதற்கு இப்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மலினப்பிரச்சாரங்கள் பாரிய தடைக்கற்களாகவே அமையும் என நாடு கடந்த அரசின் சபாநாயகர் திரு. பொன் பாலராஜன் தெரிவித்துள்ளார்.

01. 03. 2011: ஊடகர்களுக்கு இராணுவத்தினர் சுடர் ஏற்றியமை பெருமைக்குரிய விடயம் என்கிறார் சரவணபவன்! முரண்பட்ட கருத்துக்களுடன் உதயனும் நிர்வாகியும்!!

உதயனின் வெள்ளிவிழாக் கொண்டாட்டமும் அதன் பின்னர் அது எதிர்கொண்ட ஊடக எதிர்ப்பலைகளும் அணைந்துவிடக்கூடாது என்று கருதுவதாலோ என்னவோ உதயனே அதனைப் புதுப்பித்துக் கொள்ள எத்தனிப்பதாக எண்ணத் தோன்றும் வகையில் சம்பவங்கள் நிகழ்ந்தேறியே வருகின்றன.

26. 02. 2011: அனைத்துலக தொடர்பகத்தின் ஏற்பாட்டில் கண்ணீர் வணக்கமும் களியாட்ட நிகழ்வும்!!

மக்களே உடனே தடுத்து நிறுத்துங்கள் .எமது தேசத்தின் பேரன்னையின் இழப்பால் தமிழினம் துயருற்றிருக்கின்றது. சொந்த மண்ணிலே எங்கள் அன்னையின் இறுதிவணக்க நிகழ்வை நடாத்தமுடியாதளவுக்கு பல நெருக்கடிகளை கொடுத்த எதிரியானவன்   இறுதியில் பேரன்னையை எரியூட்டிய சிதையை சிதைத்தழித்து தனது இன வெறியை வெளிப்படுத்தியிருக்கின்றான். 

26. 02. 2011: தமிழீழ நாடு கடந்த அரசை கவிழ்க்க சதி!

தமிழீழத் தேசியத் தலைவரின் விருப்பை அடைவதற்காக மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தேசியம் சார்ந்தோர் என தம்மை தாமே அடையாளப்படுத்தப்பட்ட நபர்களினால் அடைந்த துன்பம் அளப்பரியது. நாடு கடந்த அரசு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதன் செயற்பாட்டை முடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்ட சிங்கள அரசின் திட்டமிட்ட சதிக்கு துணை போன குழுவினர் நாடு கடந்த அரசின் இரண்டாம் அமர்வின் போது மக்களால் இனங்காணப்பட்டனர்.

25. 02. 2011: (காணொளி) என் தாய்க்கு மகனாக இருந்து எரியூட்டினாய்; தமிழீழ தலைவா உன் தாய்க்கு நான் என்ன செய்தேன்?

என் தாய்க்கு மகனாக இருந்து நீ எரியூட்டினாய்; தமிழீழ தலைவா உன் தாய்க்கு நான் என்ன செய்தேன்? கண்ணீருடன் காசி ஆனந்தன் இரங்கல் கூட்டத்தில்  உரை.

25. 02. 2011: உதயனின் விளக்கத்திற்கு; யாழிலிருந்து முன்னாள் ஊழியரின் எதிர்ப்பு விளக்க மடல்

உதயன் நாளிதழ் தனது வெள்ளிவிழா நிகழ்விற்கு இராணுவத்தரப்பை அழைத்தது சரியென நியாயப்படுத்தியுள்ள அறிக்கையை வாசித்து அதிர்ச்சியுற்றவர்களில் நானுமொருவன். எத்தனையோ அளப்பரிய தியாகங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உதயன் நாளிதழ் இப்படியான கீழ்த்தரமான செயலைச் செய்யுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது அதுசரியென விளக்கியுமுள்ளீர்கள். இதன்மூலம் யாழ்ப்பாண சமூகத்தை பிழையான வழியில் நடத்திச் செல்ல விளைகின்றீர்கள்.

25. 02. 2011: மதபோதகர்கள் மூவர் பிள்ளையானின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் சிறைப்பிடிப்பு!

மட்டக்களப்பில் வெள்ளநிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மதபோதகர்கள் மூவர் பிள்ளையான் குழுவினரால் அழைக்கப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பக்கம் 8, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...678910...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.