வெளிநாட்டு அழுத்தங்களுக்கு ஏற்ற வகையில் சமாதானத் தீர்வினை முன்வைக்க முடியாது – பாலித கொஹணே

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு ஏற்ற வகையில் சமாதானத் தீர்வுத்திட்டங்களை முன்வைக்க முடியாதென முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு உரித்தான அணுகுமுறைகளை பின்பற்றியே தேசிய இனப்பிரச்சினைகான சமாதானத் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை நிலைநாட்டல் என்ற தலைப்பில் பாங்கொக்கில் நடைபெற்ற விசேட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
வேறும் சக்திகளினால் கோரப்படும் சமாதானம் இலங்கைக்கு பொருந்தாது எனவும், இலங்கைக்கு பொருத்தமான சமாதானத் தீர்வுத் திட்டம் உள்நாட்டு அடிப்படையில் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.