எமது ஜனாதிபதிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட பிள்ளையானுக்கு என்ன அருகதை உள்ளது – கருணா(ய்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிரான வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தேச நிர்மான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு இட்டுச் செல்லும் வகையிலான கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.
 
அநாவசியமான கூற்றுக்களின் மூலம் கிழக்கு மாகாண அரசியலில் குழப்ப நிலை ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
தனியான அரசியல் கட்சி ஒன்றை அமைக்கும் திட்டம் தமக்கு இல்லை எனவும், சகல சமூகங்களுடனும் இணைந்து செயற்படவே தாம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சகல சிறுபான்மை கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள வேண்டுமென கருணா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
கிழக்கு மாகாண அரசியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.