சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரரணையின் அவசியத்தை வட தமிழீழத்தின் கத்தோலிக்க சபையின் 31 குருவினர் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா, சிறிலங்காவின் எதிரியல்ல. ஜெனிவாவில் என்ன நடந்தாலும், இருநாடுகளுக்கும் இடையிலான நல்ல உறவுகள் தொடரும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் இன்னமும் கலந்துரையாடலில் இருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை தீர்மானித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் மேற்கு நாடுகளின் சவால்களை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது. அர்த்தம் உள்ளதும் நடைமுறையில் சாத்தியப்படக் கூடியதுமான உத்திகளை கையாளவேண்டுமே தவிர உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் எவ்விதமான பயனும் கிடைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர தெரிவித்தார்.
தற்போது நிலவும் நிலையற்ற நிலைமை தொடரு@மயா னால் அது வன்றைக்கு வித்திடும். குடிமக்கள் அதனால் மீண்டும் பாதிக்கப்படலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்வதாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது அமர்வு தொடர்பாக அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவிடம் கையை விரித்து விட்டார்
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் சமர்ப்பிக்கப்படுவதற்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது
போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார்.