விசேட செய்தி

பக்கம் 124, மொத்தம் 136 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...122123124125126...130...இறுதிப்பக்கம் »

14. 04. 2009: 48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்?

மகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

14. 04. 2009: தாக்குதல்களை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தப்போவதில்லை: கோத்தபாய திட்டவட்டமாக அறிவிப்பு

வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.

13. 04. 2009: தனது தாக்குதல் மட்டுப்படுத்தல் அறிவிப்பை தானே முறித்துக்கொண்ட சிறிலங்கா: அதிகாலை முதல் தாக்குதலில் 37 தமிழர்கள் படுகொலை; 112 பேர் படுகாயம்

புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுபாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர்.  நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 7:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

13. 04. 2009: மகிந்தவின் மனிதாபிமான தமிழின கருவழிப்பு

உலகில் எங்குமே நடைபெற்றிராத மிகக் கொடூரமான இனப்படுகொலையை சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொண்டு வருகின்றது.  இந்த இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்., பலர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் கர்ப்பிணிப் பெண்கள் படுகாயமடைந்து அவர்களின் வயிற்றில்--படங்கள்  கோரமானவை இருந்து சிசுக்கள் வெளியே வரும் பரிதாப நிலை உலகில் எங்குமே யாருமே கண்டிருக்க முடியாதவை.

11. 04. 2009: புலிகளின் செயற்பாடுகளை ஆராய இந்தியா செய்மதி ஏவவுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் இந்தியா விசேட செய்மதியொன்றை ஏவவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்காக இந்தியா செய்மதியொன்றை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11. 04. 2009: தமிழ் மக்களின் பிணத்தின் மீது தேர்தல் கூத்தாடும் பாயும் புலி பண்டாரவன்னியன் கருணா(நிதி)

தமிழ் மக்களின் பிணத்தின் மீது தேர்தல் கூத்தாடும் பாயும் புலி பண்டாரவன்னியன் கருணா(நிதி)

11. 04. 2009: பொறுக்கி கருணாநிதி தமிழ்நாட்டு விடுதலை படை

இலங்கையில் நடைபெறும் சண்டையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால், போரஸ் மன்னரை அலெக்ஸாண்டர் நடத்தியதைப் போல கெளரவமாக நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று தெரிவித்திருந்தார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டு விடுதலை படை இயக்கத்தினர்.

10. 04. 2009: உண்ணாநிலைப் போராட்டத்தில் இருப்பவரில் ஒருவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்கிறது பிரித்தானிய அரசு

பிரித்தானியாவில் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருப்பவர்களில் ஒருவரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பிற்கு எதிர்வரும் புதன்கிழைமை அழைத்துச் செல்ல பிரித்தானிய அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

09. 04. 2009: பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்னால் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் பரமேஸ்வரன், சிவா உலகுக்கு வெளியிட்ட அறிக்கை

பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்னால் நீர் கூட அருந்தாமல் கடைசி மூச்சிருக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளும் பரமேஸ்வரன், சிவா உலகுக்குச் வெளியிட்ட அறிக்கை. எங்கள் அன்பான தமிழீழ மக்களே, இது தமீழீழம் மலருவதற்கான நேரம். தனித்தமிழீழம் மலர்ந்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை. எங்கள் அண்ணன் தியாக தீபம் திலீபன் அண்ணா வழியில் மீண்டும் உலகிற்கு உணர்த்துவோம். நாம் என்றும் அமைதியான நிலையான நிரந்தரமான சமாதானத்தை மட்டுமே விரும்புகிறவர்கள். தமிழர்கள் என்றுமே எவருக்கும் எந்த நாட்டினருக்கும் எதிரிகளாக இருந்ததில்லை.

09. 04. 2009: பிரபாகரன் மீது துரும்பு விழுந்தால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்: வைகோ

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளதுடன் விடுதலைப் புலிகளை எவரும் அழிக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார்.
பக்கம் 124, மொத்தம் 136 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...122123124125126...130...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.