சிறிலங்காவின் தென்பகுதியில் நேற்று வீசிய சூறைக்காற்றுக்கு 12 பேர் பலியாகியுள்ளதுடன் 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் கடும்காற்றினால் சேதமடைந்துள்ளன.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படாவிட்டால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த அச்சுறுத்தலை அமெரிக்கா விடுத்துள்ளதாக தெ ஐலன்ட் செய்திதாள் தெரிவித்துள்ளது
சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தற்போதும் சம உரிமையைக் கொண்டுள்ள குடிமக்களாகக் கருதப்படவில்லை. இவர்கள் தமது கௌரவத்தையும் சுயமரியாதையையும் இழந்து வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்
வரவு செலவுத் திட்டதை பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை எவ்விதமான குழப்பங்களையும் விளைவிக்காது கேட்டுக் கொண்டிருந்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்தார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2012 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை அங்கீகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை காலை ஜனாதிபதி தலைமையில் அலரிமாளிகையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கின்றது
சிறிலங்கா அதிபரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்
மேஜர் தரத்துக்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 100 வரையான சிறிலங்காப் படையினரை போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தண்டிக்கவுள்ளது.
ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்மானித்து 36 மாத கால சிறைத் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் பிறந்த தினத்தையொட்டி, தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 680 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப் பகிர்வு குறித்து டிசெம்பரில் 4 கட்டப் பேச்சு;அரசு-கூட்டமைப்பு நேற்றைய சந்திப்பில் இணக்கம் முக்கிய விடயங்கள் சிலவும் இனங்காணப்பட்டன