முள்வேலிக்குள் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம்: வீரமணி உள்பட 500 பேர் கைது

kveeramani3 லட்சம் இலங்கை தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உணவு, உடை இல்லாமல் அவதிப்படுவதை கண்டித்தும் அவர்களை விடுவிக்கக்கோரி திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் ரெயில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.
 
இதற்காக திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி தலைமையில் பெரியார் திடலில் திராவிடகழகத்தினர் ஏராளமானோர் திரண்டனர். கருஞ்செட்டை தொண்டர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தடையை மீறி வீரமணி, தலைமையில், பொருளாளர் சாமிதுரை, பொதுச்செயலாளர்கள் கலி பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணை பொதுச்செயலாளர்கள் குணசேகரன், துரை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் புறப்பட்டனர்.
 
ஈ.வி.கே. சம்பத்சாலையில் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கி. வீரமணி மற்றும் சுப. வீரபாண்டியன், ஜனார்த்தனம் உள்பட 500 திராவிட கழகத்தினர் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு வேப்பேரி பவுல் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு சென்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.