முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 88, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...8485868788

25. 02. 2009: வன்னியில் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் கொலைவெறித் தாக்குதல்: 22 தமிழர்கள் படுகொலை; 41 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் இன்றும் 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.

25. 02. 2009: தொடரும் தமிழின அழிப்பு: பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் வன்னியில் செவ்வாய்க்கிழமை 21 தமிழர்கள் படுகொலை; 53 பேர் காயம்

வன்னியில் சிறிலங்கா படையினர்  நடத்திய பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 53 காயமடைந்துள்ளனர்.மாத்தளன் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது  செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

24. 02. 2009: அரசாங்கமும் புலிகளும் பேச்சு நடத்தவேண்டும் – அமெரிக்கா அவசர கோரிக்கை

இலங்கையில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அதிகாரி ரொபேர்ட் உட் கூறுகையில், அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்துவதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

23. 02. 2009: தொடர்ந்தும் கொலைப் பொறியாகும் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’: 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை

வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

23. 02. 2009: “சொந்த நிலத்தில் நிம்மதியாய் வாழ வழி செய்யாமல் தமிழர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் மேற்குலகம்

அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

21. 02. 2009: “விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்”: வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்

சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர். "தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

21. 02. 2009: சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்

சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

20. 02. 2009: கொழும்பில் புலிகளின் விமான தாக்குதல்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளன. புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9:30 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

01. 02. 2009: புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகள் ஊடறுப்புத் தாக்குதல்: 150 படையினர் பலி; 350 பேர் படுகாயம்; 3 டாங்கிகளும் துருப்புக்காவியும் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்க தயாராக இருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஊடறுப்பு பதிலடி தாக்குதல்களை நடத்தி பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதில் 150-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 350-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 3 டாங்கிகள் மற்றும் துருப்புக்காவி உள்ளிட்ட பெருமளவிலான வாகனங்கள் விடுதலைப் புலிகளால் முற்றாக தாக்கியழிக்கப்பட்டுள்ளன.
பக்கம் 88, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...8485868788
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.