விசேட செய்தி

பக்கம் 1, மொத்தம் 137 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

23. 05. 2012: மக்களுக்கு அறிவூட்டி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முயற்சிப்பேன்: சரத் பொன்சேகா

தாம் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதால், தம்மால் தேர்தலில் போட்டியிட முடியாது. வாக்களிக்க முடியாது. எனினும் தமக்கு அரசியலில் ஈடுபடமுடியும் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

22. 05. 2012: தனது ஒரே இலக்கு சிறீலங்கா அரசாங்கத்தை கவிழ்ப்பதாகும் – விடுதலையாகிய சரத் பொன்சேகா

தனது ஒரே இலக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதாகும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொன்சேக்கா விடுதலை செய்யப்படுவதை முன்னிட்டு, மகிழ்ச்சி தெரிவிக்கும் நோக்கில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

21. 05. 2012: சரத் பொன்சேகாவுக்கு இன்று விடுதலை: வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

20. 05. 2012: புலிகளுக்கு எதிராக கோத்தபாய இந்தியாவை இழுத்தது எப்படி? “கோத்தாவின் யுத்தம்” விபரிக்கிறது

விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையில் சாமர்த்தியமாக இந்திய அரசைச் சேர்த்தது எப்படி என்பதையும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கியப் பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விவரிக்கிறது.

19. 05. 2012: இலங்கை மக்களின் சுதந்திரமான நாளாம். மே 19: டி.எம். ஜயரட்ன

படைவீரர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டுமாயின் சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது. அந்தவகையில், ஒட்டுமொத்த இலங்கை மக்களின் சுதந்திரமான நாளாக மே 19 அமைந்துள்ளது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

18. 05. 2012: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – உலகத் தமிழர் பேரவை கூட்டறிக்கை

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில், சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நா.க.த. அரசும், உ.த.பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது.

17. 05. 2012: புலத்துக்கும் நிலத்துக்கும் உறவுப்பாலம் அமைப்போம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழீழத் தாயகம் நோக்கிய சிற்றலையூடான(short-wave)  வானொலி ஒலிபரப்பு12 250 mhzஎனும் அலைவரிசையூடாக ஒலிக்கவுள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

17. 05. 2012: மன்னார் ஆயரின் பாதுகாப்பு குறித்து ஆசிய மனித உரிமைகள் அமைப்பு கரிசனை

மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பு குறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தமது கவனத்தை செலுத்தியுள்ளது.

16. 05. 2012: காலிமுகத்திடலில் இடம்பெறும் யுத்தம் வெற்றி கொண்டாட்டம்!

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இம்மாதம் 18ஆம் திகதியுடன் மூன்று வருடங்களாகின்றன. இதற்கான வெற்றிக் கொண்டாட்ட ஏற்பாடுகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.

15. 05. 2012: தெரிவுக்குழுவில் பங்கேற்க கூட்டமைப்பு விதிக்கும் நிபந்தனைதான் என்ன?-திஸ்ஸ விதாரண

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் கூட்டமைப்பு சில நிபந்தனைகளுடன் பங்கேற்க தயார் என தெரிவித்துள்ளதால் அவர்களின் நிபந்தனை என்ன? அதனை தெரிந்துகொள்ள விரும்புகின்றோம் என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்
பக்கம் 1, மொத்தம் 137 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.