சிறிலங்காவுடனான கடல் எல்லை மற்றும் கிழக்கு கடற்பரப்பின் மீது கண்காணிப்புகளை தீவிரப்படுத்துவதற்காக, புதிய ஆளில்லா உளவு விமான அணியொன்றை இந்தியா - சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக - உச்சிப்புளியில் நிறுவியுள்ளது.
இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்திய அரசியல் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாகவும், எமது உள்நாட்டு பிரச்சினைகளை கண்காணிப்பதற்கு எமக்கு எதிராக இந்தியாவிற்கு இடமளிக்க முடியாதென்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.
கிரிபத்கொடவில் வைத்து கடத்தப்பட்ட முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிறேம்குமார் குணரட்ணம் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நா அமைப்பின் பங்கு பணிகள் குறித்து மீளாய்வு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளதாக, ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா வதிவிடப் பிரதிநிதி தாமரா குணநாயகம் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளை-கல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
நாட்டின் அடையாளத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்தோம். எமக்கென தனித்துவமொன்று இருக்கிறது என்பதுடன் நாட்டின் அடையாளத்திற்கு பிரச்சினை ஏற்படின் மேற்குலகத்திலிருந்து அல்ல எங்கிருந்து அழுத்தம் வந்தாலும் அடிபணியோம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்மக்களை 60 ஆண்டுகளாக ஏமாற்றியது போன்று அனைத்துலக சமூகத்தை உங்களால் ஏமாற்ற முடியாது என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்த, இரண்டு நாள் சிறப்பு விவாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது.