சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்திய ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி சிறிலங்கா அரசுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அனைவரும் விடுதலைப் புலி ஆதரவாளர்களோ அல்லது பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர்களோ அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொண்டு தேசியப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயக் கட்டிடம் இனந்தெரியாதோரினால் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு தனிஈழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி சபதம் எடுத்துள்ளார்.
மனித உரிமைகள் பாதுகாக்கும் அக்கறையுடன் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை மீண்டும் ஜெனிவாவில் கொண்டு நடத்த முயற்சிக்கலாம். மார்ச் அல்லது ஜூன் அல்லது ஒக்டோபர் மாதங்களில் இவ்வாறு முயற்சிக்கலாம் என்று மனித உரிமைகள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவரான மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
வரலாற்றுப் புகழ்மிக்க ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் சமய புனிதஸ்தலம் சம்பந்தமான பிரச்சினை தொடர்பில் உயிரைப் பணயம் வைத்தாவது பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பதற்கு எமது அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் தி.மு. ஜயரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அந்நாட்டு அரசு அமைக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் சேர தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துவிட்டது. இந்தக் குழுவில் சேர வேண்டும் என்று இந்திய எம்.பி.க்கள் குழுவினர் விடுத்த கோரிக்கையை கூட்டமைப்பு நிராகரித்து விட்டது.
வடக்கில் இருந்து சிறிலங்காப் படைகளை வெளியேற்றக் கோருவது நியாயமற்றது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியக் குழுவினரிடம் கூறியுள்ளார்.
ஈழத் தமிழர் நிலையை அறிய இந்தியா அனுப்பிய இரண்டாவது எம்.பி-க்கள் குழு இப்போது இலங்கையில் இருக்கிறது. பொதுவாக எந்தக் குழுவும் போய்விட்டு வந்த பின்னர்தான் சர்ச்சையும் விவாதங்களும் வரும். ஆனால், இந்தக் குழுவை அமைத்தது முதலே சர்ச்சைகள்தான்.