முக்கிய செய்திகள் – மின்னஞ்சல்

பக்கம் 9, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...7891011...203040...இறுதிப்பக்கம் »

25. 02. 2011: இதுவரை உறுதிமொழி எடுத்துக் கொள்ளாத மதிப்பிற்குரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்க அவை உறுப்பினர்கட்கு ஓர் அவசர வேண்டுகோள்!!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதவி ஏற்று 4 மாதங்கள் முடிவடைகின்றன. தமிழீழ தாயகத்தை மீள உருவாக்குவதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பல பணிகளைத் துரிதமாகச் செய்ய வேண்டி இருக்கின்றது. எமக்கு முன்னால் இருக்கக் கூடிய பாரிய கடமைகளும் பொறுப்புக்களும் எமக்கு வாக்களித்து மக்கள் எமக்குத் தந்த பொறுப்புக்களும் எமக்கு முன்னே இருக்கின்றது.

24. 02. 2011: நெருடல், சரிதம் உட்ப்பட தமிழ்த் தேசிய இணையத் தளங்களில் உதயன் பற்றி வெளிவந்த விமர்சனத்திற்கு உதயன் நிர்வாகம் பதில் அளித்துள்ளது

உதயன் தனது இருபத்தைந்தாவது நிறைவு விழாவைக் கொண்டாடி பூரிப்புடன் தன் ஊடகப் பயணத்தில் முசெல்லும் நேரிய பணியில் நிமிர்ந்து நிற்கிறது. நெருக்கடிகள் மேல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்த போதிலும்  உதயன் தொடர்ந்தும் தேசியத்தின் குரலாக திடசங்கற்பத்துடன் நடைபயின்று வந்தது. இன்னும் நடைபயிலும்.

23. 02. 2011: முன்னாள் போராளிகளின் எதிர்காலமும் புலம்பெயர் சமூகத்தின் பாராமுகமும்

முன்னாள் போராளிகள் என்றதும் முதலில் முன்னர் படித்த நாவலொன்றின் சம்பவங்களே நினைவுக்கு வருவதுண்டு. அது உலகப்புகழ்பெற்ற கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ எழுதிய 'சிலுவையில் தொங்கும் சாத்தான்' (Devil on Cross). அது கென்ய விடுதலைப் போராட்ட அனுபவங்களை சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல்.

23. 02. 2011: பார்வதி அம்மாளின் சிதையின் மீது நாய்களைப் போட்டுக் கொழுத்தியது காட்டுமிராண்டி இனவாதிகளின் இராணுவம்!

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயாரின் சிதையின் மேல் நாய்களைப் போட்டுக் கொழுத்திய மிகக் கீழத்தரமான செயற்பாட்டில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கின்றனர்.  வல்வெட்டித்துறை ஊரணியில் உள்ள இந்து மயானத்தில் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளின் புகழுடல் நேற்றைய நாள் தகனம் செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் இன்று காலை அவரது சிதையில் இருந்து அஸ்தி எடுப்பதற்காக அவரது உறவினர்கள் சென்றிருக்கின்றனர்.

22. 02. 2011: (2ம் இணைப்பு) ஈழத்தாய் பார்வதி அம்மாளின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது உள்ளுர்,தமிழக அரசியல்வாதிகள் இரங்கல் உரை

தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் ஈழத்தாய் பார்வதி அம்மாளின் பூதவுடல் இன்று மாலை 4.50 மணியளவில் அக்கினியுடன் சங்கமித்தது. அமரர் வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர் சங்கரநாரயணன் சிதைக்குத் தீ மூட்டினார்.   ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட அன்னாரது பூதவுடல் தேசியத் தலைவரின் வல்வெட்டித்துறை வீட்டுக்கு முன்னால் பத்து நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்ததாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

21. 02. 2011: வெள்ளிவிழாவில் ஒட்டு மொத்த தமிழீழத்துக்குமே கறை பூசிய ‘உதயன்’ நாளிதழ்!

உலகத் தமிழினத்திற்கு முகவரி தந்த வீரத் தலைவனை ஈன்றெடுத்த தேசத் தாய் வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் அவர்களின் பிரிவு தமிழ் மக்களின் மனத்தில் ஆறாத துயரத்தினைத் தந்திருக்க யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து தமிழ் தேசிய ஊடகம் ஆண்டு நிறைவினை கொண்டாடி பூரித்திருக்கின்ற அவலமும் நிகழ்ந்தேறியிருக்கின்றது.

08. 02. 2011: புலம்பெயர் தமிழீழ மக்களுக்கு விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம் விடுக்கும் அறிக்கை

தலைமைச் செயலகம், தமிழீழம். 08/02/ 2011. அன்பார்ந்த தமிழ் மக்களே, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ஆயுதங்களை மெளனிக்கின்றோம் என்ற எமது அறிவிப்புக்கு ஏற்ப தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அமைதிகாத்து வருகின்றோம்.

08. 02. 2011: தமிழர் மைய கருத்தரங்கம் – முழுமையான காணொளி தொகுப்பு

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் இடம்பெற்ற; நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்? தமிழர் மைய கருத்தரங்கத்தில் இடம்பற்ற அனைத்து உரைகளினதும் காணொளிகள் நெருடலுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. புலம்பெயர் தமிழர்களுக்காக அங்கு இடம்பெற்ற உரைகளின் முழுமையான தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

08. 02. 2011: உங்களுடைய தமிழீழ தேசிய அடையாள அட்டையை இன்றில் இருந்து இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்!

அன்பான தமிழீழ மக்களே, தமிழீழ தேசிய அடையாள அட்டை கடந்த பொங்கல் தினத்திலிருந்து  (ஜனவரி 14, 2011 ) எம்மால் வினையோகிக்கப்படுகின்றது.  ஆனால் அன்று எல்லா புலம்பெயர்ந்த  தமிழர்களாலும்  அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவரும் அதனை பெற்றுக்கொள்ள வசதியாக இணையதடதளத்தில் அவ் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம்.

08. 02. 2011: இடமாற்றம் செய்து தருவதாகக் கூறி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பணமோசடி! – சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை அச்சுறுத்தல்!

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பைச் சேர்ந்தவருமான துரை என்றழைக்கப்படும் இராசையா துரைரத்தினம். மாகாணசபைக்குள் இடமாற்றங்களைச் செய்வதற்காக ஓருவரிடம் தலா 50ஆயிரம் ரூபாய் வீதம் 15பேரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ள சம்பவம் ஒன்று அம்பலத்திற்கு வந்துள்ளது.
பக்கம் 9, மொத்தம் 88 பக்கங்கள்« முதல்பக்கம்...7891011...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.